மாதவிலக்கு நின்ற பின்‏பு பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள்!

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

மாதவிலக்கு நின்ற பின்‏பு பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள்!

Post by cm nair » Fri Nov 22, 2013 9:59 am

மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம்.

கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத சுழற்சியை கொண்டுவரும். இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்க காரணமாக பிட்யூட்டரி சுரப்பி என்ற மூளையின் பகுதி FSH (Follicle stimulating Hormone)சுரக்கும்.

இதுவும் LH ன்ற ஹார்மோனும் கருப்பையை தூண்டும், முட்டை உருவாக வழி செய்யும். மாதவிடாயின் போது, இரத்தத்தில் ஈச்ட்ரோஜன்/ஈஸ்ட்ரடையால் அதிகரிக்க, FSH சுரப்பை கட்டுப்படுத்தும். ஆனால் பிரிமெனோபாஸ் போது இரத்தத்தில் ஈஸ்ட்ரடையால் அளவு குறையும்.

அது FSH சுரப்பதை தடை செய்யாமல், அது எப்போது அதிக அளவிலேயே இருக்கும். பெரி மெனோபாஸ் போது (35 வயது முதல் ஆரம்பிக்கலாம்) மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை என்று நாளாகி ஆரம்பித்து நிறைய உதிரப்போக்கு இருக்கும்.

ப்ரி மெனோபாஸ் போது தலை முடி உதிருதல், அடிக்கடி கோபம் அல்லது அழுகை போன்ற உணர்வுகள், வறட்சியான சருமம்,அதிக உடல் சூடு போல ஒரு உணர்வு வரும். கொலஸ்டிராலில் இருந்து ஈட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உருவாக NADPH என்ற ஒரு என்சைம் உதவும்.

மாதவிலக்கு நிற்கும் நிலையில் இந்த என்சைம் ஈட்ரோஜன் தயாரிப்புக்கு பதிலாக கொலஸ்டிராலின் உப பொருட்களை தரும். ஆகவே மாதவிலக்கு நிற்கும் பெண்களின் கொலஸ்டிரால் கூட வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஹாட் பிளாஷஸ் வர ஒரு காரணம்.

இதனாலேயே பெண்கள் செரிக்கும் திறன் குறையவும், உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது. மேலும் உணர்வு பூர்வமாக சில பிரச்சினைகள் வரும் போது, உண்பது சிலருக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் (soul food, comforting food) ஏற்கெனவே குறைந்த செரிமானம் இருப்பதால் இது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும்.

இந்த ஹார்மோன் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், நடுத்தர பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை பொதுவாக கேலி செய்யும் போக்கை காணலாம். இதனை சரிக்கட்ட கூடுதல் உடற்பயிற்சி, உணவில் இன்னும் அதிக கட்டுப்பாடு தேவையாய் இருக்கும். ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி் இதில் ஈடுபட்டிருப்பதால் ஸ்ட்ரெஸ் இந்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் நிலை (உண்ர்வு) ஏற்படுகிறது.

மருத்துவ சோதனைகள்:

* வருடம் ஒருமுறை மறக்காமல் பாப் டெஸ்ட், மற்றும் மேமோகிராம் கொள்ளவும்.

* குடும்பத்தில் புற்று நோய் சரித்திரம் இல்லாவிட்டாலும் மாறுபட்ட உணவு முறை, மற்றும் சுற்றுப்புறம் போன்றவை நம் புற்று நோய் வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

* ஆனால் மாதவிலக்கு நின்றபின் வருடம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரிடம் செல்வது அவசியம்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”