ஆரோக்கியம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Fri Mar 30, 2012 9:25 am

மறுநாள் காலையிலயே நம்ம முன்னோர்கள் காப்பி குடிப்பதற்கு முன்னால் அதைத்தான் உப்பு சேர்த்து குடிப்பார்கள்
இந்த நீராகாரத்தின் மகிமையை, இப்போதுள்ள குழந்தைகள் ஆராய்ச்சி செய்து சொன்னால் கூட கடைப் பிடிக்க மறுக்கிறார்களே!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by muthulakshmi123 » Fri Mar 30, 2012 10:14 am

umajana1950 wrote:
மறுநாள் காலையிலயே நம்ம முன்னோர்கள் காப்பி குடிப்பதற்கு முன்னால் அதைத்தான் உப்பு சேர்த்து குடிப்பார்கள்
இந்த நீராகாரத்தின் மகிமையை, இப்போதுள்ள குழந்தைகள் ஆராய்ச்சி செய்து சொன்னால் கூட கடைப் பிடிக்க மறுக்கிறார்களே!
அதில் ஏதாவது கலர் போட்டு அழகு படுத்தினால் குடிப்பார்கள் என நினைக்கிறேன்...
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Fri Mar 30, 2012 1:19 pm

umajana1950 wrote:
இன்னும் பத்து இருபது வருடத்திற்கு பிறகு எல்லோருக்கும் சமச்சீர் உணவு தாராளமாக கிடைக்கும் .. எப்படியென்றால் .. விண்வெளி வீரர்களுக்கு வழங்குவது போல் மாத்திரை வடிவிலும்...ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல் சாக்லெட் வடிவத்திலும் பெற்றுக் கொள்ளலாம்...அந்நேரம் சமச்சீர் உணவை தயாரிப்பதற்கான பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே அரசாங்க வசம் இருக்கும் என கருதுகிறேன்.. உங்களுக்கு கிடைக்கக் கூடிய பிரஸ்ஸான காய்கறி எதுவுமே நினைத்தே பார்க்க முடியாது..
அப்படி சொல்லி விடமுடியாது. இப்போது தான் மக்கள் இயற்கை விஞ்ஞானத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் பழைய காலத்து முறைகளெல்லாம், புதிய வடிவில் செயலுக்கு வந்தாலும் வரலாம்.
இயற்கை என்னும் இடத்தில் விஞ்ஞானம் வந்து சேர்ந்துள்ளதல்லவா? அது தான் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது.. விவசாய நிலங்கள் வீட்டுமனைகள் ஆகிவருகிறது.. மக்கள் தொகை பெருகி வருகிறது ..இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது.. இப்போதே 4 முதல் 6 மாதத்தில் விளையும் பொன்னி அரிசி 45 நாட்களில் விளைய வைக்கப்படுகிறது..”அதற்கு பெயர் வேறு கன்னி பொன்னி ”இது உடலுக்கு நன்மை விளைவிக்குமா? இரசாயனங்கள் சேர்க்கப்பட்டு நீங்கள் சொன்ன இயற்கை விஞ்ஞானிகளின் தேவையை பூர்த்தி செய்யக் கண்டு பிடிக்கப்பட்ட புதிய விளைச்சல் முறை. natural foods என்பது காணாமல் போய் அவைதான் பிற்காலத்தில் மிகவும் விளையுயர்ந்த பொருட்களாக அரிதாக கிடைக்கக்கூடியவையாக இருக்கும்..
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Fri Mar 30, 2012 1:49 pm

சில விஷயங்கள் சொன்னால் புரியும். சில விஷயங்கள் பட்டால் தான் புரியும்.
நாமும் பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்று உற்பத்தியைப் பெருக்குவதற்குத்தான் நாம் விஞ்ஞானத்தின் உதவியை நாடினோம். அதன், பின் விளைவுகளைப் பற்றி அப்போது நாம் கவலைப் பட வில்லை. இவ்வளவு நாட்களுக்கு அப்புறம் இப்போது பின் விளைவுகள் நம்மை பயமுறுத்தத் தொடங்கியவுடன் மெல்ல மெல்ல இயற்கை முறையை மீண்டும் வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Fri Mar 30, 2012 1:59 pm

