வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:

Post by cm nair » Sun Dec 22, 2013 1:12 pm

a. இரத்த சோகை (Anaemia):

1. 1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1
மாதம் அருந்தவும்.

2. பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு

3. வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4
தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.

b. ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்:

1. வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.

c. தூக்கமின்மை:

1. 1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து
வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.

d. ஞாபகமறதி:

1. 5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து
தினமும் உண்ணவும்.

e. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று
அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த
விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.

f. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து
அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம்
உண்டாகும்.

g. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3,
மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு
அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

h. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால்
100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால்,
முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

i. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து
சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

j. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி,
தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள்
சரியாகும்.

k. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே
உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை
இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய்
குணமாகும்.

வீக்கம், கட்டிகள் மறைய:-

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி
ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.

அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக:-

இலைச்சாற்றைப் பிழிந்து சம அளவு நெய் சேர்ந்து பாதிக்கப்பட்ட இடத்தில்
பூசி வர வேண்டும்.


மூலிகைவளம்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”