பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 6:27 am

தாய் வீடு
படுக்கப்பத்து

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

என்னைப் பற்றி அறிந்து கொள்ள உங்களுக்கு எல்லாம் ஆர்வமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுதான், இங்கு நான் பிறந்த ஊர் பற்றி சொல்ல உள்ளேன்.

என் பிறந்த ஊர் ஒன்றும் பெரிய நகரம் அல்ல, ரொம்ப சிறிய கிராமமும் இல்லை. ஆனால் கிராமம்.

இக்கிராமம், தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கிறது. அதற்காக, முக்கடலும் சங்கமிக்கும், கன்னியாகுமரியின் அருகில் இருக்கலாம் என்று நினைக்காதீர்கள், அங்கில்லை. எங்கள் கிராமம், தூத்துக்குடி மாவட்டம், திருஞ்செந்தூர்க்கும் தென்கோடியில் ஒர் 20 கிலோ மீட்டர், கடற்கரை மார்க்கமாக நோக்கினால் இருப்பது.

கடற்கரை மார்க்கம் என்று சொன்னதற்க்காக, இங்கே கடற்கரை இருக்கிறது என்று நினைக்காதீர்கள், கடலுக்கு நீர்செல்லும் தறுவைப்பாதை தான் இருக்கிறது. ஆனால், தண்ணீர் ஓடப் பார்க்க முடியவில்லை. இங்கிருந்து கடற்கரை ஒர் மூன்று கிலோ மீட்டர் அருகே இருக்கிறது.

திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, குலசேகரப்பட்டணம், மணப்பாடு, உவரி இவைகளுக்கு மத்தியில் இருக்கும் ஊர். அருகில் சுண்டங்கோட்டை, கொம்மடிக்கோட்டை என கோட்டைகள் இருக்கின்றன. ஆனால், மஹாராஜாக் கோட்டை கிடையாது.

எங்கள் கிராமம் ஒர் அடிப்படை நிறைவுப் பெற்ற சிறிய கிராமம் ஆகும். ஏன் என்றால் இங்கு, Indian Bank, ஆரம்ப சுகாதர நிலையம், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்விக் கூடம். Telephone Exchange, Electricity Board, Veterinary Hospital, Post Office, Co-operative Bank, Library அண்டு கிராம பஞ்சாயத்து என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

மேல் படத்தில் இருப்பது ஊரின் பொதுக்கோயிலான வெயிலுகந்தம்மன் கோவில் சப்பரம். இதனை ஊர் நடுவிலிருந்து பலர் இணைந்து தலையில் சுமந்து கொண்டு, 2+ கிலோ மீட்டர்க்கு அப்பால் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் செல்வர் என்பது சுற்று வட்டாரத்தில் எங்குமில்லாத சிறப்பு. அதுவும், இப்போது, சப்பரத்தின் உயரம் 2.5 அடி குறைந்துவிட்டது, முன்பு இதனை விடவும் உயரமாகவும் பெரியதாகவும் நான் சிறியவனாக இருந்த பொழுது இருந்திருக்கிறது. இப்பொழுதும் அவ்வப் பெரியதாக இருந்தால் தன் பிள்ளைகள் தலையில் சுமந்துவிடுவார்களா? என்று சாமியே அச்சப்பட்டு, உயரத்தினை குறைத்திவிட்டாதோ என்னவோ :wae:

இத்தனைக்கும் பெருமைக்குரிய படுக்கப்பத்து-தான் நான் பிரந்த ஊர், சுருக்கமாக படுகை. அதுவே நமது வலை தளத்தின் பெயர் காரணம்.
RJanaki wrote:படுகை என்ன அர்த்தம் எனக்கு தினமும் எனக்குள்
பதில் இன்று கிடைத்து விட்டது.
ஆமாம், எங்கள் ஊர் அமைந்துள்ள பகுதி சின்ன சின்ன தறுவைகள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் படுகை பத்து என பெயர் வந்ததாகவும்.. பின்னர் படுக்கப்பத்து என வழங்களாயிற்று எனவும் கூறுவர். ஆனால், இப்பொழுது எங்கள் தறுவையில் தண்ணீர் இல்லை என்பதுதான் கவலையான தகவல்!!!!!!

மறக்க முடியுமா?
பிறந்த ஊரையும்.... வளர்ந்த மண்ணையும்...


