சித்த மருத்துவ குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 07, 2012 4:22 am

மலச்சிக்கல்:
செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 07, 2012 4:28 am

கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.


:coff:

வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:27 am

முகத்தை அழகாக்கும்:
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:28 am

நினைவாற்றலைத் தூண்ட:
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:28 am

நீரிழிவு நோய்:
இன்று நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:29 am

அருமருந்தான அருகம் புல்....
இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:31 am

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.


சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.



ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Wed Apr 11, 2012 12:24 pm

Oattakaran wrote:கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.


:coff:

வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.

காடி நீர் என்றால் என்ன?
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Thu Apr 12, 2012 3:57 am

muthulakshmi123 wrote:காடி நீர் என்றால் என்ன?
எனக்கு தெரியவில்லை நேற்று என்னுடைய நண்பன் ஒருவன் இந்த டிப்ஸ் சொன்னான் அதனால் அதை பதிவிட்டேன்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Thu Apr 12, 2012 3:58 am

மூச்சுப்பிடிப்பு:

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”