Page 1 of 1

ரூ.500, 1000 நோட்டுகள் தடைக்கு காரணம் என்ன?

Posted: Wed Nov 09, 2016 5:21 am
by ஆதித்தன்
இந்திய அரசு அதிரடி நடவடிக்கை என்றப் பெயரில், நேற்று (8-11-2016) அதிமுக்கியமான செயல்படாக, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்துள்ளது.

இது வரவேற்கப்பட வேண்டிய ஒர் நல்லச்செயல் என்றுச் சொன்னாலும், சில தெளிவுகள் மக்களிடம் இல்லை என்பதனைப் பார்க்கும் பொழுது ஒர் சில மாதங்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதனை நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது, இதனை யாவரும் தெரிந்து வைத்திருப்பதுதான்.

தடைசெய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தற்பொழுது வெறும் காகிதத்திற்கு ஒப்பானது என்று இந்திய பிரதமரே நேற்று குறிப்பிட்டுவிட்டார்.

500, 1000 எனக் குறிப்பிட்ட பழைய நோட்டுகளை வங்கிகளிடம் கொடுத்து ஒப்பான பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டனர்.

ஆனால், ஒர் நாளைக்கு ரூ.10,000 மட்டுமே பெற முடியும். அதிகப்பட்சம் ஒர் வாரத்திற்கு ரூ.20,000 மட்டுமே பெற முடியும்.

அப்படியானால், நாளை ரூ.1,00,000 கொடுக்க வேண்டுமே.. அதற்கு என்ன செய்வது?? என்பதுதான் தற்போதைய பொதுமக்களின் பெரும் குழப்பமாக இருக்கும். அதிலும் பலர் கைப்பணத்தினை புழக்கமாகவே கொண்டு தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போதை அந்தப் பணம் அனைத்தும் செல்லாது என்று சொல்லிவிட்டதால், அதனை மற்றவரிடத்தில் கொடுத்து தொழில் செய்வது என்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றால், அதற்கும் கட்டுப்பாடு. கொடுக்கும் பணத்திற்கு உடனே பணம் கொடுக்கமாட்டார்கள். குறைந்த பணம் மட்டுமே கிடைக்கும்.

ரூ.1,00,000 ஐ மாற்றவே 5 வாரம் ஆகும் என்ற நிலைதான் மீண்டும் கையில் பணத்தினை வாங்குவது என்பது... அதிலும் பணம் குறைவான அளவே அச்சிடப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால், செல்லும் அனைவருக்கும் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். ஆகையால், கையில் பணத்தினை வைத்து புழக்கம் செய்தவர்களுக்கு பெரிய சிரமாக இருக்கும்.

அதே நேரத்தில், எவ்வளவு பணமாக இருந்தாலும் வங்கியில் வரவு/டெபாசிட் செய்துவிடலாம். மற்றொருவருக்கு பணத்தினை ட்ரான்ஸ்பர் செய்யலாம், கசோலை/செக் ஆக பணத்தினை ஒருவர்க்கு இலட்சம் பல இலட்சம் என்று வழங்கலாம்.

டிசம்பர் 30-க்குள் மாற்ற வேண்டும் என்பதால், வங்கியில் டெபாசிட் செய்வது என்பதே வழி. இருக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும், கோடியாக இருந்தாலும் டெபாசிட் செய்துவிடுங்கள். அந்தப் பணம் அப்படியே உங்களது அக்கவுண்ட் கொடுக்கப்படும், நீங்கள் வங்கி பரிவர்த்தனை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அத்தொகைக்கான வரி எவ்வளவோ, அதனை விரைவில் பிடித்துக் கொள்வார்கள், இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆக, அனைத்து பணமும் வங்கியில் வரவு வைத்து கணக்குக்கு வர வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம்.

தற்போதைய அரசு என்பது அறிவார்ந்த மக்களின் கைப்பிடியில் செயல்படும் அரசு. அந்த அறிவார்ந்த மக்களின் செயல்திட்டமே இந்த தடை அறிவிப்புக்கு காரணம்.

வெளிநாடு சென்றிருப்பவர்கள், டிசம்பர்க்குள் மாற்ற முடியாவிட்டாலும் ஜனவரியில் வந்துகூட குறிப்பிட்ட வங்கிகளுக்குச் சென்று.. வெளிநாடு சென்றிருந்த ஆவணத்தினைக் காட்டி, தங்களது செல்லாத பணத்தினை மாற்றம் செய்து கொள்ளலாம். ஆகையால், ரொம்ப அவசரம் காட்டாமல் நிதானமாக நீங்கள் வந்து மாற்றிக் கொள்ளுங்கள்.

