பீர் குடித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும் – அதிர்ச்சி தகவல்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

பீர் குடித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும் – அதிர்ச்சி தகவல்

Post by ரவிபாரதி » Thu Jun 26, 2014 4:15 pm

http://3.bp.blogspot.com/-6XlTLUMvh_Q/T ... 0/beer.png[/fi]தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக் கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள். பீர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, மலடுத்தன்மை குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் உடனடி காபி பவுடர் வாங்கி காபி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த பொருட்களில் உள்ள ஒருவகை அமிலமே இந்த குறைபாடு ஏற்பட காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ரசாயன கலப்பு :lis: :lis: :lis:


பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது. :non: :non: :non:




இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகினர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் கண்டர் குஹேல், தெரிவித்துள்ளார்.மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வு மது மற்றும் பீர் பிரியர்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”