ஆவாரை - Cassia auriculata

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

ஆவாரை - Cassia auriculata

Post by cm nair » Fri May 30, 2014 4:23 pm

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ !
இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .

இது ஒரு காய கலப்ப மூலிகை .

மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.ö



இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் .
இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .


உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .
சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து வர உடல் தங்கம் போல் ஆகும் .
இது ஒரு மொத்த மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்,.
நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கிழை நாட்டு வைத்திய தத்துவும் .


அந்த செல்களில் இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன ..
இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை .பின் என்றும் இளமைதான் .
இவைகளையே காயகல்ப்ப மூளிகள் என நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .எனவே அவர்கள் கூறும் காயபலப்ப மூலிகைகளை மட்டுமாவது தொடர்ந்து எதோ ஒரு தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி வாழலாம் .
மண்ணில் நல்ல வண்ணம் காணலாம்.


நமது வீட்டில் கழிவு நீரில் அடைப்பு ஏற்ப்பட்டு ஓடாமல் நின்றால் வீடு என்ன கதியாகும் .அதே கதிதான் செல்களில் நீக்க வேண்டிய பகுதி நீக்கப்படாவிட்டால் நடக்கிறது .
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”