Page 1 of 1

பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்டுரைப் போட்டி

Posted: Mon Aug 06, 2012 8:33 pm
by ஆதித்தன்
"மது - தமிழகமும் மதுவும்"
தலைப்பினைக் கொண்டு கட்டுரை எழுதும்
பரிசுப் போட்டி
இன்றைய சமூகத்தின் முக்கியச் சொல்லாக அமைந்திருப்பது மது. அது இன்று மட்டும் அல்ல, பண்டைய காலம் முதலே என்ற வாதமும் வரலாம். ஆனாலும், அது வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒற்றத் தீர்வைக் காண வேண்டும் என்பதுதான் இக்கட்டுரைப் போட்டியின் முக்கிய நோக்கம். ஆகையால் "மது - தமிழகமும் மதுவும்" என்ற தலைப்பில் விரிவான தொலைநோக்குப் பார்வையுடனும், அன்றாட வாழ்வியல் சூழலுடனும், அரசின் நிலையையும், குடும்பத்தின் எதிர்பார்ப்பு, மது விலக்கு, மது ஒர் உற்சாக பாணம், முன்னோரின் பனை கள், அரசின் வருவாயில் மதுவின் பங்கு, மது விலக்கின் அவசியம், மதுவின் நன்மை, டாஸ்மார்க்கால் சீரழியும் இளைய சமுதாயம், மதுக்கடை ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, மாணவனும் டாஸ்மாக்கும் (TASMAC), மதுவால் சீரழிந்த குடும்பம் - உண்மைச் சம்பவம் என பல கோணங்களிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

கட்டுரைகளுக்கு தலா ரூபாய்.100/-

கட்டுரை எழுத வேண்டிய தலைப்பு
மது - மதுவும் தமிழகமும்

எழுதும் கட்டுரைகளை இன்று முதலே நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

போட்டியின் நோக்கம், மதுவினை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அறிவிக்கப்பட்டது என்றாலும், கட்டுரையை வடிக்க எடுத்துக் கொள்ளும் பொன்னான நேரத்தினைக் கணக்கில் கொண்டு இச்சிறு தொகையை பரிசாக அறிவித்துள்ளோம். அதே நேரத்தில் பரிசுத் தொகை பகிர்வு முதலில் வரும் சிறந்த 100 கட்டுரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதனை அறிந்து விவேகமாக செயல்படுங்கள்.

விதிமுறைகள்:
[*] கட்டுரை கொடுக்கப்பட்ட வார்த்தையை மையமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும்
[*] 60 அடிகளுக்கு குறைவில்லாமல், சொந்த எழுத்து நடையில் இருத்தல் வேண்டும்.
[*] கட்டுரையை இப்பதிவின் பின்னூட்டமாக பதிந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

[*] இங்கு பதியப்படும் கட்டுரை வேறு தளங்களில் வெளியிடப்பட்டிருத்தல் கூடாது மற்றும் வெளியிடக் கூடாது.
[*] ஒருவர் எழுதிய கட்டுரையைப் போன்றே மற்றொருவர் மீள் படிவம் போன்று நகல் எடுத்து எழுதுதல் கூடாது.
[*] கட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற சொற்றொடருடனும் பிழையின்றியும் இருக்க வேண்டும்.
[*] ஒருவரிடம் இருந்து அதிகபட்சம் 1 கட்டுரை மட்டுமே ஏற்கப்படும். தங்களது ஓர் கட்டுரை ஏற்கப்படும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.
[*] கட்டுரைக்கான பரிசுத் தொகை, உங்களது படுகை கணக்கில் வரவு(Cash Balance) வைக்கப்படும். அதனை குறைந்தப் பற்றத் தகுதித் தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.
[*] கட்டுரைகளை ஏற்றுக் கொள்வது என்பது படுகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
[*] போட்டியின் நடு நடுவே கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டு ஏற்கப்பட்ட கட்டுரைகளின் விவரம் அறிவிக்கப்படும்.
[*] இடையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிசுத் தொகையை மாற்றியமைக்கவும் படுகை நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதனை மறவாதீர்.
[*] இவ்வாய்ப்பினை என்று வேண்டுமானாலும் அறிவிப்பின்றி நிறுத்தம் செய்யவும் படுகை உரிமம் கொண்டுள்ளது.

