சித்த மருத்துவ குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Tue Apr 03, 2012 4:43 am

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Tue Apr 03, 2012 7:22 am

Oattakaran wrote:நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும்.

தேனை அருந்தவும் சிலர் காரனம் சொல்கிறார்கள்..காலையில் வெந்நீரில் கலந்து தேன் சாப்பிட்டால் உடல் மெலியுமாம், இரவில் தண்ணிரில் சாப்பிட்டால் உட ல் குண்டாகுமாம்...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by umajana1950 » Tue Apr 03, 2012 11:14 am

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
வறட்டு இருமலுக்கு தேன் ஒரு சிறந்த மருந்து. உடனே இருமல் நிற்கும். ஆனால் தேன் குடித்து அரை மணி நேரத்திற்கு தண்ணீர் அருந்தக் கூடாது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 04, 2012 4:10 am

மருத மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை 3 நாட்கள் குடித்துவர பித்தவெடிப்பு குணமாகும்.

:coff:

மருதம் பழத்தை நீராவியில் அவித்து பிசைந்து புண்களின் மீது வைத்து கட்டிவர கொடிய புண்களும் ஆறிவிடும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 04, 2012 4:11 am

முகம் பளபளக்க:
அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.
அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.
அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 04, 2012 4:12 am

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 04, 2012 4:13 am

சுகப் பிரசவத்திற்கு

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Wed Apr 04, 2012 4:16 am

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by umajana1950 » Wed Apr 04, 2012 11:23 am

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
நமது சித்தர்கள் உணவே மருந்து; மருந்தே உணவு என்ற சித்தாந்தத்தில் தான் இவ்வளவு விஷயங்களையும் எளிமையாக் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறியத் தந்தமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Thu Apr 05, 2012 3:39 am

umajana1950 wrote:நமது சித்தர்கள் உணவே மருந்து; மருந்தே உணவு என்ற சித்தாந்தத்தில் தான் இவ்வளவு விஷயங்களையும் எளிமையாக் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறியத் தந்தமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.
நன்றி உமாஜனா அவர்களே
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”