இது நாட்டின் நிலமை? கண்டிப்பாக நாடு செழிக்க வேண்டுமென்றால் இயற்கை விவசாயம் பெருக வேண்டும்..இது அரசாங்கத்தின் கைகளிலும் தங்கியுள்ளது...இன்று விவசாய நிலங்களை வீட்டு மனைகள் ஆக்கக்கூடாது என சட்டமே உண்டு .. ஆனால் நம் கண்முன்னாலேயே எத்தனையோ அறிவீனங்களை பார்க்க முடிகிறதல்லவா?

தேவை...வேளாண்மைத் துறையில் கவனம்

சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் சூடு பிடித்திருக்கும் சமயத்தில் இந்திய விவசாயிகள் மீது பலரும் கவனம் குவித்திருக்கின்றனர். எப்போதும் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கும் இவர்களுக்கு எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் முதலிடம் அளித்திருக்கின்றன. இந்த நாட்டின் மக்கள் தொகையில் அவர்கள் 60 சதவிகிதமாக இருக்கும் போது தேர்தலின் போது அவர்களை எந்த அரசியல் கட்சியாலும் ஒதுக்க முடியாது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு இவர்கள் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. இந்தியாவில் விவசாயம் 60 சதவிகிதம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது, ஆனால் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 17 சதவிகிதத்தை மட்டுமே அளிக்கிறது! தொடர்ந்து வந்த எல்லா அரசுகளும் விவசாயிகளை புறக்கணித்தே வந்திருக்கின்றன.

நமது விவசாயத்துறையில் தொழில்நுட்ப ரீதியாக இதுவரை எந்த பெரும் முன்னேற்றமும் இருந்ததில்லை. இன்றும் கிராமங்களில் பழங்கால முறையிலேயே விவசாயம் செய்யப்படுகிறது, இன்றும் விவசாயிகள் மாடுகளை பூட்டியே ஏர் உழுகிறார்கள். இதனால் ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தியின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. நமது நீர்ப்பாசன முறை மேம்படுத்தப்படவேயில்லை என்பதால் இந்தியாவில் விவசாயம் இன்றளவும் பெருமளவிற்கு மழையை நம்பியே இருக்கிறது. உணவு விவசாய கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 2003-2005 காலகட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு 3,034 கி.கி. மட்டுமே, ஆனால் சீனாவிலோ இது 6,233 கி.கி. ஆக இருக்கிறது. இதே நிலைதான் கோதுமை (ஒரு ஹெக்டேருக்கு இந்தியா 2,688 கி.கி. உற்பத்தி செய்ய சீனாவோ 4,155 கி.கி. உற்பத்தி செய்கிறது), கடுகு (இந்தியா 909 கி.கி., சீனா 1,778 கி.கி) ஆகியவற்றிலும் நிலவுகிறது! 2004ல் சீனாவின் மொத்த அரிசி உற்பத்தி 186 மில்லியன் டன், ஆனால் இந்தியாவின் உற்பத்தியோ 124 மில்லியன் டன். அது மட்டுமல்ல, இந்தியாவில் ஒரு ஹெக்டேரில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் 914 டாலராக இருக்க சீனாவில் அது 2780 டாலராகவும், கொரியாவில் 3530 டாலராகவும் இருக்கிறது.

