Page 1 of 1

பாபநாசத்தில் குளித்தால் பாவம் போகும்

Posted: Sun Jul 05, 2015 7:05 pm
by kavinayagam
நண்பா என் ஊரைப்பற்றி பார்க்கலாமா
என் ஊர் பாபநாசம். இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.எங்கள் ஊரில் பெரிய டேம் உள்ளது.அதற்கும் பாபநாசம் டேம் என்று பெயர்.மேலும் எங்கள் ஊரில் ஒரு சிவன் கோவிலும்.மசூதியும்,சர்ஸ்ம் உள்ளது.ஊருக்கு மேல் மலையில் அகஸ்த்தியர் அருவி உள்ளது. அதில் குளிக்க குளிக்க இன்பமாக இருக்கும்.அதற்கும் மேல் காரையார்,சேர்வலார் போன்ற டேம் நிறைந்த இடங்களும் உள்ளது.நான் PLWA மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதுவரை எங்கள் பள்ளி உயர்நிலை பள்ளியாக இருந்தது.மேலும் ஒர் கிறுஸ்தவ பள்ளிகூடமும் உண்டு.ஊருக்கு பின்புரம் பெரிய மலை உள்ளது.அங்கே தான் நாங்கள் மாலையில் விளையாடுவோம்.தாய்சினீஸ்,கோதண்டராம்,போன்ற திரையரங்குகளும் உள்ளது.என் வீட்டிற்கு அருகில் குளம் ஒன்றும் உண்டு.அருகில் மாமர தோட்டமும் பார்க்க அழகாக இருக்கும்.ஆண்டிற்க்கு ஒரு முறை நடக்கும் சித்திரை விசு திருவிழா பத்து நாட்கள் மிக கோலாகலமாக நடக்கும்.ஒன்பதவது திருநாளன்று தேர் ஊர்வலமும்,பத்தாவது திருநாளான விசு அன்று சுற்று வட்டார ஊர்களில் இருந்து வரும் மக்கள் கூட்டமாககாண வருவர்.பத்து நாட்களும் இரவில் வான வேடிக்கையும்,கலைநிகழ்ச்சிகளும் மிகச்சிறப்பாக நட்க்கும். நண்பர்களே விழாவைக்காண வருகிறீர்களா .அன்போடு வரவேற்கிறேன்.

Re: பாபநாசத்தில் குளித்தால் பாவம் போகும்

Posted: Sun Jul 05, 2015 10:17 pm
by marmayogi
உங்கள் ஊர் அருமை . கண்டீபாக அகத்தியர் அருவிக்கு வருகிறேன்.

அவரவர் பாவ கணக்கை அவரவர் தலையிலேயே எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது என்று நபிகள்நாயகம் கூறுகிறார். எந்த நதியில் குளித்தாலும் பாவம் போகாது. அது ஒரு கட்டுகதை. அப்படி யாரும் ஆற்றில், நதியில் குழித்து பாவத்தை போக்கி இறைநிலை அடைந்ததாக சரித்திரம் இல்லை. சொல்லால் மட்டும் எதையும் நம்பாமல் சுயமாய் சிந்தித்தே தெளிவு பெற வேண்டும். கர்மவினை பாவத்தை போக்க ஒரே ஒரு வழி தனக்குள் பயணித்தால் மட்டுமே அது சாத்தியம். எதையும் செய்யாமல் சும்மா இருந்தாலே போதும் பாவ பதிவுகள் வராது. நாமே பாவ பதிவை உருவாக்கிவிட்டு கோவில் கோவிலாக அலைந்தால் எந்த சாமியும் நமக்கு வரம் கொடுக்காது.