:thanks:
அன்புடன் ஆதித்தன்
நாள் : ஆகஸ்ட் 06- 2012
[/color][/b]
Image
பரிசு பெற்றக் கட்டுரைகளின் பதிவு முகவரிகள்:

விரைவில்...

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்டுரைப் போட்டி

Posted: Sun Aug 12, 2012 2:48 pm
by சாந்தி
Image"மது-தமிழகமும் மதுவும்"

முன்னரை:-

இந்தக் கட்டுரையில்"மது-தமிழகமும் மதுவும்"என்ற தலைப்பின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

மது அருந்துபவர்களின் நிலை:-

பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை மது அருந்துகிறார்கள். எத்தனையோ குடும்பங்கள் மது அருந்துவதால் சீரழிந்து போயிருக்கிறது தெரியுமா? மது ஒரு உற்சாக பானம் என்கிறார்கள். ஆனால் அதை அருந்துவதால் எததனை தீமைகள் விளையும் என்று தெரிந்திருந்தும் அதைத் தொடர்ந்துஅருந்துகிறார்கள். மது அருந்துவதால் உடம்பே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதயமும், கல்லீரலும் வெகுவாகப் பாதிக்கப்படும். மது அருந்துவதால் அவர்களுக்கு நோய் வந்தால்கூட யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். நண்பர்களிடம்
தேவையில்லாவைகளைப்பற்றி பேசி பகை உண்டாக்கிக் கொள்வார்கள். நண்பர்கள் எல்லாம் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள். மது அருந்துபவர்கள் உண்மையைச்சொன்னால்கூட ஏதோ குடி போதையில் உளறுகிறான் என்றுதான் சொல்வார்கள். மது அருந்திவிட்டு தெருவில் கண்ட இடங்களிலும் விழுந்து கிடப்பது, தேவையில்லாத அசிங்கம் பண்ணி வைபப்து..........அவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். அவர்களை யாருமே மதிக்கமாட்டார்கள்.சமுதாயமும் குடும்பமும் அவர்களை ஒதுக்கி வைத்துவிடும்.

சம்பாதிக்கும் வருமானம் முழுவதும் மது அருந்துவதற்கே செலவிடுவதால், குடும்மே பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். சேமிப்பு என்பதே இல்லாமல் போய்விடும். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் இழந்து ......... கணவன் மனைவி பிரியும் அபாயம் நேரும். குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படும். மது அருந்தும் பழக்கத்தால் திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். குடி போதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

மாணவர்கள் பரீட்சையில் தோற்பது....... காதலில் தோல்வி ஆகிய காரணங்களால் மது அருந்த ஆரம்பிக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் ஏதாவது விருந்து கொடுக்க வேண்டுமென்றால்........உடனே மதுபான கடைக்குச் சென்றுதான் விருந்து கொடுக்கிறார்கள்.
இது அவசியமற்றது. மக்கள் யோசிப்பார்களா?

மது விற்பனையில் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது என்றாலும் மக்களின் நலன் கருதி மதுபானக் கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கு திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன்...........

என்னுடன் வேலை பார்த்த ஒருவர் ஒரு நாள் அவருடைய வீட்டின் முன்னால் இருக்கும் கதவை பூட்டு போட்டு பூட்டிவிட்டு...... பின்னால் இருக்கும் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு மது அருந்திக் கொண்டிருந்தார். இது வேறு யாருக்குமே தெரியாது. அவருடைய நண்பர்கள் அவரைக் இரண்டு நாட்களாக காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடினார்கள். எங்கேயும் காணவில்லை. பிறகுதான் சந்தேகம் வந்து அவருடைய வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தால், அவர் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் குளிக்கும் அறையில் விழுந்து கிடந்திருக்கிறார். பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்து பெரும்பாடுபட்டு பிழைக்க வைத்தனர். இந்த நிகழ்ச்சி அவருடைய திருமணத்திற்கு முன்பு நடந்தது.

