பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by rajathiraja » Mon Mar 19, 2012 3:40 pm

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். நேர விரயத்தை தவிர்ப்பதை தவிர, இந்த உணவுப் பண்டங்களால் வேறு பயன் இல்லை. மாறாக, உடலுக்கு தீங்கையே அவை விளைவிக்கின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து, மும்பை மருத்துவ அறிவியல் மைய பேராசிரியர் டாக்டர் கிருபாளினி, மும்பை, ஏசியன் இருதய மருத்துவமனையின் சிறுநீரகத் துறை மருத்துவர் உமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கூறியதாவது:
பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள், கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு, ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்தியாவில், சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளன.நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், தற்போது பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பண்டங்களில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை.

மாறாக, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய ரசாயனங்கள் தான் உள்ளன. மேலும், சிறுநீரகம் தொடர்பாக சிறுசிறு பாதிப்பு இருப்பவர்களுக்கும், இந்த உணவுப் பண்டங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பாக்கெட் உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 6:11 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by mnsmani » Mon Mar 19, 2012 4:08 pm

நீங்கள் சொவ்லது சரிதான் ராஜா, இப்போ போனவாரம் நம்மூர் super market ல, readymade சப்பாத்தி, பரொட்டா,பூரி என்று பாலீதீன் பைகளில் அடைத்து விற்கப்பட்டது. இத்தனிக்கும் fridge ல் கூட வைத்திருக்கவில்லை. டேபில் மேலேயே கிடந்தது. நான் சும்மாயிலாமல் அங்கு பனிபுரியும் பெண்ணிடம் பேச்சு கொடுத்து கொண்டே, இந்த பாக்கட்டெல்லாம் கெட்டுபோகாம எவ்வளவு நாள் இருக்கும் என கேட்க, எனக்குசரியா தெரியாது, ஆனா ஒரு வாரத்துக்கு இருக்கும்னு நினைக்கிறேன் என்றாள். எப்படி சொல்றே என நான் கேட்க, இது போன வாரம் போட்டது, இன்னும் நல்லாயிருக்கு பாருங்க என்றாள் பெருமையுடன். அப்போ ஒருவாரம், என்னதான் காற்று புகாமல் பாலிதீன் பையில் அடைத்து வைத்தால் கூட அது காய்ந்துதான் போகும் அதன் ஈர பசை போகாமல் இருக்க என்னென்ன ரசாயனம் போடுகிறார்களோ, எல்லாம் நம் உடலுக்குள் அல்ல்வா செல்ஹிறது. இப்பொதெல்லாம் மாலை நேரங்களில் இரண்டு கடைகளில்தான் கூட்டம் அலைமோதுகிறது. ஒன்று டாஸ்மாக், ம்ற்றொன்று மெடிகல் ஷாப், உலகம் எங்கோ போய்கொண்டிருக்கிறது.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by rajathiraja » Mon Mar 19, 2012 4:29 pm

mnsmani wrote: இப்பொதெல்லாம் மாலை நேரங்களில் இரண்டு கடைகளில்தான் கூட்டம் அலைமோதுகிறது. ஒன்று டாஸ்மாக், ம்ற்றொன்று மெடிகல் ஷாப், உலகம் எங்கோ போய்கொண்டிருக்கிறது.
பொருத்தமான பின்னூட்டம்.
நன்றி மணி அண்ணா!
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by umajana1950 » Mon Mar 19, 2012 7:34 pm

சிறுநீரகம் தொடர்பாக சிறுசிறு பாதிப்பு இருப்பவர்களுக்கும், இந்த உணவுப் பண்டங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பாக்கெட் உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது
காலத்தின் கட்டாயத்தால், நாம் பாக்கட் உணவுக கலாசாரத்துக்கு தள்ளப் பட்டுள்ளோம். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதே நல்லது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 9:22 pm

