உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by umajana1950 » Thu Mar 08, 2012 12:28 pm

மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.
இது தான் எனக்கு புரியவே இல்லை. நவீன மூட நம்பிக்கைகள் பற்றி கொஞ்சம் விலாவாரியாக எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்........
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Sat Mar 10, 2012 1:25 pm

அட கொஞ்சம் ரெண்டு பேருமே நிறுத்துங்க?
அருந்தா உண்மையாவே உங்க பேர் என்ன ? அருந்ததியா? அருந்தாமரையா? பேர் இடையிலேயே முடிந்த மாதிரி ஒரு feel இருந்துகிட்டே இருக்கு!!!

சும்மா ஜோக்குக்கு !!!
பிறகு உங்ககிட்ட இருக்கிற காசெல்லாம் எங்கிட்ட குடுத்திட்டு படுகையிலருந்து வெளிநடப்பு செய்திராதீங்க?
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Sat Mar 10, 2012 1:47 pm

RukmaniRK wrote:1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.
rukmani இது மருத்துவ உலகத்தின் மூடநம்பிக்கைகள் இல்லை...இது தவறான கருத்து.. மருத்துவர்கள் சிலரினால் உருவகம் கொடுக்கப்பட்டிருக்கலாமே தவிர மருத்துவ உலகமும் , wellness சம்பந்தப்பட்ட துறையும் இன்று உலகத்தில் எங்கோ உயரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது..நீங்கள் கூறியவற்றிற்கு இன்று நிறைய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது... உங்கள் கருத்துக்கள் தேவையானவை தொடருங்கள் ....மருத்துவ உலகத்தை மறந்து விடாதீர்கள்..

நீங்கள் சொல்வதற்கு ஒப்பான உதாரணம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்...

புதுவையிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 22 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, அங்கே மருத்துவக்கல்வித்துறையில் தலைவராக இருக்கும் டாக்டர் சேதுராமன், மருத்துவத் துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தி வந்ததுடன் அதற்காக சக டாக்டர்களுடன் இணைந்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தினார். மருத்துவர்களின் வியாபாரத்தந்திரங்களை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய இவரின் TRICK OR TREAT என்ற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்படித்ததனால் ஏற்பட்ட தாக்கம். ஆனந்த விகடன் ஆசிரியரால் 'போஸ்ட்மார்ட்டம்' என்ற மருத்துவ விழிப்புணர்வு தொடரை டாக்டர் சேதுராமனைக் கொண்டு 2003 ஆம் ஆண்டு விகடனில் எழுத வைத்தது.

மருந்துகள் தயாரிப்பைப்பற்றியும் கமிஷன் என்ற நஞ்சு இன்றைக்கு மருத்துவர்களிடையேயும், மருந்துக் கம்பெனிகளிடையேயும் எந்த அளவு கொடூரமாகப் பரவியிருக்கிறது என்பதை அவர் அருமையாக விவரித்திருக்கிறார்.

இதை நிறைய பேர்கள் படித்திருக்க மாட்டார்கள். முக்கியமாக இளைய தலைமுறையினர். இந்தப் புத்தகத்திலுள்ள சில அதிர வைக்கும் சில உண்மைகளை, மனதை உறைய வைக்கும் நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம். மேலும் ஒரு குடும்ப வைத்தியரை நாம் எல்லோரும் வைத்துகொள்ளுவது எவ்வளவு அவசியம், என்பதையும் அந்த மருத்துவர் வழியாகவே ஒரு தரமான ஸ்கான் செண்டர், ஒரு தரமான ரத்த பரிசோதனை நிலையம் என்று செல்வது எந்த அளவு நல்லது என்பதையும் எல்லோருமே விழிப்புணர்வுடன் இருப்பது உடல் நலத்திற்கு எந்த அளவு முக்கியமானது என்பதையும் வலியுறுத்திச் சொல்வதற்காகவே இந்தப்பதிவை ஒரு கருவியாக நான் நினைக்கிறேன்.

இனி டாக்டர். சேதுராமன் அவர்களது கருத்துக்கள்......

