Page 1 of 1

நோயும் விளம்பர யுக்தியும்

Posted: Thu Apr 18, 2019 10:16 am
by ஆதித்தன்
விளம்பரம் மூலமாக நாம் பணம் சம்பாதிக்கிறோம். பணம் வருவாயே அடிப்படை தளப்பணியாக கொண்டுள்ள இத்தளத்தில் பல வெளிப்படையான தகவல்கள் அவ்வப்பொழுது கொடுக்கப்படுவதுதான். அதாவது, நான் சம்பாதிக்கிறேன், நான் சம்பாதிக்கும் முறைகளைச் சொல்கிறேன். நீங்களும் அதனை பின் தொடரலாம் ... அல்லது அதென்ன, என்னிடம் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள், பின் நான் எப்படி என்னிடமே பணம் சம்பாதிக்கிறது என்றுக் கேட்டால், அது உங்களது புரிதலில் உள்ள தவறு.

பணம் சம்பாதிக்கவே முடியல என்பது, உங்களுடைய சின்னச் சின்ன தவறுகளில்தான் அமைந்துள்ளது. தவறுகளைத் திருத்திவிட்டால் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம், கோடீஸ்வரி... கோடீஸ்வரன் ஆகிவிடலாம்.

அதென்ன தவறுகளைத் திருத்துவதா? அல்லது தவறுகளைச் செய்வதா?

இந்தக் கேள்வி எனக்கும் இப்பொழுதுதான் எழுந்தது... ஆம், நான் மனதில் தோன்றுவதனை அப்படியே எழுதுபவன். அவ்வாறு நான் ஆன்லைனில் சமீப காலமாகவே பார்த்து வரும் விளம்பரங்களில், நோய் சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள் என்று வரும் விளம்பரம் தற்பொழுது நான் மருத்துவம் கற்றுக் கொண்டதால் ஏற்பட்ட வினாவினால் எழுந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, தலைப்பினை இட்டு தொடங்கினேன்.

நோயினை மருத்துவச் செலவில்லாமல், எளிமையாக அக்குபங்சர் மருத்துவ முறையில் குணப்படுத்த முடியும் என்ற கருத்துள்ள என்னிடம், அலோபதி மருத்துவச் சிகிச்சைக்கான செலவிற்கான உதவியாக 2 இலட்சம்... 5 இலட்சம் ... 10 இலட்சம் எனக் கேட்டு, உங்களால் முடிந்த ஆயிரமோ, பத்தாயிரமோ செய்யுங்கள் என வரும் ஆன்லைன் விளம்பரம் என்பது எவ்வாறானது என்பது புரியவில்லை.

சிந்தித்தால், பல வருடங்களுக்கு முன்னர் க்ரவுடு பண்டிங் என்ற முறையில் தொழில் தொடங்க பண உதவி செய்யுங்கள், இலாபத்தில் பன்மடங்காய் கொடுத்துவிடுவோம் என்ற முறை உருவாகியது. பின்னர், ஆன்லைன் மூலமாக யார் வேண்டும் என்றாலும் தனக்கான ஒர் ஐடியினை ஒர் குறிப்பிட்ட சைட்டில் உருவாக்கி, பின் பிறரிடம் பண உதவி பெற்றுக் கொள்ளும் முறையும் வந்தது.

இதன் வழியாக தன் தேவையை தனக்குத் தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டுப் பெற்றுக் கொள்வது போல, ஆன்லைனிலும் யாருன்னே தெரியாத நபரிடம் மூலம் கூட பணம் பெற்றுக் கொள்ள முடிந்தது.

இதன் வளர்ச்சியாக, நோய் சிகிச்சைக்கு உதவுங்கள்.... என்ற விளம்பரங்கள் பரவலாக வளம் வருகின்றன.

உண்மை என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவ்வப்பொழுது உதவி உதவி என்ற விளம்பரங்களைப் பார்ப்பதால் மனம் சஞ்சலப்படும் பொழுது எனக்கு நானே கேள்விக் கேட்டுக் கொண்டதன் விளைவாக உருவான கருத்து.

