அழகு சிரிக்கிறது......

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

அழகு சிரிக்கிறது......

Post by cm nair » Sun Nov 17, 2013 9:49 pm

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.

அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க


* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும்,முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால்,கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற…இயற்கை மருத்துவ டிப்ஸ்

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும்,முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால்,கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தலைமுடி உதிர்வுக்கான 3 காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்

ரத்தசோகை:
ரத்த சோகை காரணமாக முடி உதிர்கிறது எனத் தெரிந்தால், அத்திப் பழம், பேரீச்சைப் பழம், இரும்புச் சத்து மருந்துகள், கரிசாலைக் கற்பக மாத்திரை இவற்றை உட்கொள்வதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்.

புரதச் சத்துக் குறைபாடு:
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புரதச்சத்து குறைபாடு ஏற்படும். இதனாலும் முடி உதிர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க, முட்டையின் வெள்ளைக்கரு, மீன் எண்ணெய் மாத்திரைகள், கேரட்,கரு வேப்பிலைப் பொடி தினம் ஒரு தேக்கரண்டி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்

மன அழுத்தம்:
அமுக்கரா அல்லது அஸ்வசுந்தா மருந்துகள் சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும். இவற்றைப் உட்கொண்டால், மன அழுத்தம் குறையும். தியானம், யோகா செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். தலைமுடி உதிர்வையும் தடுக்கும்.

நகங்களைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்……..

முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

* நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.

* சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், அடிக்கடி நகங்கள் உடையாமல் உறுதியாகும்.

* விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைக்க வேண்டும்.

* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

* மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்.

அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்

1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

2) கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.

3) ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

4) கருமையான உதடு சிவப்பாக - பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.

5) உப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து, அதில் ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்.

முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்…

உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்….


* எலுமிச்சை சாற்றை முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.


* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.


* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.


* பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.


* கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.

* பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.


* கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.


* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.


* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.


ஆகவே மேற்கூறிய சிலவற்றையெல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வெள்ளையாக வைத்துக் கொள்ளுங்கள்

கருப்புச் சாயம் (ஹேர் டை)
தலைமுடிக்கு சாயமிடும் போது தோலில் படாமல் பார்த்துக்-கொள்ள வேண்டும். பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்கும் சாயங்களில் ‘அமோனியா’ இருக்கிறது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதனால், எச்சரிகையாக இருக்க வேண்டும். ஒவ்வாமையும், அரிப்பும் சின்னச் சின்னக் கொப்புளங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. தலையில் சாயம் பூச உகந்த நேரம் மாலை அல்லது இரவு. பகலில் சாயத்தைப் பூசிக்-கொண்டு வெயிலில் சென்றால் அது தலை வழியாகக் கீழ் இறங்கி விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்தச் சாயம் தோல் வழியாகக் கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் கலக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. அந்த ரத்தத்தை சுத்திகரிக்கும்போது சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும் தோலில் உள்ள மெலனின் பாதிக்கப்பட்டு முகத்தில் நிற மாற்றத்தையும் ஏற்படுத்திவிடும். எனவே, முடிந்த வரை தலைச் சாயம் பூசுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா?
டீன் ஏஜ் பெண்களின் கவனத்துக்கு - உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா? இதற்கு காரணம் ஹார்மோன் பிரச்னைகளாக இருக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின்படி உணவுப் பழக்கம் மற்றும் யோகா செய்து வர, நல்ல பலன் கிடைக்கும். இயற்கை முறையில் இதற்கு தீர்வாக தீர்வாக சில‌ டிப்ஸ்...


கற்றாழையை உதட்டிற்கு மேலே தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம்.

வெள்ளரிக்காயின் சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் இருக்கும் கருமையான இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சில நாட்களிலேயே அதனை போக்கலாம்

எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் தயிர் கலந்து, கருப்பான இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சரும நோய்கள் போவதோடு, சருமமும் எண்ணெய் பசையுடன் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

சரும அழகுக்கு -
கடலை மாவுடன், மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

முடி வளர சித்தமருத்துவம்..

முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

பாத வெடிப்பு குணமாக மருத்துவ குறிப்புகள்

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

அதை போக்க சில எளிய வழிகள் இதோ:

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும்.

தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம். விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது. இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம்.

தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும். கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேய்க வேண்டும்.

மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும். மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

இதோ... இயற்கை டை!

''டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்... எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!'' என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை டெக்னிக்!

அவுரி இலை - 50 கிராம், மருதாணி இலை - 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க !!!
நம்மில் நிறைய நண்பர்களுக்கு முதுகில் பரு மற்றும் கொப்பளங்கள் இருப்பது உண்டு அதை நாம் கவனிப்பதே இல்லை . நாம் அதை அப்படியே விட்டு விடகூடாது .

முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுவிடுகின்றன. எனவே முதுகை அழகுகாக்க கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். முதுகை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

முதுகுக்கு ஸ்க்ரப் செய்யலாம்

குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப்போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை நன்கு தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். முதுகுப்

பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.

