தலை அரிப்புக்கு தயிரும், வெந்தயமும் போதும்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

தலை அரிப்புக்கு தயிரும், வெந்தயமும் போதும்

Post by cm nair » Sun Dec 22, 2013 1:13 pm

கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம்

உஷ்ணம் நீக்கும் வெந்தயம்

வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து
பொடுகுத் தொல்லை தீரும்.

மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து
சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி,
தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

பாசிப்பயறு, தயிர்

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து
பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து
ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு
அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை, துளசி

பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.
எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை
பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி
ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம்
கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி,
கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன்
கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து
குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,
அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து
வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு
மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு
குளித்தாலும் பொடுகு நீங்கும்.

தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில்
சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.

மருதாணி இலை தூள்

வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து,
சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால்,
பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி,
தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம்
கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர
பொடுகு நீங்கும்.

தேங்காய் பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து,
சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு
மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து,
மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில்
தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”