உதவி என்பது, கொடுப்பவர்க்கும் வாங்குபவர்க்கும் இடையில் ஏற்படும் பரிமாற்றம். இதில் இருவரும் பயன் அடையலாம்.

பிச்சையே எடுப்பதாக இருந்தாலும் சரி, பிச்சை போடுவதாக இருந்தாலும் சரி அதில் ஒர் தர்மம் இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் நம் பண்பாடு.

கொடுக்க இருக்கு என்பதற்காக இருப்பவர்க்கு பிச்சைப்போட்டு பிச்சைக்காரர்களையும் உருவாக்கக்கூடாது. இல்லை என்பதற்காக, கொடுக்க இல்லாதவர்களிடம் பிச்சை கேட்கவும் கூடாது என்பதுதான் இயல்பு.

இங்கே இருக்கு இல்லை என்பதுதனை ஒர் கோணத்தில் பார்த்தால், எல்லோரிடமும் ஏதோ ஒன்று தேவையில்லாமல் இருக்கிறது, மற்றொன்று தேவையாக இருக்கிறது.

தேவையானதை தேவையில்லாததைக் கொண்டு பெற்றுக் கொள்ளும் பரிமாற்றம் உதவி. இந்த பரிமாற்றம் மனதளவிலும் செயலில் உள்ள ஒன்றுதான்.

இந்த உலகம் அன்னமய தத்துவத்தில் உருவாக்கப்பட்டது ஆகும்.

அதாவது, மண்ணின் சத்துக்கள் புல்லுக்கும், புல் முயலுக்கும், முயல் நரிக்கும் என ஒவ்வொன்றின் மிகை மற்றொன்றொக்கு உணவாகிவிடும் விதத்திலும், ஒவ்வொன்றுக்கும் உணவு கிடைக்கும் விதத்திலும் இறைவன் படைத்துள்ளான். இதனை எளிமையாக பாட்டிலுக்குள் பூட்டிவைக்கப்பட்ட எறும்புக்கும் இறைவன் படி அளப்பதாக புராணக்கதை, திரைப்படக்கதை சொல்லும்.

இப்படி மிகச்சரியாக இறைவனால் படைக்கப்பட்ட உலகில், மிக உயர்ந்த நிலை உயிரினமான மனிதனுக்கு மட்டும் எப்படி நோய் என்ற வலி வந்து பாடாய்படுத்துகிறது... அதுமட்டுமா? மனிதனிடம் மாட்டிய மிருக உயிரினமும் நோயினால் அவதிப்படுகிறது.

நோய் என்ற ஒன்று இல்லவே இல்லை எனக் கூறும் அக்குபஞ்சர் மருத்துவம், சிகிச்சை என்று எதனை எடுத்துக் கொள்கிறது என்றுக் கேட்டால், நோய் என்ற ஒன்று இல்லை என்பதனைத்தான்.

ஆம், இன்று நோய் என்ற ஒன்று இல்லை... அது உயிரின் செயல்பாடு... அது இயல்பாக நடந்து கடந்தேறும் என்பதுதான்.

இயல்பாகவே நோய் குணமாகிவிடும் என்ற பொழுது, எதற்காக மருத்துவச் செலவு என்ற ஒன்று? அப்படியானால் அதற்கு உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அவ்வாறான மருத்துவச் சிகிச்சை அளிக்க கற்றவர்கள் & உபகரணங்கள் கொண்டவர்கள் அப்படியான உதவிகளைச் செய்ய நினைப்பாரானால் நல்லதுதான். இருவரும் ஒருங்கே நினைக்காத பொழுது, பெற இயலாத உதவியாக கடந்தேற வேண்டியதுதான்.

கண்டிப்பாக உங்களுக்கும் அந்த உதவி இலவசமாக கிடைக்கும். ஏனெனில், இறைவன் அப்படித்தான் படைத்துள்ளான்.

இன்றைய மருத்துவர்களிடம் கேட்டால், ப்ராக்டிஸ் செய்கிறேன் என்றுதான் சொல்வார்கள். அதாவது பயிற்சி எடுக்கிறார்கள்.

