ஒப்பனை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Apr 06, 2012 4:24 am

சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Apr 06, 2012 4:25 am

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.


:coff:


ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Apr 06, 2012 4:26 am

வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Fri Apr 06, 2012 4:27 am

முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sat Apr 07, 2012 4:37 am

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sat Apr 07, 2012 4:38 am

அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sat Apr 07, 2012 4:39 am

முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by muthulakshmi123 » Sat Apr 07, 2012 1:38 pm

Oattakaran wrote:முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
இது ரொம்ப நல்லா இருக்கே...எளிதில் பின் பற்றலாம்..
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sun Apr 08, 2012 5:09 am

குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
வெட்டி வேர் - 200 கிராம்
அகில் கட்டை - 200 கிராம்
சந்தனத் தூள் - 300 கிராம்
கார்போக அரிசி - 200 கிராம்
தும்மராஷ்டம் - 200 கிராம்
விலாமிச்சை - 200 கிராம்
கோரைக்கிழங்கு - 200 கிராம்
கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்
பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.
இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Aruntha » Sun Apr 08, 2012 9:14 pm

Oattakaran wrote:
Aruntha wrote:பேசாம நீங்க ஒரு பியூட்டி பாலர் ஆரம்பிச்சிட வேண்டியது தானே அண்ணா.
ஆரம்பிக்கலாம்னுதான் இருக்கேன் ஆனால அதுக்கு முன்னாடி ஒருத்தலை வைத்து டெஸ் பண்ணிபார்க்கலாம்னு நினைக்கிறேன் அதுக்கு அந்த ஆள் ஒத்தக்கிடனும்
நல்ல ஐடியா. இந்தியால இருக்கிற ஒருத்தர செற் பண்ணிதாறன்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”