Page 1 of 1

நோய்கள் தீர சாப்பிடும் முறையை சரி செய்யுங்கள்

Posted: Sun Sep 16, 2018 5:51 pm
by ஆதித்தன்
உடலில் ஏற்படும் நோய்கள் என்பது நோய்கள் அல்ல, ஆனால் அவை நோயினைக் குணப்படுத்தும் அறிகுறிகள். அப்படியானால், உடல் நோய்வாய்ப்பட்டு தன்னைத்தானே சுகப்படுத்திக் கொள்வதனையே நோய் என்றப் பெயரில் நாம் கடினப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இனி அந்த கடினம் கூடாது என்றால், அந்த நோய்கள் வராமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணம் நாம் உண்பதில் செய்யும் தவறுகளே.

ஒரு காலத்தில் பட்டினி கிடந்தார்கள்.. அவர்கள் பசி பசி என்று அழைந்து, பின் எப்பொழுது கிடைத்தாலும் சாப்பிடும் பழக்கத்திற்கும், சந்ததினரை பசியில்லாமலும் வளர்ப்பதிலும் காட்டிய வழக்கம் நாம் நோயாளியாக மாறியுள்ளோம்.

பசிக்க புசி என்பது பழமொழி. ஆனால், இப்பொழுது நாம் பசி என்றால் என்ன எனத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்று சாப்பிட்டச் சாப்பாட்டுக்கு உழைப்பு இருந்தது.. ஆனால், இன்று உழைப்பு இல்லாமல் சாப்பிட்டு மிகையாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

குறையினும் நோய், மிகையினும் நோய். என்பது பழமொழி.

ஒருகாலத்தில் தேவைக்கு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டார்கள், இப்போ தேவைக்கு அதிகமாக உண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றால், இருக்கும் நோய்களை விரட்ட வேண்டும் என்றால்,

பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள்... அதுவும் பசிக்கு மட்டும் சாப்பிடுங்கள்.

தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் அருந்துங்கள், தாகத்திற்கு மட்டும் தண்ணீர் அருந்துங்கள்.

உடலின் மொழியினை கொஞ்சம் கவனிக்க ஆரம்பியுங்கள்... அது கேட்பதனை கொடுங்கள்... ஓய்வு என்று அது கேட்பதனை எல்லாம் கொடுங்கள்.

தூக்கம் மிக முக்கியமானது. கண்டிப்பாக இரவில் தூக்கம் வேண்டும். தூங்கிவிடுங்கள்.

பசி, தாகம், ஓய்வு மற்றும் தூக்கம் இந்த நான்கினையும் சரி செய்தால் உங்களது மனம் ஆரோக்கியம் அடையும்.. மனம் ஆரோக்கியம்.. உடல் ஆரோக்கியம்.

எப்பொழுதும் மனதினை மகிழ்வாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.