கதகேளு,கதகேளு... கம்பம் கதகேளு....

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
vijijo2003
Posts: 3
Joined: Fri Oct 04, 2013 7:54 pm
Cash on hand: Locked

கதகேளு,கதகேளு... கம்பம் கதகேளு....

Post by vijijo2003 » Fri Nov 29, 2013 2:23 pm

முன்ன ஒரு காலத்துல....இப்பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு, சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி மன்னர் சிலையை எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு, "கம்பராயப் பெருமாள்' என்ற திருநாமம் சூட்டினார். அதைத்தொடர்ந்து அந்த ஊருக்கும், "கம்பம்' என்றே பெயர் வைத்தார்.

திருமலை நாயக்கரின் தளபதி உத்தப்ப நாயக்கன் தலைமையில் வந்த படைகள் சேரமன்னனை தோற்கடித்து வெற்றிக்கம்பத்தை இங்கு நாட்டியத்தால் "கம்பம்' என்று பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்...
PRABUSHREE
Posts: 9
Joined: Fri Nov 15, 2013 8:52 pm
Cash on hand: Locked

Re: கதகேளு,கதகேளு... கம்பம் கதகேளு....

Post by PRABUSHREE » Fri Nov 29, 2013 10:27 pm

உண்மைதான் விஜி........ இது கதை அல்ல, வரலாறு.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”