சுமார் 3000ற்கு மேற்பட்ட வேதிப்பொருள்களை வெவ்வேறு கூட்டணியில் பயன்படுத்தித்தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஒரே மாத்திரைக்கு வேறு வேறு பெயர்களைச் சூட்டி பல கம்பெனிகள் விற்கின்றன. உதாரணத்திற்கு ஜுரத்திற்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால், குரோசின், தெர்மோநில், டோலோ, மெட்டாசின் என்ற பெயர்களில் வலம் வருகின்றன. இப்படி விற்கப்படும் மாத்திரைகள் 1 லட்சத்துக்கும் மேல்! மனித மூளையின் ஞாபக சக்திக்கு வரையறை இருக்கிறது. ஒரு அபாரமான ஞாபக சக்தி உடைய மருத்துவரால் கூட ஒரே சமயத்தில் 500 மாத்திரைகள் பெயர்களைத்தான் நினைவு வைத்துக் கொள்ள முடியும். மருத்துவரின் ஞாபகத்திலுள்ள TOP- 100. மாத்திரைகள் லிஸ்ட்டில் தங்களது தயாரிப்பும் இடம் பெற வேண்டுமென்று தான் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு வேலை செய்கிறது. தங்கள் மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுத வெளி நாட்டுக்கு பல வசதிகள் தந்து அழைத்துச் செல்வதிலிருந்து, கார், ஃப்ரிட்ஜ் தருவதிலிருந்து இந்த மருந்துக் கம்பெனிகள் போகாத எல்லையே இல்லை.
“இரண்டு நாளா தலைவலி' என்று யார் வந்தாலும் சி.டி.ஸ்கான் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்துப்பார்த்து விடலாம் என்று சில டாக்டர்கள் உடனேயே கூறுகிறார்கள். பொதுவாக இந்த ஸ்கான் வகைகளை எடுக்க 2500 லிருந்து 10000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இதிலிருந்து 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை டாக்டர்களுக்கு கமிஷன் போகிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த கமிஷன் பிஸினஸ் ஒரு வைரஸ் மாதிரி மருத்துவ உலகத்தில் ஊடுருவியிருக்கிறது.
மனசாட்சியுள்ள நல்ல மருத்துவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் கமிஷன் என்ற வியாபாரத்தை அழிக்க போராடவே செய்கிறார்கள். அதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இப்போதெல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவ மனைகள் ஏராளமாய் வந்து விட்டன. இவரின் நண்பர் அது மாதிரி ஒரு மருத்துவ மனையில் காலையில் சில மணி நேரங்களும் மாலையில் சில மணி நேரங்களும் பணியாற்றும் ' விஸிட்டிங் கன்சல்டண்ட்' ஆக பொறுப்பேற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நிறைய நோயாளிகளுக்கு அங்குள்ள செகரட்டரியிடம் அப்பாயின்மெண்ட் ஆகியிருக்கிறது. இவர் போய் உட்கார்ந்தால் யாருமே வருவதில்லையாம். செகரட்டரியை அழைத்துக் கேட்டால் ' யாருமே வரவில்லையே சார்' என்கிறாராம். ஒன்றுமே புரியாமல் சக மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசிய போது அவர் கேட்டாராம், ' அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் பிஸினஸ் பேசி விட்டீர்களா?'

எதுவும் புரியாமல் இந்த டாக்டர் விழித்தபோது அவரே அதற்கு விளக்கமும் அளித்தாராம்.

‘உங்களிடம் appointment வாங்கிய நோயாளிகள் உங்களிடமே வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்றால், அவர்களிடம் நீங்கள் வாங்கும் பணத்தில் பத்து சதவிகிதத்தை அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் தரவேண்டும். அப்படி நீங்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் உங்களைப் போன்ற இன்னொரு ஸ்பெஷலிஸ்டிடம் நோயாளிகளை அனுப்பி விடுவார்கள்.’

மிரண்டு போன அந்த மருத்துவர் அடுத்த மாதமே அங்கிருந்து விலகி விட்டார்.

இவர் ஆதங்கப்படும் மற்றொரு விஷயம் மருத்துவர்கள் தாங்களே சொந்தமாக மருந்துக்கடை வைத்துக்கொள்வது. மருத்துவர்கள் சொந்தமாக மருந்துக்கடை வைத்து மாத்திரைகள் விற்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் தடை செய்திருந்தும் மருத்துவர்கள் பலர் இதை மதிப்பதில்லை என்றும் மருந்து ஆய்வாளரிடம் உரிய லைசென்ஸ் பெறாமல், விற்பனை வரியும் கட்டாமல் இப்படி குறுக்கு வழியில் வியாபாரம் செய்யும் மருத்துவர்களை பல ஊர்களில் பார்க்க முடிகிறது என்று வருத்தப்படுகிறார் இவர்.

சர்க்கரை வியாதிக்காக சிறுநீர் பரிசோதனை பல பரிசோதனை நிலையங்களில் செய்யும் விதத்தைப்பற்றி இவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது பகீரென்கிறது.

பல laboratoryகளில் இன்று ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சிறுநீரைப் பரிசோதனை செய்வதில்லையாம். 20 சாம்பிள்கள் வரும்வரைக் காத்திருந்து, 20 சாம்பிள்களிலிருந்தும் சிறிது சிறுநீரை எடுது, அவற்றை மொத்தமாய் ஒரு சோதனைக்குழாயில் ஊற்றி பரிசோதனை செய்வார்களாம். மொத்தமாக நெகடிவ் என்று வந்து விட்டால் பிரச்சினையில்லை. 20 பேருக்கும் நெகடிவ் என்று எழுதிக்கொடுத்து விடலாம். ஒரே கல்லில் 20 மாங்காய்கள்!! அதில் ஒரு வேளை பாஸிடிவ் என்று வந்தால் அந்த 20 சாம்பிள்களையும் ஐந்து ஐந்தாய் பிரித்து மறுபடியும் பரிசோதனை செய்வார்களாம். மறுபடியும் பாஸிடிவ் என்று காண்பிக்கும் பிரிவை மட்டும் தனித்தனியே எடுத்து பரிசோதனையை செய்வார்களாம். இந்தத் தவறால் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒரு சர்க்கரை நோயாளி, தகுந்த சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இழக்கிறார்.
இவரின் மாணவர்-பீகாரில் மருத்துவராக வேலை செய்தவர், அங்கே கிராமப்புறங்களில் எடுக்கும் எக்ஸ்ரே பற்றி சொன்னதை வேதனையுடன் எடுத்துரைக்கிறார்.