2008ல் சீனாவில் விவசாயத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருந்தவர்கள் 39.6 சதவிகிதம், ஆனால் இந்தியாவிலோ அது 60 சதவிகிதம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17 சதவிகிதம் மட்டுமே. வளர்ச்சிப் பாதையில் செல்லும் எந்தவொரு நாடும் இயல்பாகவே விவசாயத்திலிருந்து, தொழிற்துறைக்கும் பின்னர் சேவைத்துறைக்கும் மாறும். இந்த விஷயத்தில் சீனாவை விட இந்தியா பின்தங்கியிருந்த போதிலும் (சீனாவில் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறைவு) இரு நாடுகளுக்குமிடையே பெரிய வித்தியாசமில்லை. ஆனால் தென் கொரியாவோ முற்றிலும் வேறுபட்டிருக்கிறது! அங்கு வெறும் 7.2 சதவிகித மக்களே விவ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்குக் காரணம் 1960களிலிருந்து அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும், அது மேற்குலக நாடுகளுடன் நெருக்கமாக இணைந்திருப்பதுமேயாகும். இந்தியாவில் இவ்வளவு பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் என்பது கவலைக்குரிய வகையிலிருக்கிறது. மேலும் இந்தியாவில் விவசாயத்தில் தேவைக்கு அதிகாமனவர்கள் ஈடுபட்டிருப்பதால் ஏரளமான மனித உழைப்பு வீணாகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 1994ல் 400 டாலராக இருந்த ஒரு விவசாயத் தொழிலாளியின் பங்களிப்பு 2009ல் 500 டாலராக உயர்ந்தது. அதாவது 25 சதவிகித உயர்வு. சீனாவிலோ ஒரு விவசாயத் தொழிலாளின் பங்களிப்பு 85 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்திலும் இந்தியா மற்றும் சீனாவை விட தென் கொரியா மிக மிக முன்னேறியிருக்கிறது. 1994ல் ஒரு விவசாயத் தொழிலாளியின் பங்களிப்பு 7000 டாலராக இருந்தது. இன்று அது 20,000 டாலராக உயர்ந்திருருக்கிறது. அதாவது 185 சதவிகித உயர்வு! இந்தியாவின் மொத்த விவசாய நிலம் 157.92 மில்லியன் ஹெக்டேர் (இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் இது 53.11 சதவிகிதம்), சீனாவில் மொத்த விவசாய நிலம் 110 மில்லியன் ஹெக்டேர் (சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 12 சதவிகிதம்), தென் கொரியாவின் மொத்த விவசாய நிலம் 1.60 மில்லியன் ஹெக்டேர் (தென் கொரியாவின் மொத்த நிலப்பரப்பில் 16 சதவிகிதம்). இந்த விவரங்களிலிருந்து இந்த நாடுகள் விவசாயத்தில் செய்திருக்கும் சாதனைகளை புரிந்துகொள்ளலாம்.

மிக நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் தென் கொரியா விவசாய உற்பத்தியில் செய்திருக்கும் சாதனையின் விளைவாக அங்கு ஊட்டச்சத்துக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை. சீனாவில் 1990&92ல் 18 சதவிகிதமாக இருந்த ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 2007ல் 10 சதவிகிதமாக குறைந்தது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவிலோ அது அவமானத்திற்குரிய வகையில் 20 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் ஊழல்களை பார்க்கிற போது இது ஆச்சர்யத்திற்குரியதல்ல. தொடர்ச்சியாக வந்த அரசுகள் கிடங்குகளில் தானியங்களை அழுக விட்ட நிலையில், பதுக்கலை ஊக்குவித்த நிலையில், வெங்காயத்தை தங்கத்தின் விலைக்கு உயரவிட்ட நிலையில், எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ளவிட்ட நிலையில் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! சொகுசுக் கார் வாங்க தரப்படும் கடனுக்கான வட்டியை விட விவசாயி வாங்கும் டிராக்டர் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும் நிலையில் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! இது விவசாயிக்கு மூலதனம் கிடைக்காத நிலையை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு நவீன கருவிகளும் தொழில்நுட்பங்களும் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு தனிநபருக்கு கிடைக்கும் உணவின் அளவும் இந்தியாவில் மோசமாகவே இருக்கிறது. இந்தியாவில் நாளொன்று ஒருவருக்கு கிடைப்பது வெறும் 2333 கேலரி மட்டுமே (1992லிருந்ததை விட இது 8 கேலரி அதிகம்). ஆனால் சீனாவில் இது 2947 கேலரி (1992லிருந்ததை விட 400 கேலரி அதிகம்). தென் கொரியாவிலோ இது 3104 கேலரியாக இருக்கிறது (1992ல்ஐது 3003 கேலரியாக இருந்தது). பசியின் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் மடிகின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பத்துறையில் செய்த முதலீடு, கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, விவசாயக் கொள்கைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் கொள்கைகளை வகுத்தது ஆகியவற்றின் காரணமாக விவசாயத்தில் சீனா பெரும் சாதனைகளை செய்ய முடிந்தது. 1995ல் ஆராய்ச்சித் துறையில் 4 பில்லியன் யுவானாக இருந்த முதலீடு 2006ல் 12 பில்லியனால உயர்ந்தது. இதன் விளைவாக விவசாயத்திற்கென 1000க்கும் அதிகமான ஆராய்ச்சி மையங்கள் உருவாயின. 2002ல் விவசாயத்துறையில் இந்தியா 79 காப்புரிமைகளை மட்டுமே செய்திருந்த நிலையில் சீனா 4500 காப்புரிமைகளை செய்திருந்தது, மேலும் அது 2008ல் 9300ஆக உயர்ந்தது. ஆனால் இந்தியாவில் 2003ல் 74ஆக இருந்த காப்புரிமைகள் 2004ல் 63ஆக குறைந்தது! 2000 - 2011 காலகட்டத்தில் இந்தியாவின் விவசாயத்துறைக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு 1.42 பில்லியன் டாலர், ஆனால் 1999 & 2006 காலகட்டத்தில் சீனா விவசாயத்துறைக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு 8.388 பில்லியன் டாலர்!

