ஒப்பனை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Mon Apr 09, 2012 4:05 am

Aruntha wrote:நல்ல ஐடியா. இந்தியால இருக்கிற ஒருத்தர செற் பண்ணிதாறன்.
இந்தியாவுல யாரும் வேண்டாம் வெளிநாட்டல இருந்துதான் வேனும்
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Mon Apr 09, 2012 4:22 am

ரசாயன பூச்சுகள் பலன் தராது.
சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Mon Apr 09, 2012 4:23 am

ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற:
ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி - 5 கிராம்
புதினா - 5 கிராம்

எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Wed Apr 11, 2012 4:19 am

உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sat Apr 14, 2012 4:59 am

வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by muthulakshmi123 » Sat Apr 14, 2012 11:02 pm

Oattakaran wrote:
வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!
அளவோடு என்பதை பெரிதாக குறிப்பிடுங்கள்.. பின் சதை போட்டு அதற்கு மாற்று யோசிக்க வேண்டிய நிலை வரும்..
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by Oattakaran » Sun Apr 15, 2012 4:43 am

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள். பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by muthulakshmi123 » Sun Apr 15, 2012 12:46 pm

Oattakaran wrote:
ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள். பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.
நல்ல யோசனை எல்லாரும் துவைக்க சோம்பல் பட்டு சட்டையில் செண்ட் அடித்து போட்டுக் கொள்கிறார்கள்..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by umajana1950 » Sun Apr 15, 2012 12:49 pm

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.
பிரிட்ஜ் தண்ணீர் அப்போதைக்கு இதமாக இருக்கும். ஆனால், உடனே சளி பிடிக்கும்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: ஒப்பனை

Post by RJanaki » Sun Jun 03, 2012 7:08 pm

அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.
உடம்புக்கு எந்த எண்னணயை தேய்த்து குளித்தால் நல்லது.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”