ரூ.500, & ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்வதன் மூலம், மற்றும் அதற்கு மாற்றான போதிய பணத்தினைக் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பெரும்பான்மையான பணம் வங்கிக் கணக்கிற்குள் வந்துவிடும் என்பதோடு, அடுத்தக்கட்டமாக அதனை சரியாக நிர்வகிக்கவும் அந்த அறிவார்ந்த மக்கள் திட்டம் தீட்டி வைத்திருப்பார்கள். இதற்கான அறிவிப்பும் கட்டுப்பாடும் போக்கப்போக விதிக்கப்படலாம்.

இனி பணம் கொடுத்தல் வாங்கல் என்பது வங்கிக்கணக்குள் பெரும்பான்மையாக பரிமாற்றமாக நிகழும் என்பதே அவர்களது திட்டம். இதன் மூலம் கருப்புப் பணத்தினை வெள்ளையாக்கி, சரியாக அரசுக்கான வருவாயினைப் பெறுதல் முடியும். அரசை நிர்வகிக்கும் அறிவார்ந்த மக்களும் சரியாக தன் நிர்வாகத்தினை நடத்த முடியும், அதாவது இலாபத்துடன்/வெற்றியுடன்.

கள்ள நோட்டுக்கான கட்டுப்பாடு என்பது, இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையில் இருப்பதனை தடைசெய்து, புதியவற்றினை அறிமுகம் செய்வதன் மூலமே கட்டுப்படுத்த முடியும்.. இல்லாவிடில், இந்த புதிய நோட்டும் ஒர் சில மாதங்களில் சந்தைக்கு கள்ளத்தனமாக வரத்தான் போகிறது.

அதே நேரத்தில், நாம் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்சி அளவுக்கு இந்திய ரூபாயினையும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், கள்ளநோட்டு என்ற நிலை இருக்காது. எல்லாமே லெட்ஜரில் சரியாக வரவு செலவு செய்து நேர் செய்யதுவிடுவார்கள், கூடுதலாக கணக்கு இல்லாமல் வரவு வைக்க முடியாது. இதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பதால் தான் தற்போதைய கைப்பணம் புழக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக, இருப்பதனை எல்லாம் தடை செய்துவிட்டு, 100 ரூபாய் என்ற சிறிய அளவிலான கரன்சி நோட்டுகளை மட்டும் அப்படியே வைத்துள்ளார்கள். பெரிய பரிவர்த்தனை எல்லாம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.


சரி, இந்த தெளிவான நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கிறார்கள் என்பது இருக்கட்டும், மக்கள் தெளிவாக போட்டப் பணத்தினை எல்லாம் கொடுங்க என்று திரும்ப எடுத்துவிட்டால் கொடுக்க உங்களிடம் பணம் சரியாக கணக்குப்படி இருக்கிறதா???? அல்லது அச்சடிச்சி கொடுப்பீர்களா?????

மக்களே நீங்கள் தெளிவாக வேண்டிய காலம் வந்துவிட்டது,,,, நீங்கள் தெளிவாகவிட்டால், இந்த தெளிந்த.. அல்லது தாங்களே தெளிந்தவர்கள் மிகுந்த அறிவார்ந்தவர்கள் என்றுச் சொல்லிக் கொள்ளும் இந்த ஆதிக்க வர்க்கம் நம்மை முழுமையாக அடிமைப்படுத்தும் அடுத்தக்கட்ட திட்டத்திற்குள் இறங்குவதற்குள் தெளிவாகவிட்டால், நாம் என்றுமே அவர்களுக்கே அடிமை.. அவர்களைவிட நாம் ஒர்போதும் முன்னேர முடியாது.

அதிலும் குறிப்பாக இந்தியா என்பது பல குறுமன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதாவது, பலர் ஆதிக்கச் சக்தி வர்க்கத்தினைச் சார்ந்தவர்கள். இந்த ஆதிக்கச் சக்தி வர்க்கம் சிந்திக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது.

இன்றும் வெள்ளையனே பரவாயில்லை என்றுச் சொல்லும் பொதுமக்கள் பலர் இருக்கிறார்கள்... அவர்களுக்கு என்று ஒர் சில தேவைகளை பூர்ததி செய்துவிட்டால் அவர்களே அவர்களுக்கு போதும்... அவர்களை குறிவைத்தே தற்போதைய ஆதிக்க வர்க்கம் தெளிவாகச் செயல்படுகிறது. மற்றவர்களை ஓடுக்கி தங்களுக்கு கீழ் கொண்டு செல்ல திட்டமிட்டுருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பாட்டினைப் பார்க்கும் பொழுது பொதுவான ஒர் வாழ்க்கைமுறை வர இருக்கிறது... அதில் நன்மை போல தெரிகிறது, ஆனால் இதுவரை நாம் அனுபவித்த சுதந்திரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும் என்பது உண்மை.

இது சொன்னால் பலருக்கும் புரிவதில்லை.... புரியாததை பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், நானும் புலம்புகிறேன்.