சீனா இன்று உலகின் தொழிலுற்பத்தி மையமாக விளங்குகிறது. ஆனால் அங்கு விவசாயத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறையவில்லை. 1977ல் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, குழு உடமையிலிருந்து தனிப்பட்ட குடும்பங்களுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. சீர்திருத்தங்களின் விளைவாக கிராமப்புற குடும்பங்களுக்கு விளைநிலங்கள் கிடைத்ததுடன், விவசாய உற்பத்தியும் பெருகியது. இதன் விளைவாக வறுமை குறைந்தது. சீனா வகுத்த விவசாயக் கொள்கைகளின் காரணமாக விவசாயத்திலிருந்து விலகிய மக்கள் கிராமப்புறங்களிலிருக்கும் விவசாயமல்லாத தொழிற்துறைகளுக்கு மாறினர். இதன் விளைவாக நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பது குறைந்தது. சீர்திருத்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்ளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

தென் கொரியாவில் வேறு மாதிரியன கொள்கைகள் வகுக்கப்பட்டன. பல வகையான பயிர்களுக்கும், விலங்குகளுக்கும் காப்பீடு வசதி விஸ்தரிக்கப்பட்டது. சுய சார்பை அடைவது மற்றும் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது ஆகிய விஷயங்களுக்கு தென் கொரிய அரசு முக்கியத்துவம் அளித்தது. மக்கள்தொகை பரவல், உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விவகாரங்கள், வருமானத்தில் நிலவும் சமத்துவமின்மை ஆகிய விஷயங்களிலும் தென் கொரிய அரசு கவனம் செலுத்தியது.

இந்தியாவில் படித்த விவசாயியை பார்ப்பது அரிது. விவசாய உற்பத்தி, உணவு விநியோகம், விவசாய தொழில்நுட்ப முன்னேற்றம் என எந்த விஷயத்திலும் தெளிவான கொள்கைகள் இல்லை. விவசாயத்தை பொருத்த வரை ஒரு முழுமையான தெளிவான கொள்கைத் திட்டத்தை வகுத்து நடமுறைப்படுத்துவதில் இந்தியா மிகவும் மெத்தனமாக இருக்கிறது. 2000ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதிதான் முதன்முறையாக இந்தியாவில் தேசிய விவசாய கொள்கை என்ற ஒன்றே அறிவிக்கப்பட்டது.. நிறைய கேள்விக்குறிகள் நம் எல்லோர் முன்னாலும்??? இதற்கான விடையில்தான் நாட்டில் எல்லாமே!!!!
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by udayakumar » Fri Mar 30, 2012 2:01 pm

5 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைந் துள்ளது. வேளாண் சாராத இதரப் பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் குறைந்துள் ளது என நாடாளுமன்றத் தில் செவ்வாய்க்கிழமை யன்று தெரிவிக்கப்பட்டது.