ஒர் நோயாளியினைக் கொண்டு பயிற்சி எடுப்பதாக இருந்தால், இருவருக்குமான பரிமாற்ற உதவியாகவே அது அமையும்.

பிழைப்பாரோ பிழைக்கமாட்டாரோ , குணமாகுமோ குணமாகதோ, பக்க விளைவுகள் உருவாகலாம் என்று கையொப்பம் வாங்கிவிட்டு செய்யப்படும் பயிற்சிக்கு கட்டணம் கொடுக்க வேண்டுமா? வாங்க வேண்டுமா?

இருவருக்கும் ஒர் விதத்தில் பலன் வாய்ப்பு இருப்பதால் பரிமாற்றமாக நடைபெறுதலே நல்லது.

இன்றும் சில இடங்களில் இலவச மருத்துவப் பயிற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இல்லாதவர்களிடம் பயிற்சி பெற்று, இருப்பவர்களிடம் சிகிச்சையாக செய்தலும் நடக்கிறது. ஆனால், இருப்பவர்கள்/கொடுப்பவர்களும் பயிற்சி தலைப்பில் தான் கையெழுத்து வாங்கப்பட்டு சிகிச்சைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

பரிமாற்ற உதவிகளை எப்பொழுதுமே நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், எனக்கான நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னிடம், தனக்கான உதவியாக கோரும் பொழுது அது நிராகரிக்கப்படுகிறது.

எனது நோக்கமும், அவர்களது நோக்கமும் சரியாக இருக்கும் பொழுது, என்னிடம் இருப்பது அவர்களிடமும் அவர்களிடமிருப்பது என்னிடமும் என பரிமாற்றம் நடைபெறுகிறது.

அதாவது பிச்சை எடுப்பதற்கு கூட, அது சரியாக நோக்கோடு நடந்தேறும் விதமாகவே நம் பண்பாடு கோயில்களையும்... அங்கு செய்ய வேண்டிய தானத்தையும் சொல்லி வளர்த்துள்ளது.

அதாவது பிச்சைக்காரன் கூட, பிச்சை என்று கேட்க வேண்டிய அவசியமில்லை... தொழில் தர்மப்படி... அவனவன் அவன் தொழிலுக்கு ஏற்ப தன் பொருளை வைத்திருப்பதுபோல, இவர் திருவோடு ஏந்திக் கொண்டால் போதும்... பிச்சை இட வேண்டிய கருமம் உள்ளவன் பிச்சைப் போடுவான்.

எல்லாம் ஆன்லைன் உலகம் ஆகிவிட்ட உலகில். உதவி கேட்டு விளம்பரங்களும் வர ஆரம்பித்துவிட்டன.

கோயில் போய் தான் தானம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலும் தானம் செய்யலாம்.

உங்களுக்கும் தொழில் தொடங்க, மருத்துவச் செலவிற்கு, படிப்புச் செலவிற்கு என்ற உதவி தேவைப்படுமாயின், டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்தியினை பயன்படுத்தி விளம்பரம் செய்யுங்கள். இருப்பவர்கள், அவர்களது கருமம் கடந்தேற உதவி செய்து தங்களுக்கு நன்றியாக இருப்பார்கள்.

ஆம், பிச்சைப்போடுபவர்கள் கூட பிச்சைக்காரர்க்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் பிச்சை எடுக்காவிட்டால் இவர் யார்க்கு பிச்சை போடுவது? தன் கருமத்தினை தொலைப்பது?

இறைவன், ஒர் தலையைக் கொய்த பாவத்திற்காக வீடு வீடாக பிச்சை எடுத்தக் கதையும் உங்களுக்கும் தெரியலாம். அதைப்போல், பிச்சை இடுவதன் பலனும் பெருமையும் சொல்லும் கதையும் தெரிந்திருக்கலாம்.

