ஆஸ்துமா, தீர்வு இங்கே

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

ஆஸ்துமா, தீர்வு இங்கே

Post by SUGAPRIYA » Wed May 30, 2018 4:31 pm

நாட்பட்ட நோய்களில், தவிர்க்க முடியாத நோயாக மாறிவிட்டிருப்பது "ஆஸ்துமா" எனும் நுரையீரல் நோய். இந்திய மக்களில் 17 சதவிகிதத்திற்கும் மேலானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதோ அதற்கான சிகிச்சை முறையையும், யோகா மூலம் இதை குணப்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.
https://snag.gy/jNcUmr.jpgஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது.


ஆஸ்துமா பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது, வெகு சிலருக்கு நடுவயதில் ஆரம்பிக்கலாம். பரம்பரையில் இது யாருக்கேனும் இருந்தால், வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும்.சிகிச்சை முறைகள்:

ஆங்கில மருத்துவம்: சுவாசக் குழாய்களின் இறுக்கத்தைக் குறைக்கவும் அவற்றில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன. இவை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரியாக உட்கொள்ள வேண்டும். ஆஸ்துமாவுக்கான மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. இவை உங்கள் ஆஸ்துமாவை மேலும் மோசமடையச் செய்யலாம்.

சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் ஆஸ்துமாவுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.
யோகா எப்படி உதவுகிறது?

பிராணாயாமப் பயிற்சிகள்

நுரையீரல்களுக்கு நன்கு பயிற்சியளித்து பலப்படுத்துகிறது.
சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, முழு நுரையீரலையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிராணாயாமப் பயிற்சிகள் செய்யும்போது நுரையீரல் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதால், நுரையீரல்களின் பல்வேறு பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் எளிதாகச் செல்கிறது.
நுரையீரல்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகிறது.
ஆசனப் பயிற்சிகள்

இவற்றை மேற்கொள்வதன் மூலம் நம் உடல் பலமடைகிறது.
நம் உடல் தளர்வு நிலையை அடைகிறது.
சீரான சுவாசம் ஏற்படுகிறது.
தொடர்ந்த ஆஸ்துமா தாக்குதலினால் நெஞ்சுக்கூட்டில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கிறது.தியானம்

நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வுநிலையைக் கொடுக்கிறது. இதனால் பயமும் பதட்டமும் குறைந்து எந்த வகையான மன அழுத்தம் தரும் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மனதையும் உடலையும் தயார் செய்கிறது. இதன் மூலம் ஆஸ்துமா தாக்குதலை நாம் பெருமளவில் தடுக்க முடியும்.ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராணாயாமம் ஒரு வரப்பிரசாதம். பிராணாயாமம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்துமாவிலிருந்து மட்டுமல்லாமல் வயிற்றுப் புண், இருதய நோய்கள் மற்றும் முதுகு வலியிலிருந்து குணமாகி இருக்கின்றனர்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”