பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டு

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Neela
Posts: 10
Joined: Sat Dec 22, 2012 11:24 am
Cash on hand: Locked

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டு

Post by Neela » Tue Aug 26, 2014 10:05 am

டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இதனால் அந்த தழும்புகளால் அழகு பாழாகிறது என்று பலர் வருத்தப்படுவதுண்டு. அதனால் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்தி, அதனைப் போக்குவதற்கு முயற்சிப்பதும் உண்டு. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. ஆகவே அவ்வாறு க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிப்பதை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்ப்போமா!!!

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க சில டிப்ஸ்
சந்தன ஃபேஸ் பேக் சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.


வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.

வெந்தய ஃபேஸ் பேக் சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.

கற்றாழை ஜெல் கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”