Page 1 of 1

தண்ணீர் எப்படி குடிக்கணும், எவ்வளவு குடிக்கணும்?

Posted: Tue Sep 18, 2018 10:35 am
by ஆதித்தன்
தண்ணீரை மடக் மடக்குனு குடிக்கணும்.

மடக் மடக்குனா, நாவினால் மடக்கி குடித்தல்.

அரைவாய்க்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு, வாயை மூடிக்கொண்டால் நாக்கு இயல்பாகவே தண்ணீரை தொண்டைக்குள் செலுத்தும் முறையினைக் கவனியுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மடக் மடக்குனு உள்ளே தள்ளும், அவ்வாறு நாவினை இயல்பாக தண்ணீரை குடிக்க வைப்பது, தண்ணீரை குடிக்கும் முறை.


எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான அளவு என்பது பாத்திரத்தினைப் பொறுத்தும் தேவையைப் பொறுத்தும் மாறுபடும்.

வீட்டில் 100 குடம் இருக்கிறது, ஆனால் வீட்டிற்கு 10 நாளைக்கு தேவையான நீர் என்பது 10 குடம் தான் என்றால், தேவைக்கு தகுந்தாற் போல் ஒர் குடம் தண்ணீர் மட்டும் எடுத்து வைப்போம்.. இரண்டாம் நாள் தண்ணீர் வராது என்றால் 2 குடம் தண்ணீர் பிடித்து வைப்போம்... மூன்று நாட்கள் வராது என்றால் 4 குடம் எடுத்து வைப்போம்... 5 நாள் ஆனால் தண்ணீர் கெட்டுப் போகும் என்றால், 100 குடம் இருக்கிறது என்பதற்காக 10 நாளைக்கு எல்லாம் எடுத்து வைக்கமாட்டோம். அதிகமாக 6 குடம் தண்ணீர்தான் எடுத்து வைப்போம்... ஏனென்ன்றால் அதற்குமேல் தேவையில்லை... அதற்கும் அதிகமாக எடுத்து வைத்தால் தேவையின் பொழுது கெட்டுப்போகும் என்பதனால் எடுத்து வைப்பதில் பலனில்லை. வீணாக தண்ணீர் குடத்தினை சுமந்து உடல் வேதனை கிடைத்துவிடலாம். ஆகையால் எல்லா காரணிகளும் இதில் வரும்.


நம் உடல் என்பது நமக்கான தனித்துவம் வாய்ந்தது.

நமக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பது நமக்கே தெரியும்.

காரம் சாப்பிட்ட அன்று வழக்கத்தினை விட அதிகம் தண்ணீர் தேவைப்படும்.

குளிர்ச்சியான சூழலில் வழக்கத்தினை விட குறைவாக தண்ணீர் தேவைப்படும்.

விரைவாக ஓட வேண்டிய சூழல் அமைந்தால் அன்றைய தண்ணீர் தேவை அளவு அதிகமாக இருக்கும். அதற்காக வயிறு நிறைய தண்ணீர் குடித்துக் கொண்டு எல்லாம் ஓட முடியாது, ஓடினால் வாந்தி வந்துவிடும்.

நமக்கான தண்ணீர் அளவு என்பது, நமது தாகத்தில் இருக்கிறது.

தாகம் எடுக்கும் நேரம், அரைவாய் தண்ணீர் எடுத்து வாயினை மூடி நாவினால் குடியுங்கள். மீண்டும் தண்ணீர் தாகம் இருந்தால் மேலும் அரைவாய் குடியுங்கள். இப்படி தாகம் அடங்கும் வரை குடித்தால் போதும்.

1 லிட்டர்.. இரண்டு லிட்டர் என்று அளந்து எல்லாம் குடிக்காதீர்கள்...

நமது வயிறு என்பது சுருங்கி விரியக்கூடியது. நீங்கள் அதிகம் தண்ணீர் குடித்தாலும் ஏற்றுக் கொள்ளும்... அதிகம் குடிக்க குடிக்க வயிறு விரிந்து கொடுத்து நாளடைவில் நிறைய குடிக்க ஏதுவாகும். ஆனால், பலன் என்ன???

தேவைக்கு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தேவைக்கு அதிகமாக குடித்தால் என்னவாகும் என்பது தெரியாத காரணத்தினால், நோய்க்கான காரணம் அதிக நீர் அருந்தியது என்றுகூட தெரியாமல் சில நோய்களை பெற்றுவிட நேரிடும்.

அதிக நீர் ஜீரணக் கோளாறினை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. ஜீரணக் கோளாறே அனைத்து நோய்க்குமான மூலம் என்பது பண்டைய சித்தர்கள் கூறியது. ஆகையால் நீரை தாகத்துக்கு குடியுங்கள். அளவுக்கு குடிக்காதீர்கள்.

உணவு என்பது எப்படி பசிக்கு உண்டால் போதுமோ, அதைப்போல் தாகத்திற்கு மட்டும் நீர் அருந்தினால் போதும்.

எல்லா நாளும் காலை எழுந்தவுடன் நீர் அருந்த வேண்டும் என்ற சூழல் அமையாது.

இயல்பாக கிரக சூழலின்படி, ஒர் நாள் காலை சந்திர நாடியின் பொழுது உடல் குளிர்ச்சியாகவும், ஒர் நாள் காலை சூரிய நாடியின் பொழுது வெப்பமாகவும் காணப்படும். அந்தந்த நாடிப்படி உடல் வெப்பமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

சூரிய நாடித்தினத்தன்று, அதிக நீரைக் குடித்து சந்திர நாடிக்கு நீங்கள் மாற்றிவிட்டாலும் செயலில் பாதகம் ஏற்படும். ஆகையால், உடல் தாகம் என்று கேட்கும் பொழுது, தாகத்திற்கு தண்ணீர் கொடுங்கள்.