பிச்சை இடுதல் அல்லது தானம் செய்தல் என்ற தலைப்பில் நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கூகுளில் "தானம் பலன்" என்று தேடினால் உதவி செய்வதன் பலன் மற்றும் கரும நிவர்த்தி பற்றிய தகவல்கள் நிறையவே கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோய் நொடியில் அவதிப்படுபவர்கள், இப்படி பலவிதமான கரும பிரச்சனைகளுக்கு ஏற்ற தான இடுதல் கொடுக்கப்பட்டிருக்கும்.

நான் சொன்னேன்னு நீங்களும் சும்மா, ஆன்லைனில் உதவி செய்யுங்கள் என்று விளம்பரம் செய்துவிடாதீர்கள்.

உங்களுடைய தேவை என்ன என்று தெளிவாக ஆழமாக சிந்தித்து, அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், என்ன விதமான விளம்பரம் செய்யலாம் என்று தெளிவாக யோசனை செய்து செய்யுங்கள்.

கொடுப்பவர்களுக்கு ஏற்ப, கேட்பவர்கள் இருப்பார்களாயின், கேட்பது கிடைக்கும்.

கொடுப்பவர்களுக்கு எதிராக, கேட்பவர்கள் கேட்டல் இருக்குமாயின், கிடைக்காது.

இயற்கை சூழலில் சிட்டுக்குருவி பண்ணை வைக்க ஆசைப்பட்டு, உதவிக்கு விளம்பரம் செய்தால்... சிட்டுக்குருவி மீது பற்றுக் கொண்டு, அதற்காக செலவிட நபர்கள் இருந்து, அவர்களை உங்கள் விளம்பரம் கவர்ந்தால் பண உதவி கிடைக்கலாம்.

என்னிடம் சிட்டி அருகில் 4 ஏக்கர் நிலம் இருக்கிறது... நாட்டுக்கோழி பண்ணை அமைத்தால், 1=க்கு நாலு சம்பாதிக்கலாம் என்றால், உங்களது முந்தைய நடவடிக்கை மற்றும் நம்பகத்தன்மையைப் பார்த்து முதலீடு செய்யலாம்.

பிள்ளையார்க்கு வெள்ளை எருக்கம் பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சாத்துகிறோம், பூசைச் செலவு செய்து புண்ணியம் அடையுங்கள் என்று விளம்பரம் செய்தும் ஒர் வேலை வாய்ப்பினை கிராமத்தில் இருந்தாலும் ஆன்லைன் வழியாக உருவாக்கிக் கொள்ளலாம்.

எங்கையோ இருந்து கொண்டு, சாமிக்கு கப்பி முத்து நேர்த்திக் கடன் செய்திருந்தேன்.. அதை செய்துவிடுங்கள் என்று இதெல்லாம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

புதுசுன்னு நினைக்காதீங்க.... எல்லாம் பழசுதான்.

ஆன்லைனில் இப்படியான உதவி கிடைத்தாலும் பயன்படுத்த ஆட்கள் இருக்கிறார்கள்.

நீங்கதான் யோசிச்சி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் பணம் வாங்கிக் கொள்ளவும் எளிமையான வழிகள் உள்ளன.

பிற பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிச்சைன்னு சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.... ஏன்னா... சிலர் உதவி தானே கேட்டேன், பிச்சையா கேட்டேன் என்று கோபமாக பதில் சொல்வார்கள்.... அப்புறம்... நான் என்ன சும்மாவா கேட்டேன், நாளைக்கு கொடுத்திடுறேன்னுதானே கேட்டேன் என்பார்கள்.. இப்படி பல வாக்கியங்கள் உண்டு..

பிச்சை வேறயா இருக்கலாம்... உதவி வேறயா இருக்கலாம் ... நான் இங்கு சொல்ல வந்தது பிச்சை என்பது அது சம்பந்தப்பட்ட உதாரணம்.

உதவியை பிச்சைன்னு சொல்லல.

அதெல்லாம் போட்டு குழப்பிக்காம, அதெப்படி அவங்க விளம்பரம் வழியாக கேட்கிறாங்க? என்று மட்டும் யோசிங்க!