உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 2:27 pm

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Wed Mar 07, 2012 3:23 pm

RukmaniRK wrote:
4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

.
ஏன் இப்ப என்னை பெயர் சொல்லி கூப்பிட்டிங்க?
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 3:28 pm

உங்க பேர சொல்லல. உங்களை கூப்பிடணும்னா வால் னு தான் கூப்பிடுவேன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Wed Mar 07, 2012 4:00 pm

RukmaniRK wrote:உங்க பேர சொல்லல. உங்களை கூப்பிடணும்னா வால் னு தான் கூப்பிடுவேன்
ஓஓஓஓஓஓஓஓஓஓ அது வேறயா? அப்ப சீக்கிரம் புது பேரோட சேட்டிபிக்கற் எடுத்து தாங்க
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 4:32 pm

அது என்னமா அது சேட்டிபிக்கற்.(சர்டிபிகேட்) ஆதி சார் படுகையில ஜாயின் பண்ண அதெல்லாம் கேக்கலையே.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Wed Mar 07, 2012 4:36 pm

நீங்க தானே என் பெயர மாத்திட்டிங்க அப்புறம் எப்படி புதுப்பெயருக்கு பெயர் மாத்தம் தேவை தானே!
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 4:43 pm

சர்டிபிகேட் எல்லாம் தேவை இல்ல. நீங்க ஒரு வால்னு ஊரே சொல்லும். இதுக்கு மேல ஒரு சர்டிபிகேட் வேணுமா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Wed Mar 07, 2012 4:55 pm

ஹலோ என்ன நடக்குது? இருங்க எனக்காக கதைக்க ஆக்கள் வருவாங்க. நீங்க இரண்டு பேரும் தான் வாலுகள். நான் இல்லப்பா
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 4:59 pm

அருந்தா பெரிய ஆள் தான்.. பேச கூட ஆள்கள் வச்சுருக்காங்கப்பா. ஹய்யோ எங்களுக்கு பயமா இருக்கு.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உணவு சாப்பிட்டபின் செய்யக்கூடாதவை

Post by Aruntha » Wed Mar 07, 2012 5:05 pm

RukmaniRK wrote:அருந்தா பெரிய ஆள் தான்.. பேச கூட ஆள்கள் வச்சுருக்காங்கப்பா. ஹய்யோ எங்களுக்கு பயமா இருக்கு.
அந்த பயம் இருந்தா சரி
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”