Page 1 of 1

அழகிய இனிய எனது தாயகம்

Posted: Sat Aug 31, 2013 11:07 pm
by cm nair
images-kerala.jpg
என்னுடைய ஊர் அழகிய கேரளத்தில் உள்ள திருச்சூர். திரிசூர் என்பது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இங்கு நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
பல பிரபலமான கோயில்கள் இந்ந்கரத்தில் உள்ளன. இங்குள்ள முதன்மையான திருத்தலம் 'வடக்குநாதன் கோவில்' என்றழைக்கப்படும் சிவபெருமானின் திருக்கோவிலாகும். இந்நகரின் மையத்தில் 65 ஏக்கர் பரப்புள்ள தேக்கின்காடு என்ற குன்று உள்ளது. அதன் நடுவே கேரளத்தின் புகழ்பெற்ற மாபெரும் ஆலயமான திருசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது, 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது.
இது கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.
ஆண்டுதோறும் மேமாதம் சித்திரை பூர நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன.பச்சை பசும் புல்வளியின் இரு புறமும் தென்னை,மாமரங்கள்ளும்,அதன் மீது பல குரல்களில் கீதமொலிக்கும் வண்ண பறவைகளும் ஒரு புறம் மலைமகளின் தூய வெண் சேலை நழுவி வீழுதது போல் கொட்டும் அருவியும் கண்ணிற்கும் மனதிற்கும் சுகம் தரும் ஊர். பழைய காலத்தின் வீடு . நான்கு தூன்கல்லும் கூடிய இல்லம்.அறுவடை தொழில். எங்கள் ஊர்-ல் மிக வீமர்சயாக கொண்டாடப்படும் திருவீழா திருச்சூர் பூரம்.பகவதியின் திரு நட்சத்திரமான பூரம் நாள்லில் கொண்டபடுவது .30க்கு மேற்பட்ட யானைகள்ளும் லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்ளும் சேர்த திருவீழா. சொல்லிகொண்டே போகலாம் ....அவ்வள்ளவு சீறப்பு வாய்தது என் இனிய தாயகம்.