இப்பொழுது சொல்லப் போவது அவருடைய திருமணத்திற்கு பின்பு நடந்த நிகழ்ச்சி. திருமணத்திற்கு பிறகும் அவர் மது அருந்துவதை நிறுத்தவில்லை. இரண்டு பெண் குழந்தைகள் வேறு. இதனால் அவருடைய மனைவிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு தற்பொழுது பைத்தியமாக இருக்கிறார். அவர் வீட்டிற்கே வருவதில்லை. அந்த இரண்டு பெண்களின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போல்தான் தமிழ்நாட்டிலேயே எத்தனை குடும்பங்கள் இந்த மது என்னும் அரக்கனால் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது தெரியுமா?

முடிவுரை:-
குடி குடியைக் கெடுக்கும்
ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் மது அருந்துபவர்களாக இருந்தாலும், அந்த நாட்களில் மட்டும்
தங்களைக்கட்டுப்படுத்திக் கொண்டு மது அருந்தாமல் இருப்பதை தொடர்ந்து கடைப்பிடிக்கலாமே........தியானம் பண்ணலாம்.....

இந்தியாவிலேயே குஜராத் மாநிலம்தான் மதுவை முற்றிலும் ஒழித்த மாநிலமாகக் கருதப்படுகிறது. அதே போல் நம் தமிழ்நாட்டிலும் மதுவிலக்குத் திட்டத்தை தீவிரமாக அமுல் படுத்தினால் நம் நாட்டையும்.......நாட்டு மக்களையும் காப்பாற்றலாமே!

Image

:walk: :walk: :walk: :walk: :walk:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்டுரைப் போட்டி

Posted: Sun Aug 26, 2012 10:33 pm
by ஆதித்தன்
முதலாவது வந்து சிறப்பாக கட்டுரையைக் கொடுத்த ஷான்பூவிற்கு என் அன்பான வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, வெறிச்சோடி கிடக்கும் களத்தில் சில மூட்டைப்பூச்சிகளை விசிறி விடுகிறேன்.. அதுவாவது உசுப்பேற்றுகிறாதா என்று ... :grain:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்டுரைப் போட்டி

Posted: Mon Aug 27, 2012 8:39 am
by சாந்தி
ஆதி சார்,
என்னை நீங்கள் பாராட்டியிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
:thanks: :thanks: :thanks:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்டுரைப் போட்டி

Posted: Mon Aug 27, 2012 11:44 pm
by ஆதித்தன்
மதுவிலக்கல்ல - மது ஒழிப்பு


நாட்டின் இன்றைய தூணாகிய எனக்கு மது என்று சொன்னதும் அதுவும் தமிழகமும் மதுவும் என்று சொல்லிக் கட்டுரை எழுதச் சொன்னதும் நினைவில் வருவது, தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் தமிழக அரசு நிறுவனமாகிய "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்" என்பதனைச் சுருக்கமாக "TASMAC" (TAmailnadu State MArketing Corpration) அல்லது டாஸ்மாக் என்று எல்லோரும் அழைக்கப்படும் டாஸ்மார்க்-த்தான். நாட்டின் குடிமக்கள் நிறுவிய அரசு, அம்மக்களை குடிகாரராக மாற்ற உதவும் அரசின் கரம் தான் டாஸ்மாக் என்றால் மிகையாகாது. ஏனெனில் தமிழகத்தில் மது பானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கும் ஏகபோக உரிமையை இந்த டாஸ்மாக் மட்டும் தான் பெற்றுள்ளது. அதுவும் எம்.ஜி.ஆர் எனச் செல்லமாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் 1983-ஆம் ஆண்டு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டுவிட்டது என்றாலும், 2003-ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, அதனை மது மொத்த விற்பனை மட்டும் அல்லாது சில்லறை விற்பனையையும் செய்ய இறக்கிவிட்டப்பின் தான், டாஸ்மாக் இத்தனை பிரபலம். அதுவரை டாஸ்மாக் என்றால் யாருக்குத் தெரியும்?? உங்களுக்குத் தெரியுமா? ஆனால் இன்று டாஸ்மாக் என்றால் பள்ளி சிறார் வரை தெரிகிறது. இவ்வாறு அசுர வளர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் அரசு நிறுவனமாகிய டாஸ்மாக்கிற்கு முழுக்கு இட வேண்டும் என்பதே இக்கட்டுரைப் போட்டியின் விருப்பமாக இருப்பதால் நானும் மதுவிலக்குப் பற்றியே தொடர்கிறேன்...

