கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Neela
Posts: 10
Joined: Sat Dec 22, 2012 11:24 am
Cash on hand: Locked

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...

Post by Neela » Wed Sep 03, 2014 3:05 pm

நிறைய மக்களின் கழுத்து மட்டும் மிகவும் கருப்பாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அவ்விடத்தில் அதிகப்படியான சுருக்கங்களுடன் போதிய பராமரிப்பு இல்லாததால், அவ்விடத்தில் நிறமிகளின் அளவு அதிகரித்து கருமையாக காட்சியளிக்கும். அதுமட்டுமின்றி, பல முறை முகத்தை கழுவும் மக்கள், தங்களின் கழுத்தை கழுவுவதில்லை. இதனால் அவ்விடத்தில் அழுக்குகளானது நீண்ட நாட்கள் தங்கி அப்படியே அவ்விடத்தை கருமையாக காட்டுகிறது. கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!! இப்படி கழுத்தானது கழுப்பாக இருந்தால், அவை அழகை கெடுப்பதோடு, அவ்விடத்தில் பல்வேறு நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும். மேலும் கழுத்தானது கருமையாக வேறு பல காரணங்களும் உள்ளன. அதில் நீரிழிவு, உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், கழுத்தானது கருமையாகும். ஆனால் கழுத்தில் உள்ள கருமையை போக்க ஒருசில வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை இயற்கை வழிகள் என்பதால், இதனை அன்றாடம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்! சரி, இப்போது கழுத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் அந்த சிம்பிளான வழிகளைப் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை துருவியோ அல்லது சாறு எடுத்தோ அல்லது துண்டுகளாக்கியோ கழுத்தில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கழுத்தில் உள்ள இறந்த செல்களானது வெளியேறி, கழுத்து வெள்ளையாகும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, கழுத்தில் தடவி 10-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றினை சருமத்திற்கு பயன்படுத்திய உடனேயே வெயிலில் செல்லக்கூடாது.

தேன் மற்றும் தக்காளி தேனில் தக்காளி சாறு, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது பால் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கருமையாக இருக்கும் இடத்திலும், கழுத்திலும் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய வைட்டமின்கள் கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.

ஆலிவ் ஆயில் ஆயில் ஆயிலுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமையாக உள்ள கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை கற்றாழைக்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் குணம் உள்ளது. அதற்கு கற்றாழை ஜெல்லை கருமையான இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அதனை கழுத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருமையானது நீங்கும்.

தயிர் தினமும் தயிரை கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமானால், அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தும் பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூள் மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், கழுத்தில் உள்ள கருமை நீங்கும். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”