சித்த மருத்துவ குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sun Apr 15, 2012 4:31 am

அத்திப்பழம் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் விளாம்பழம் சாப்பிட்டது இல்லை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா முத்துலட்சுமியம்மா?
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sun Apr 15, 2012 4:36 am

பன்மொழிப் பெயர்கள்:
சீரகத்திற்கு ஆங்கிலத்தில் "குமின்" (Cumin) என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, கார்மீரியில் ஜையுர் என்று பெயர்.
பெயர் வந்த விதம்:
நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூஅகம்-சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.
சத்துப் பொருட்கள்:
நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம் 2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம், வைட்டமின் ஏ 175 ஐ.யு.
பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sun Apr 15, 2012 4:39 am

கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sun Apr 15, 2012 12:47 pm

Oattakaran wrote:அத்திப்பழம் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் விளாம்பழம் சாப்பிட்டது இல்லை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா முத்துலட்சுமியம்மா?
இல்லை சுந்தர்
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by sumayha » Tue Apr 17, 2012 7:11 pm

muthulakshmi123 wrote:
Oattakaran wrote:அத்திப்பழம் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் விளாம்பழம் சாப்பிட்டது இல்லை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா முத்துலட்சுமியம்மா?
இல்லை சுந்தர்
நான் சாப்பிட்டு இருக்கேன்..... விளாம்பழ ஓடை உடைத்து அதில் பனை வெல்லம் கலந்து சாப்பிட உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by umajana1950 » Tue Apr 17, 2012 8:26 pm

அத்திப்பழம் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் விளாம்பழம் சாப்பிட்டது இல்லை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா முத்துலட்சுமியம்மா?
ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கிடைக்கக் கூடிய நல்ல பழம். விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை காலங்களில் இது பெரும்பாலும் கிடைக்கும். இது பற்றி ஒரு குட்டிக் கதையே இருக்கிறது.

யானை விளாம்பழத்தை அப்படியே விழுங்குமாம். அந்த விளாம்பழம் யானையின் பின் வழியே வெளியே வந்து விழும் போதும் முழு பழமாகத் தான் இருக்குமாம். ஆனால், உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இருக்காதாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Wed Apr 18, 2012 11:14 am

umajana1950 wrote:
அத்திப்பழம் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் விளாம்பழம் சாப்பிட்டது இல்லை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா முத்துலட்சுமியம்மா?
ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கிடைக்கக் கூடிய நல்ல பழம். விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை காலங்களில் இது பெரும்பாலும் கிடைக்கும். இது பற்றி ஒரு குட்டிக் கதையே இருக்கிறது.

யானை விளாம்பழத்தை அப்படியே விழுங்குமாம். அந்த விளாம்பழம் யானையின் பின் வழியே வெளியே வந்து விழும் போதும் முழு பழமாகத் தான் இருக்குமாம். ஆனால், உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இருக்காதாம்.

இந்த கதைய கேள்வி பட்டதே இல்லை ..நன்றி உமா
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Mon Apr 23, 2012 2:11 pm

Postby Oattakaran » Wed Apr 04, 2012 4:12 am
கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது


சுந்தர் கல்லடைப்பை எது நீக்கும் என தெளிவாக குறிப்பிடபடவில்லையே? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்..
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Tue Apr 24, 2012 4:48 am

muthulakshmi123 wrote:ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது
வாழை மிகவும் மகத்துவமான மருத்துவ குணம் கொண்டது

அதில் உள்ள வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டு இந்த இரண்டும் மேற்கூறிய நோய்களை நிவர்த்தி செய்யும் மருத்துவகுணம் கொண்டது.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”