mnsmani wrote:நீங்கள் சொவ்லது சரிதான் ராஜா, இப்போ போனவாரம் நம்மூர் super market ல, readymade சப்பாத்தி, பரொட்டா,பூரி என்று பாலீதீன் பைகளில் அடைத்து விற்கப்பட்டது. இத்தனிக்கும் fridge ல் கூட வைத்திருக்கவில்லை. டேபில் மேலேயே கிடந்தது. நான் சும்மாயிலாமல் அங்கு பனிபுரியும் பெண்ணிடம் பேச்சு கொடுத்து கொண்டே, இந்த பாக்கட்டெல்லாம் கெட்டுபோகாம எவ்வளவு நாள் இருக்கும் என கேட்க, எனக்குசரியா தெரியாது, ஆனா ஒரு வாரத்துக்கு இருக்கும்னு நினைக்கிறேன் என்றாள். எப்படி சொல்றே என நான் கேட்க, இது போன வாரம் போட்டது, இன்னும் நல்லாயிருக்கு பாருங்க என்றாள் பெருமையுடன். அப்போ ஒருவாரம், என்னதான் காற்று புகாமல் பாலிதீன் பையில் அடைத்து வைத்தால் கூட அது காய்ந்துதான் போகும் அதன் ஈர பசை போகாமல் இருக்க என்னென்ன ரசாயனம் போடுகிறார்களோ, எல்லாம் நம் உடலுக்குள் அல்ல்வா செல்ஹிறது. இப்பொதெல்லாம் மாலை நேரங்களில் இரண்டு கடைகளில்தான் கூட்டம் அலைமோதுகிறது. ஒன்று டாஸ்மாக், ம்ற்றொன்று மெடிகல் ஷாப், உலகம் எங்கோ போய்கொண்டிருக்கிறது.
உணவு பழக்க வழக்கத்தால் புதிய சமுதாயமும் இளைய சமுதாயமும், சேர்ந்து வாழமுடிவதில்லை...இளைய சமுதாயம் போகும் பாதையை முதியசமுதாயம் தடுக்கவும் முடியவில்லை
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by nadhi » Mon Mar 19, 2012 9:35 pm

நீங்கள் சொவ்லது சரிதான் ராஜா, இப்போ போனவாரம் நம்மூர் super market ல, readymade சப்பாத்தி, பரொட்டா,பூரி என்று பாலீதீன் பைகளில் அடைத்து விற்கப்பட்டது. இத்தனிக்கும் fridge ல் கூட வைத்திருக்கவில்லை. டேபில் மேலேயே கிடந்தது. நான் சும்மாயிலாமல் அங்கு பனிபுரியும் பெண்ணிடம் பேச்சு கொடுத்து கொண்டே, இந்த பாக்கட்டெல்லாம் கெட்டுபோகாம எவ்வளவு நாள் இருக்கும் என கேட்க, எனக்குசரியா தெரியாது, ஆனா ஒரு வாரத்துக்கு இருக்கும்னு நினைக்கிறேன் என்றாள். எப்படி சொல்றே என நான் கேட்க, இது போன வாரம் போட்டது, இன்னும் நல்லாயிருக்கு பாருங்க என்றாள் பெருமையுடன். அப்போ ஒருவாரம், என்னதான் காற்று புகாமல் பாலிதீன் பையில் அடைத்து வைத்தால் கூட அது காய்ந்துதான் போகும் அதன் ஈர பசை போகாமல் இருக்க என்னென்ன ரசாயனம் போடுகிறார்களோ, எல்லாம் நம் உடலுக்குள் அல்ல்வா செல்ஹிறது. இப்பொதெல்லாம் மாலை நேரங்களில் இரண்டு கடைகளில்தான் கூட்டம் அலைமோதுகிறது. ஒன்று டாஸ்மாக், ம்ற்றொன்று மெடிகல் ஷாப், உலகம் எங்கோ போய்கொண்டிருக்கிறது.
மணி சார் சரியா சொன்னீங்க .இந்த மாதரி பாக்கெட் வைத்து சாப்பிடுவதால் நோய்கள்த்தான் அதிகம்.பாலீத்தீன் use பண்ணகூடாது.ஆனால் அதைதான் use பண்றோம்.

பாலீத்தீன் கவர் நீண்டகாலம் இருக்க
மனிதனின் ஆயுள் காலம் குறைய
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பேக்' செய்யப்பட்ட உணவு பண்டங்களால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

Post by RJanaki » Fri Mar 23, 2012 2:46 pm

உணவு பழக்க வழக்கத்தால் புதிய சமுதாயமும் இளைய சமுதாயமும், சேர்ந்து வாழமுடிவதில்லை...இளைய சமுதாயம் போகும் பாதையை முதியசமுதாயம் தடுக்கவும் முடியவில்லை
உண்மை தான் முத்துலட்சுமி எனது இரண்டு பையன்கள் வீட்டில் செய்த தின்பண்டாங்களை சாப்பிடுவதில்லை,கடையில் உள்ள தின்பண்டாங்களை.தான் விரும்பி சாப்பிடுகிறர்கள் .
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”