கடுகு எண்ணெய்---மருத்துவ குணங்கள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

கடுகு எண்ணெய்---மருத்துவ குணங்கள்

Post by cm nair » Sun Nov 17, 2013 9:33 pm

டுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும்,

தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது.

விஷத்தை கட்டுப்படுத்தும்

தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும்.இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

ஜீரணம் ஏற்படும்

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

மூட்டுவலி நீங்கும்

அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

ஆஸ்துமா, தலைவலி நீங்கும்

தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக்

காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: கடுகு எண்ணெய்---மருத்துவ குணங்கள்

Post by cm nair » Sun Nov 17, 2013 10:25 pm

கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா? கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள்.

கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும். ஒரு வாரம் வரை கூட இதனை செய்யலாம். கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம்.

முட்டிப் பகுதிகளின் கருமையைப் போக்க சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து குழைத்து தடவி வரவும். கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும். எலும்புகள் உறுதிபட கடுகு எண்ணெயை சூடாக்கி உடல் முழுதும் தடவி கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.


கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வை‌த்‌திரு‌ந்தா‌ல் வெடிப்புகள் மறையும். தலை முடி‌க்கு ஷாம்பூ வேண்டாம்! கடுகு 100, சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி ‌நிலை‌க்கு‌ம்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”