Page 1 of 1

என் இனிய ஊர் ....

Posted: Mon Feb 18, 2013 3:17 pm
by mithrajani
என் ஊர் பள்ளத்துர். இப்ப காரைக்குடியீல் இருக்கிறோம்.

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும்.
பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த காரைக்குடி மற்றும்
புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர்.
அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த
கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது (2007 கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது.
நகரத்தார் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்கள் அவர்களால் வட்டகை எனும் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளன.
மேலவட்டகை, கீழப்பதூர் வட்டகை, கீழ வட்டகை, மேலபதூர் வட்டகை, பதினாறு வட்டகை, உறுதிக்கோட்டை வட்டகை போன்றவை.

இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ,வேறு சமுதாயத்திலோ கொள்வினை,
கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.

சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை ஆகும்.
காரைக்குடி இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும்.

ப. சிதம்பரம், இந்தியாவின் நிதி அமைச்சர்.
இராஜா சர் முத்தையா செட்டியார், சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் , இந்தியன் வங்கி நிறுவனர்

கல்வியாளர்கள்
இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், நிறுவனர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அழகப்பச் செட்டியார், நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம்
கருமுத்து.தியாகராசன் செட்டியார் தியாகராசர் கல்லூரி
டாக்டர்.நாகப்பன், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்
டாக்டர்.எம்.ராகவன், இயக்குனர், மத்திய மின் வேதியியல் மற்றும் ஆய்வு நிறுவனம்
திரு சேவுகன் அண்ணாமலை செட்டியார் நிறுவனர், சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லுரி

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.
6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
குடவரைக் கோயில்.
தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.

இன்னும் பலப் பல உள்ளன.

Re: என் இனிய ஊர் ....

Posted: Mon Feb 18, 2013 6:35 pm
by ஆதித்தன்
ஊர்னு சொல்லி பெரிய வரலாற்றினையே சுருங்க சொல்லிவிட்டீர்கள் .... சூப்பர்.


நன்றி