உங்களது ஊரைப்பற்றியும் நீங்கள் எழுதினால் மகிழ்ச்சியடைவேன்.

நன்றி.


(தறுவை - நீர் தேங்கி வழிந்து ஒடும் பகுதி)
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by umajana1950 » Fri Mar 09, 2012 11:28 pm

படுகை பிறந்த கதை நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக பிறந்த மண்ணை யாராலும் மறக்க முடியாது; அது எப்படி இருந்தாலும். அதனால் தான் அதை தாய் மண் என்று சொல்லுகிறோம். தாய் என்பவள், தன் குழந்தை எப்படி இருந்தாலும் நேசிக்கும் குணம் உடையவளாக இருப்பது தான் காரணம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 8:23 pm

பிறந்த மண்னையும் பிரியாத மனத்தையும் அருமையாக வெளிப்படுத்தி விட்டீர்கள் ஆதித்தன் சார், பாராட்டுக்கள்..
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by nadhi » Sat Mar 10, 2012 9:35 pm

ஆதி சார் உங்களது பிறந்த ஊரை படுகை.காம் மாக மாற்றி விட்டிர்கள் உங்களது ஊரின் வரலாறு தெரிந்துகொண்டோம். இரவு வணக்கம் ஆதி sir :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 10:42 pm

பின்னூட்டம் வாயிலாக ஊக்கப்படுத்திய ஜனா சார், லெட்சுமியம்மா மற்றும் நதிக்கு நன்றி.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by Oattakaran » Mon Mar 12, 2012 9:07 am

ஆதித்தன் சார் அவர்களுக்கு காலை வணக்கம்

தங்களது ஊர் படுக்கபத்து என்று இன்றுதான் எனக்கு தெரியும் நான் தங்களது ஊருக்கு அதிக தடவை வந்திருக்கிறேன் எனது மாமாவின் சொந்த ஊர் தங்களது ஊர்தான் அந்த ஊரில் உள்ள மாசானமுத்து கோவில் திருவிழாவிற்கு நான் எப்பொழுதும் வருவேன்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:44 am

Oattakaran wrote:ஆதித்தன் சார் அவர்களுக்கு காலை வணக்கம்

தங்களது ஊர் படுக்கபத்து என்று இன்றுதான் எனக்கு தெரியும் நான் தங்களது ஊருக்கு அதிக தடவை வந்திருக்கிறேன் எனது மாமாவின் சொந்த ஊர் தங்களது ஊர்தான் அந்த ஊரில் உள்ள மாசானமுத்து கோவில் திருவிழாவிற்கு நான் எப்பொழுதும் வருவேன்
இனி நீங்களும் ஆதித்தன் சாரும் வருடா வருடம் சந்தித்துக் கொள்வீர்கள் அப்படி தானே?///
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:07 pm

Oattakaran wrote:ஊரில் உள்ள மாசானமுத்து கோவில் திருவிழாவிற்கு நான் எப்பொழுதும் வருவேன்
தங்களது மாமாவிற்கு மறக்குடியா?

நல்லது.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by Oattakaran » Tue Mar 13, 2012 7:38 am

சரியாக கண்டறிந்து விட்டீர்க்ள் எப்படி என்று சொல்லுங்கள் ஆதிசார் அவாகளே. தாங்களும் அந்த கோவிலுக்கு வருவீர்க்ள் என்றால் தாங்களும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்

Post by ஆதித்தன் » Tue Mar 13, 2012 8:46 am

Oattakaran wrote:சரியாக கண்டறிந்து விட்டீர்க்ள் எப்படி என்று சொல்லுங்கள் ஆதிசார் அவாகளே. தாங்களும் அந்த கோவிலுக்கு வருவீர்க்ள் என்றால் தாங்களும்?
படுக்கப்பத்தின் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதுதான் மறக்குடி.


எனக்கு அந்த கோயில் இருக்குமிடத்தினை சரியாக சொன்னால் தெரிய வாய்ப்பிருக்கிறது. மற்றபடி பெயரினை வைத்து என்னால் கண்டு பிடிக்கத் தெரியாது. ஏனெனில், அங்குள்ள கோயில் எதற்கும் நான் செல்வதில்லை.

பெரும்பாலும், அது இருக்குமிடம் அழகப்பபுரம் செல்லும் ரோட்டில், சின்னத்துரை வீட்டின் அருகே இருக்கும் கோயில் என நினைக்கிறேன்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”