மதுவிலக்கு:

மதுவிலக்கு என்ற வார்த்தை மிக நீண்ட ஆண்டுகளாக நம் தமிழகத்தினை ஆண்டு வந்துள்ளது என்பதனை இவ்வாய்ப்பின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். முதன் முதலில் 1937-ஆம் ஆண்டில் "மதுவிலக்கு" தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அது நீண்டு 2001-ஆம் ஆண்டு வரை மது விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தது என்பதனை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், இடையில் 1971-74(மு.கருணாநிதி) , 1983-87(எம். ஜி. இராமச்சந்திரன்) & 1990 -91 (மு. கருணாநிதி)ஆக மொத்தம் 8 வருடம் இத்தடையினை தமிழக அரசு தளர்த்தியுள்ளது என்பதனை அறியும் பொழுது வருத்தமாக உள்ளது. முதன் முதலில் மதுவிலக்கை காங்கிரஸ் கட்சிதான் தான் ஆட்சியில் இருக்கும் பொழுது கொண்டுவந்துள்ளது. அதனை திராவிடக் கட்சிகளும் ஆதரித்தன என்பதும் எல்லோர்க்கும் தெரியும். அதே நேரத்தில் திராவிடக் கட்சியான தி.மு.க. தான் மதுவிலக்கு சட்டத்தினை தளர்த்தியுள்ளது. பின்னர், மதுவினை ஓழிக்க வேண்டும் என்று சிறப்பு கட்டுரையை ஆ.விகடனில் எழுதிய எம்.ஜி.ஆர் அவர்களே தன் ஆட்சியில் மதுவிலக்குச் சட்டத்தினை தளர்த்தி, மது மொத்த விற்பனைக்கு என ஒர் அரசு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார் என்பதனை அறியும் பொழுது கொள்கை என்பது ஒர் பேச்சுத்தானா? என்ற கேள்வி எழாமல் இல்லை. பின் அவர்களே தடையும், பின்னர் திமுக அரசு தடை தளர்த்தியும் என்று நீண்ட விளையாட்டுக்கு முற்றுப்புள்ளியாய் தமிழக அரசின் ஆட்சிப்பீடத்தைப் பிடித்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்குச் சட்டத்தை விலக்கி விட்டு, 2001 ஆம் ஆண்டு மது விற்பனையை ஆரம்பித்துள்ளார். பின்னர், 2003 ஆம் ஆண்டு சில்லறை விற்பனையும் டாஸ்மாக் மூலம் ஆரம்பித்துள்ளார் என்பது உங்களுக்கும் தெரிந்த கதை தான்.

டாஸ்மாக்:(TASMAC)
2001-ஆம் ஆண்டு மீண்டும் மதுவிலக்குச் சட்டம் விலக்கப்பட்டு, கள் & சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளை விடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளான விஸ்கி, ரம், வோட்கா, பிராந்தி, பீர் & வைன் போன்றவற்றை டாஸ்மாக் மூலம் மொத்த விற்பனையை தொடங்கியது. சில்லறை விற்பனையை தனியார் வசம் கொடுத்து வைத்திருந்தனர். ஆனால், தனியார்க்கு சில்லறை வணிக உரிமையை ஏலம் விடுவதில் ஏற்பட்ட வருவாய் இழப்பின் காரணமாக, சில்லறை விற்பனையையும் தாமே எடுத்துச் செய்வது என்னும் முடிவினை தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு எடுத்தது. அதன்படி நல்ல வருவாயும் அரசுக்குக் கிடைத்தது. ஆம், தமிழக அரசு நிறுவனமாகிய டாஸ்மாக் மதுவின் மொத்தம் மற்றும் சில்லறை வணிகத்தின் ஏகபோக உரிமம் கொண்டதால் அதற்கான சுங்க வரியும், விற்பனை வரியும் முழுமையாக கிடைப்பதுடன் விற்பனை இலாபமும் முதலாளி என்ற முறையில் முழுமையாக பெறுகிறது. ஆரம்பக்கட்டத்தில் 3000 கோடி என்றிருந்த அதன் வருவாய் ஆண்டிற்கு 20% வளர்ச்சி என்ற விகிதத்தில் விற்பனை வளர்ந்து 2010-11 ஆம் ஆண்டில் அதன் வருவாய் 14,965 கோடி!!! இவ்வாண்டு அதைக்காட்டிலும் அதிகமான வருவாய் கிடைக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்வதும், அண்மையில் ஏற்றிய விலை உயர்வும் இதனை உறுதிபடுத்துகிறது.

