Page 1 of 1

அக்னி தேவன் சூரியன் - ஆரோக்கியம் காக்கும் ஜீரண சுவாசம்

Posted: Sun Sep 16, 2018 9:49 pm
by ஆதித்தன்
அனைத்து கிரகங்களுக்கும் பிராணனாக ஆத்மாவாக ஓளி கொடுக்கும் சூரியன், நமது உடலின் உஷ்ண சக்தியாக இயங்கும் சூரிய மின் காந்தம் முதுகு தண்டுவடம் மற்றும் இதயத்திற்குமான காரகத்துவத்தினையும் கொண்டுள்ளது.

நமது உடலில் இதயம் மற்றும் சிறுகுடல் நெருப்பு மண்டலமாக உள்ளன.

நாம் உண்ட உணவு நன்றாக ஜீரணம் ஆக நெருப்பு சக்தி வேண்டும்.

நமக்கு நோய் உருவாக 95% காரணம் சரியான ஜீரணம் ஆகாமையே ஆகும். சரியாக ஜீரணம் ஆக, வயிற்றுக்கு சரியான பசி அளவுக்கு உணவு கொடுத்தால் நன்றாக ஜீரணம் ஆகும். பசிக்கும் மேல், வயிறை நிறைப்பினால் ஜீரணிக்க முடியாமல் உபாதையை கொடுக்கும். ஆகையால் பசி அளவுக்கு சாப்பிடுங்கள். தாகத்தினையும் அவ்வாறே தாகத்தின் அளவுக்கு நீரை வாய் வைத்துக் குடியுங்கள்.

அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளும் பொழுது நமது சுவாச நாடி ஆனது சூரிய நாடியான பிங்கலை நாடியில் ஓட வேண்டும். குளிர்ச்சி நாடியான இடகலை நாடியில் ஓடினால் காரத்தினை உட்கொண்டுவிட்டு உணவினை உட்கொள்ளுதல் வேண்டும்.

உணவு உட்கொண்ட 30 நிமிடத்தில் கண்டிப்பாக வலது நாடி சுவாசம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உண்ட உணவு நன்றாக ஜீரணம் ஆகும்.

அவ்வாறு வலது நாடி ஓடவில்லை என்றால், சரியானபடி சுவாச நாடியினை உயிர்நாடியில் சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தினை சரி செய்தல் வேண்டும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு ஜீரணம் சரியாக இருக்கும்.

நோய் வருமுன்னே நமது சுவாசத்தின் மூலமாகவே, உடல் உள்ளுறுப்புகளின் குறைகளைக் கண்டுபிடித்து, சுவாசத்தினை சரி செய்வதன் வழியாகவே சரி செய்துவிடலாம்.

ஆகையால், கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின் பொழுது சுவாசப் பயிற்சி செய்யுங்கள்.

அந்த கிரகங்களுக்கான சூட்சம கலை வாசிப் பயிற்சியில் கற்கலாம்.