மின் வசதி இல்லாத கிராமப்புற நோயாளிகள் நகர்ப்புறம் வந்து மருத்துவர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லி பக்கத்து செண்டருக்கு அனுப்பி விடுவார்களாம். அங்கே ஆளுயரம் ஃபிரிட்ஜ் இருக்குமாம். அங்கு வேலை செய்பவர் அதை வேகமாகத் திறந்து மூடுவாராம் திறந்ததும் வரும் வெளிச்சத்தை மிரள மிரள பார்ப்பவர்களிடம் எக்ஸ்ரே எடுத்து முடிந்தாகி விட்டது என்று சொல்லி,, ஃபிரிட்ஜின் அடியில் தண்ணீர் தேங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ட்ரேயில் ஏற்கனவே தயாராக போட்டு வைத்திருந்த பழைய எக்ஸ்ரே படம் ஒன்றைக் கொடுத்து அனுப்புவாராம். இதை வைத்து சிகிச்சை செய்வதாக அந்த மருத்துவரும் கூறுவாராம். அந்த எக்ஸ்ரே படம் அடுத்த சுற்றுக்கு உடனேயே அந்த செண்டருக்குத் திரும்ப வந்து விடுமாம். எத்தனை ஏமாற்று வேலை இது! .
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RukmaniRK » Sat Mar 10, 2012 2:07 pm

மிகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தந்த நம்ம உதயகுமார் சார்க்கு நன்றி.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Fri Mar 16, 2012 11:22 pm

உங்ள கருத்தை தொடர்ந்து பதிவிடுங்கள் ருக்மணி.... வாழ்த்துக்கள்..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by umajana1950 » Sat Mar 17, 2012 5:04 am

“இரண்டு நாளா தலைவலி' என்று யார் வந்தாலும் சி.டி.ஸ்கான் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்துப்பார்த்து விடலாம் என்று சில டாக்டர்கள் உடனேயே கூறுகிறார்கள். பொதுவாக இந்த ஸ்கான் வகைகளை எடுக்க 2500 லிருந்து 10000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இதிலிருந்து 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை டாக்டர்களுக்கு கமிஷன் போகிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த கமிஷன் பிஸினஸ் ஒரு வைரஸ் மாதிரி மருத்துவ உலகத்தில் ஊடுருவியிருக்கிறது.
மனசாட்சியுள்ள நல்ல மருத்துவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் கமிஷன் என்ற வியாபாரத்தை அழிக்க போராடவே செய்கிறார்கள். அதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தான் நிஜம்.
பலிகடா ஆக்கப் படுபவர்கள் நோயாளிகள். இது டாக்டர்-லாப் பிசினெஸ் தான். வேறொன்றும் இல்லை.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by nadhi » Sat Mar 17, 2012 8:48 pm

சில நல்ல உள்ளங்களும் உண்டு jana sir எல்லா டாக்டர் நல்லவங்கத்தான் ஏதோ பணம் என்ற ஒர் விஷியம் அதனால்த்தான் கண்டிப்பாக மதர்தெரேசா மாதிரி இல்லைனாலும். அதில் பாதி.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Wed Mar 21, 2012 2:10 am

கடவுளுக்கு அடுத்த நிலை உலகத்தில் ஆக்குதலுக்கும் அழித்தலுக்கும் கொடுக்கப்படுவது வைத்தியர்களுக்குத்தான் .. தங்கள் கடமையை உணர்ந்தாலே சிறப்பு... திருவண்ணாமலையில் 8 வது வகுப்பு படித்த ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்..அவரது டிகிரி M.B.B.S, M.D எனப் பெயர்ப்பலகையில் போடப்படடிருந்ததாக ஞாபகம் உள்ளது மக்கள் வழிப்பாக இருக்க வேண்டும்...
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RJanaki » Fri Mar 23, 2012 2:20 pm

திருவண்ணாமலையில் 8 வது வகுப்பு படித்த ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்..அவரது டிகிரி M.B.B.S, M.D எனப்
நினைக்கேவே பயமாக இருக்கு,இந்த போலி டாக்டர் எத்தனை பேர்க்கு வைத்தியம் செய்து இருப்பர்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by udayakumar » Sun Mar 25, 2012 10:49 pm

மருத்துவக் கல்லூரிகளில் எப்படி காப்பி அடிப்பது என பம்பல் கு சம்பந்தம் சொல்லிக் கொடுத்துள்ளார் அல்லவா .. இன்னும் நிறைய பேர் வருவார்கள்...
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”