அரசு என்பது மக்களுக்கான ஒர் அமைப்பு எனக் கொண்டால், அதன் ஆண்டு வருவாய் வளர்ந்து கொண்டே வருவது நல்லதுதான். அதுவும், தமிழக அரசின் மொத்த வருவாயின் சரி பாதிக்கும் சற்றே குறைவான வருவாயை இவ் டாஸ்மாக் வழங்குகிறது என்றால் இதனை இழக்க மனம் வருமா? தமிழக அரசு வழங்கி வரும் இலவசத்திற்கு டாஸ்மாக்கின் வருவாயே அச்சாணி ஆக இருக்கும் பொழுது இதனை இழக்க மனம் வருமா? ஆகையால் தான் 2003 ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா தொடங்கிய இதன் ராஜ்ஜியத்தை அடுத்து 2006-ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டில் ஏறிய மு.கருணாநிதி அவர்களும் தொடர்ந்தார். இன்றும் தொடர்கிறது ஜெ.ஜெயலலிதா தலைமையில். ஆனால் டாஸ்மாக்கை இழந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது. அதற்காகவே மீண்டும் எழுப்புகிறோம் மதுவிலக்கு என்ற கோஷம்.

மதுவிலக்கு காலம்:

மதுவினால் ஏற்படும் தீங்குகளை மக்கள் அறியாமல் இல்லை. அதனை தடை செய்வதற்காக எத்தனையோ போராட்டங்கள் நம் தமிழக மண்ணில் நடந்துள்ளன. குறிப்பாக கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டும் நமக்குத் தெரிந்த வரலாறு. அவ்வாறாக கஷ்டப்பட்டு ஓடுக்கிய மதுவினை... மேலும் மேலும் முயற்சித்து அழிக்க வேண்டிய அரசு.. முடியாமல் மதுவிலக்கு தளர்த்தலைத்தான் கொண்டு வந்தது என்பது மிகவும் சோதனையான காலம். மதுவிலக்கு இருந்த காலத்தில் அங்காங்கு கள்ளச்சாராயம் வடிக்கப்பட்டது என்பதும் அதனால் பல மக்கள் இறந்தார்கள் என்பதும் தெரிந்தது தான். அதற்காக கள்ளச்சாரயத்தினை வேரறுப்பது விட்டு, வெளிநாட்டு மது வகைகளை குடிக்க கொடுப்பது எந்த விகிதத்தில் நியாயம்? அதுவும் சாராயம் என்பது அதில் கலக்கப்படும் நீரின் விகிதாச்சாரத்தில் ஏற்படும் குறையினால் உயிரைக் குடிக்கும் கள்ளச்சாராயம் ஆனது. மதுவினை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்ட நான் கள்ளுக்கும் வக்காலத்து வாங்கிப் பேசப்போவதும் இல்லை என முடிவெடுத்திட்டேன். மதுவுக்கு அடிமையானவர்கள், கள்ளத்தனமாக வடிக்கப்பட்ட சாராயத்தினை தேடி ஓடி வாங்கிச் சாப்பிட்டனர். அவ்வாறு கள் வடித்தவர்கள் எல்லாம் யார்? தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டியவர்களை கொள்கை அற்று, ஓட்டு வங்கிகளுக்காக வாழ்ந்த அரசியல் தலைவர்கள் தண்டிக்க முடியாது, அவர்களை ஊருக்குள் சுதந்திரமாக உலா விட்டதும் அல்லாமல் கள் குடிப்பார்கள் மீது பழியினை இட்டு, கள் குடிப்பதனால் ஏற்படும் உயிர் இழப்பினைக் காட்டி, மீண்டும் குடிப்பார்களுக்கு என வெளிநாட்டு மதுக்கடைகளைத் திறந்தது என்பது முறையாகுமா? ஏன் இன்று மட்டும் கள்ளச்சாராயம் வடிப்பார்கள் இல்லாது போனார்கள்? எல்லாம் அரசு மதுக்கடைகள் வந்ததனாலா? அல்லது அரசின் கண்டிப்பான எச்சரிக்கையை வழிநடத்தும் போலீஸ் துறையாலா? யோசித்துப்பாருங்கள்! இன்றும் மதுபானக்கடைகளில் கிடைக்கும் மதுவைவிட மிகக் குறைந்த விலையில் நன்றாக போதை தரும் சாராயம் வடிக்க முடியும். சில இடங்களில் சாராயங்கள் வடிக்கப்பட்டு பிடிபட்டதை செய்தித்தாள்களில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆகையால், கள்ளத்தனமாக சாராயம் வடிப்பது என்பது காவல் துறையால் தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, அரசு மதுவிலக்குக்கு தடை செய்து, மதுபானக்கடை நடத்துவதால் அல்ல! அதைவிட மிக முக்கியமான ஒன்று... மது தேவையையும் அதனை எப்படியும் வடித்தாவது குடித்திட வேண்டும் என்ற வெறியும் உள்ளோர் ரவுடிகள் என அழைக்கப்படுவார்கள் மட்டுமே! அவர்கள் மதுவிலக்கு இருந்தாலும் வடித்திடுவார்கள், ஏனெனில் அவர்கள் தயவு ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் என இருவர்க்கும் உள்ள மோதலுக்குத் தேவைப்படுவதால், கண்டும் காணாமல் விட்டுவிடுவர். மதுவிலக்கு இல்லை என்பதால் இவர்கள் மட்டும் தான் கள் வடித்திடாமல் இருக்கிறார்கள், இவர்கள் தேவைக்காகத்தான், தைரியத்தில் தான் கள் வடித்தலும் சட்ட விரோதமாக நடக்கிறது. பணம் என்ற தேவைக்காக யாரும் அத்தனை தைரியமாக அரசின் மதுவிலக்கினை எதிர்த்து கள் வடிக்க மாட்டார்கள். ஏனெனில் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது. இது இல்லை என்றால் வேறு ஒர் தொழில் இறங்கிவிடுவார்கள். அப்படித்தான் பல சிறு கள் வடிப்போர் மாறிவிட்டனர். ஆகையால் இன்று மதுவிலக்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக கட்டுக்குள் வைத்து மது என்ற வாடையற்ற தமிழகத்தினைப் பார்த்திடலாம்.

