Page 1 of 1

ஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்

Posted: Tue Jun 05, 2018 1:05 pm
by SUGAPRIYA
புதிய ஆய்வு ஒன்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஒருவரது நினைவாற்றலை மோசமாக பாதிப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்த ஒரு இளம் ஆணின் நினைவாற்றலை சோதித்த போது, அந்த ஆணின் நினைவாற்றல் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்ட

ஒரு நாளைக்கு 16 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொண்டு வந்த ஆணால் 12 வார்த்தைகள் அல்லது அதற்கும் மேலான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்ததாம். அதேப் போல் 28 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு உட்கொண்டு வந்த ஆண்களால் 12 வார்த்தைக்கும் குறைவாகவே நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது.

ட்ரான்ஸ் கொழுப்புக்கள் என்பவை கெட்ட கொழுப்புக்களாகும். இந்த கொழுப்புக்கள் ஒருவரது உடலில் அதிகமானால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களை குறைக்கும். அதே சமயம் இது உடலினுள் அழற்சியை உண்டாக்குவதோடு, ஹார்மோன் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலில் மூளையின் முறையான செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியை தாமதப்படுத்தும். அதோடு இது ஒருவரது செரடோனின் அளவை பாதிப்பதோடு, பசி மற்றும் தூக்கத்தை சீராக்கும் ஹார்மோன்களையும் பாதிக்கும்.

சரி, இப்போது ஒரு ஆணின் நினைவாற்றலை மிகவும் மோசமாக பாதிக்கும் சில ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

கேக்குகள் மற்றும் குக்கீஸ்

பிரெஞ்சு ப்ரைஸ்

பாப்கார்ன்

பிட்சா

மாட்டிறைச்சி