முதுகை `ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும்.

கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக

பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும்.

ஆலிவ் ஆயில் மற்றும் மசாஜ்

ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால்

முதுகு மென்மையாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து
முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும்.

முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து
கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும்.


கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்...

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.

அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது.

அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

1. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

2. 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழி.

3. சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

4. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும்.

மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்

தலைமுடி உதிராமல் இருக்க

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும் போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.
படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும் போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்துவிடும்.

2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. ஆகவே அப்போது இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டு மறுநாள் ஷாம்பு போட்டு குளித்துவிடலாம்.

அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெனில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கூந்தலை வளர்ச்சியடையும்.

3. கூந்தலானது நன்கு வளர வேண்டுமென்றால், படுக்கும் முன் கூந்தலை நன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யாது.

4. நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக் கொண்டு படுக்கலாம். அவ்வாறு செய்வதால் கூந்தலின் முனைகள் சிக்கு அடையாமல், முடிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.

மேலும் கூந்தலின் முனைகள் வெடிக்காமலும் இருக்கும். ஏற்கனவே வெடிப்புகள் இருந்தால், இனிமேல் வெடிப்புகள் வராமல் தடுக்கும்.

இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, உடலும் ஆரோக்கியம் அடையும். மேலும் டென்சன், தலைவலி, மன அழுத்தம் போன்றவையும் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.

அழகு சாதன ஆபத்து!

புதிது புதிதாகச் சந்தைக்கு வரும் அழகு சாதனங்களை வாங்கிக் குவிப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!
‘பாதரசம் கலந்த சோப்பு, க்ரீம், ஐ லைனர், மஸ்கரா, க்ளென்சிங் போன்ற அழகு சாதனங்களால் சிறுநீரகம் பழுதடைவதோடு, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களில் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம் வகைகளே 61 சதவிகிதம். பாதரசம் சருமத்தில் உள்ள மெலனின் என்கிற நிறமியுடன் சேர்ந்து சருமத்தை மேலும் வெள்ளையாக்க உதவுகிறது. தோல் பளிச்சென ஆனாலும், நாளடைவில், சருமம் பாதிக்கப்படும். அழகு சாதனப் பொருட்களின் லேபிளில் பாதரச அயோடைடு, பாதரச குளோரைடு, க்விக் சில்வர், பாதரச சல்பைடு, பாதரச ஆக்சைடு போன்றவை சேர்மானப் பொருட்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், பல அழகு சாதனப் பொருட்களில், பாதரச துணைப் பொருட்கள் சேர்ப்பதுபற்றிய எந்த விவரமும் லேபிளில் இருப்பது இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது. பாதரசம் கலந்த சோப் மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பிறக்கும் குழந்தைக்கு நரம்பு தொடர்பான பாதிப்பும் ஏற்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

முகம் பொலிவாகணுமா டோன்ட் ஒரி லேடீஸ்

கசகசாவுடன் எலுமிச்சைப்பழம் சாற்றை விட்டு நன்கு அரைத்து முகத்தில் தடவினால் கரும்படை மாறி சருமம் இயற்கை நிறத்தை பெறும்.
உருளைக்கிழங்கு சாறுடன் சமஅளவு தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் பளபளப்பாக மாறி அழகு கூடும்.

1 தேக்கரண்டி முட்டை கோஸ் சாறு, 1 தேக்கரண்டி ஈஸ்ட் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து முகம், காது பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.

நன்றாக பழுத்த பப்பாளி பழம், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும். துளசி, வேப்பிலை இரண்டையும் அரைத்து அத்துடன் சந்தன பவுடரை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

தேன் 1 தேக்கரண்டி, ஆரஞ்சு பழச்சாறு 1 தேக்கரண்டி, ரோஸ்வாட்டர் 1 தேக்கரண்டி, முல்தாணிமட்டித் தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

எலுமிச்சை சாறு, தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும். பாதாம் பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் அரை மணிநேரம் கழித்து, கழுவி வந்தால் முகம் பொன் நிறமாக மாறி வரும். வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தடவ பருக்கள் மறைவதுடன் முகம் சிவப்பாகும்.

முகத்தில் வழியும் எண்ணெய்க்கு முற்றுப்புள்ளி..

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழி வதை தடுக்கலாம் . வெள்ளரிச் சாற்றுடன், பால்பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக_காணப்படும் இதைதொடர்ந்து ஒருமாத காலமாவது பின்பற்றவேண்டும்.

தக்காளி பழத்தை நன்குபிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்தபின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டு படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் (அ) ஓட்ஸ்சேர்த்து அரைத்து முகத்தில்பூசி இருபது நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் பால் மற்றும் கேரட்துருவலை கலந்து முகத்தில் தடவி வந்தால் , அதிகமாக எண்ணெய் வழிவது கட்டுப்படும் . எண்ணெய் பசையுடன் கூடிய சருமத்தை உடையவர்கள் , அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். முகம் கழுவ சோப்பிற்குபதில் கடலை மாவு பயன் படுத்தலாம்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”