மதுவும் சுற்றமும்:
ஒருவர் வீட்டிற்கு பால் வாங்கி வந்தால் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம். மது வாங்கி வந்தால்? வாங்கி வந்தவர் தன் மனைவிக்கு குடிக்க கொடுப்பாரா? தன் பிள்ளைக்கு கொடுப்பாரா? இல்லை மனைவிதான் தன் கணவர் தினம் குடித்துவிட்டு வரவேண்டும் என கருதுகிறாளா? எதுவுமே கிடையாது. குடிப்பவர்கள் யவரும் தன் வீட்டில் வைத்து பிறருக்கும் ஊற்றிக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது தவறு வேண்டாமென்று தெரிகிறது, ஆனாலும் குடிக்கிறார்கள். போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இப்போதை அடிமைகளைப் பார்த்து சிறுவர்களும் குடித்துக் கெட்டுப்போகும் சூழலை... 6400 மதுபானக்கடைகள் மூலம் ஊரெங்கும் மதுவினைச் விநியோகம் செய்யும் அரசுச் செயலை எந்த அம்மா ஏற்றுக் கொள்வாள்???? ஆம், இன்று மேல் நிலைப் பள்ளிகள் படிக்கும் மாணவர்கள் முதல் அதாவது 16 வயதிலேயே குடிக்க ஆரம்பிக்கும் சிறுவர்களை அங்காங்கே காண முடிவதினை பார்க்கும் பொழுது! அவனைப் பெற்றெடுத்த தாய் தன் குடிகாரன் என்ற சொல்லைக் கேட்டு எத்தனை வேதனை அடைந்திருப்பாள்!!! குடிக்காதே என்று அடித்தும் பண்பாய் சொல்லியும் கேட்காமல் மூன்றாம் நாளில் நண்பர்களோடு குடித்துவிட்டு கூத்தடிக்கும் நிலையினைக் கண்டால் ஒர் தகப்பனுக்கு எப்படியிருக்கும்??? குடித்துவிட்டு தாயை அடிக்கும் அப்பாவினைப் பார்க்கும் குழந்தையின் மனம் எத்தனை வேதனைப்படும்??? இத்தனை தெரிந்தும் தன் குடியினை மறக்க முடியாமல் குடித்துக் கெட்டுப்போகும் குடிமக்களைத் திருத்த வேண்டும் மது ஒழிப்பு. வளர்ப்பினை சரி செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் அல்ல!