2003-04ம் ஆண்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது.

2008-09 ம் ஆண்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 385ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது

என மக்களவையில் வேளாண் துறை இணையமைச்சர் ஹரிஷ் ரவாத் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த விளைநிலங்கள்- கட்டிடங்கள், சாலைகள், ரயில்வே பணிகளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் உணவு தானிய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றும், விளைநிலம் சிறிய அளவு குறைந்துள்ளதால்,எந்த எதிர்மறை விளைவையும் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


விவசாய நிலங்களின் மீது நடக்கும் அநியாய ஆக்கிரமீப்பை எப்படியாது தொடர வேண்டும் என்ற லாபவெறி அப்பட்டமாக தெரிகிறது.

எதிர்கால சமூகத்தின் மீக துயரமான வாழ்வுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by muthulakshmi123 » Fri Mar 30, 2012 2:17 pm

udayakumar wrote:5 ஆண்டுகளில் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைந் துள்ளது. வேளாண் சாராத இதரப் பணிகளுக்கு அவை பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் குறைந்துள் ளது என நாடாளுமன்றத் தில் செவ்வாய்க்கிழமை யன்று தெரிவிக்கப்பட்டது.

2003-04ம் ஆண்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது.

2008-09 ம் ஆண்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 385ஹெக்டேர் நிலம் குறைந்துள்ளது

என மக்களவையில் வேளாண் துறை இணையமைச்சர் ஹரிஷ் ரவாத் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த விளைநிலங்கள்- கட்டிடங்கள், சாலைகள், ரயில்வே பணிகளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் உணவு தானிய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றும், விளைநிலம் சிறிய அளவு குறைந்துள்ளதால்,எந்த எதிர்மறை விளைவையும் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


விவசாய நிலங்களின் மீது நடக்கும் அநியாய ஆக்கிரமீப்பை எப்படியாது தொடர வேண்டும் என்ற லாபவெறி அப்பட்டமாக தெரிகிறது.

எதிர்கால சமூகத்தின் மீக துயரமான வாழ்வுக்கு நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

உதய் உங்கள் கருத்துக்கள் ஆழமாகவும்,உண்மையாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கு.பாராட்டுக்கள்..நீங்கள் கூறி இருப்பது முற்றிலும் சரியே. நாம் நம் இளைய சமுதாயத்திற்கு இக்கட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by umajana1950 » Fri Mar 30, 2012 4:50 pm

இந்தியாவில் படித்த விவசாயியை பார்ப்பது அரிது. விவசாய உற்பத்தி, உணவு விநியோகம், விவசாய தொழில்நுட்ப முன்னேற்றம் என எந்த விஷயத்திலும் தெளிவான கொள்கைகள் இல்லை. விவசாயத்தை பொருத்த வரை ஒரு முழுமையான தெளிவான கொள்கைத் திட்டத்தை வகுத்து நடமுறைப்படுத்துவதில் இந்தியா மிகவும் மெத்தனமாக இருக்கிறது.
விவசாயிகள் தேர்தலுக்கு மட்டுமே பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள் என்பது தான் உண்மை.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: ஆரோக்கியம்

Post by Oattakaran » Sat Mar 31, 2012 4:06 am

umajana1950 wrote:விவசாயிகள் தேர்தலுக்கு மட்டுமே பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள் என்பது தான் உண்மை.
உண்மைதான். ஆனால் இவர்களை தேர்தலில் நிறுத்தி ஜெயிக்கவைத்தாலும் அவர்களும் வந்து விவசாயிகளை பகடைக்காயத்தான் பயன்படுத்துவார்கள்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”