சகோதர சகோதரிகளே,நான் பிறந்த ஊர் திண்டுக்கல்.

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

சகோதர சகோதரிகளே,நான் பிறந்த ஊர் திண்டுக்கல்.

Post by NRMkrishna » Wed Jan 15, 2014 8:27 pm

சகோதர சகோதரிகளே,

நான் பிறந்த ஊர் திண்டுக்கல்......என் ஊரை பற்றி சொல்வதற்க்கு நிரைய விசயங்கள் உள்ளது....

திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.

வரலாறு:

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று .


மலைக்கோட்டை கோவில்:

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: சகோதர சகோதரிகளே,நான் பிறந்த ஊர் திண்டுக்கல்.

Post by சாந்தி » Thu Jan 16, 2014 6:36 pm

என்னுடைய ஊர் திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமம்...
சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகருக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது...
நான் படித்த ஸ்கூல் தம்பித்தோட்டம் ஹையர் செகண்டரி ....
என்னுடைய அம்மா, அப்பா இருந்தவரைக்கும் காந்திகிராமத்திற்கு விடுமுறை நாட்களில் வருவேன்...
என் அப்பா 2003-ல் இறந்துவிட்டார்...
என் அம்மாவும் 2013 செப்டம்பர் 8-ந் தேதி இறந்துவிட்டார்...
என் பெரிய அண்ணன் மட்டும் தற்போது காந்திகிராமத்தில் இருக்கிறார்...
Gandhigram Rural University Library-ல் Assistant Librarian-ஆக வேலை பார்க்கிறார்...

ஆதித்தன் சார் படுகை மூலம் online-ல் earn பண்ணுவது எப்படி என்று நிறைய தகவல்கள் கொடுத்திருப்பார்..
அதன்படி செய்தீர்கள் என்றால் நீங்களும் சம்பாரிக்க ஆரம்பிக்கலாம்...

:rock: :thanks:

வாழ்த்துக்கள்....
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

Re: சகோதர சகோதரிகளே,நான் பிறந்த ஊர் திண்டுக்கல்.

Post by NRMkrishna » Sat Jan 18, 2014 12:00 pm

உங்களுடைய கருத்துக்களைப் பதிவுச் செய்ததற்க்கு நன்றி சாந்தி அவர்களே.....கண்டிப்பாக நானும் சாதித்துக் காட்டுவேன்........
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: சகோதர சகோதரிகளே,நான் பிறந்த ஊர் திண்டுக்கல்.

Post by redroses » Tue Jan 21, 2014 11:26 am

அட நம்ப பழனி ஊரு, எனக்கும் திண்டுக்கல் பிடிக்கும்
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”