மதுவினால் ஏற்படும் தீது:
மது என்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்பதனையும் அதனால் இளைய சமுதாயம் எத்தனை சீர்கேட்டிற்கு ஆளாகிறது என்றும் மது அடிமையாகிய ஆரோக்கியமற்ற இளைய சமுதாயத்தில் நாட்டின் முதுகெலும்பே உடைந்து போகிறது என்றெல்லாம் நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இதனைப் பற்றி நாளும் நாம் பிறர் மூலம் தெரிந்ததுதான். ஆகையால் மதுவிலக்கு வேண்டும் என்பதனை இன்றல்ல.. காலம் காலமாய் சொல்லி வருகிறார்கள். இன்று நாம் மது ஒழிப்பு என்பதனை உறுதி செய்ய ஒன்றுபடுவோம் என்பதுதான் தீதுக்கு எதிரான என் கோஷம்.

மது ஒழிப்பு:
இந்திய அரசியல் சாசனம் 47-ஆம் பிரிவின்படி போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று அதன் தீது அறிந்து சொல்லிய போதும், அதனை பொருட்படுத்தாத அரசை, மது ஒழிப்பு என்ற போராட்டத்தின் மூலமாய் ஓட்டு வங்கியைக் காட்டித்தான் வெல்ல முடியும், மதுவின் தீது சொல்லி மதுவிலக்கு சட்டம் பெற முடியாது. மதுவை நாடும் மக்களையும் நாம் சொல்லித் திருத்த முடியாது. ஏன் நம் தந்தையோ! அண்ணனோ! கணவனே குடிகாரனாக இருந்தால் கூட, அருகில் உட்கார வைத்து மது குடிப்பதினால் ஏற்படும் தீதினைக் காட்டி அவர்களைத் திருத்திட முடியாது, மது ஒழிப்பு மூலம் தான் குடியிலிருந்து விடுபட வைக்க முடியும். ஆகையால், மது ஒழிப்பு என்னும் கோஷத்தை உரக்கச் சொல்லி மனதினில் நாம் கொள்கையாக கொள்வோம். மது ஒழிப்பினைக் கொள்கையாகக் கொண்டாரை குவிப்போம். குறிப்பாக பெண்களை மது ஒழிப்புக் கொள்கைக் கூட்டத்தில் சேர்த்தால் விரைவில் ஓட்டு வங்கியின் எண்ணிக்கை கூடும். ஓட்டு வங்கியால் வாழும் அரசு... மதுவிலக்குச் சட்டத்தினை ஏற்கும். மது ஒழிப்பு பிறக்கும்!!! சுற்றமும் நல்குடி வாழ்வு வாழும்.

மதுபானக்கடை ஊழியர்கள் நிலை:
மதுவிலக்கு சட்டத்தினை அரசு அமுல்படுத்தப்பட உள்ளது, டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட உள்ளது என்பன போன்ற கசிவுகள் வெளிவரத் தொடங்கியதுமே! அப்படியென்றால் 6400 மதுபானக்கடையில் வேலை செய்யும் 36000 பேர்களின் நிலை என்ன? என்ற அபலக்குரல் கேட்கிறது. 36,000 குடும்பங்களைப் பேசும் நீங்கள் 36,0000 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடிகாரர்களின் குடும்ப நிலையினை ஏன் பார்க்கவில்லை. சரி, உங்கள் பேச்சுப்படி பார்த்தாலும்...மதுக்கடைகளை மூடினால் வேறு வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாத கையாளாகதவர்களா? அல்லது 70ஐத் தாண்டிய கிழவர்களா? எல்லோரும் வாலிபர்கள் தானே!! அதுவும் இழப்பது சொற்ப சம்பள வேலை தானே, உங்களுக்கு என்ன அரசு ஊழியர்கள் போல் சம்பளமா என்ன? ஒர் கதவு மூடினால் மறு கதவு திறக்கும். ஆகையால் இந்த சொற்ப சம்பளப் பணியினை விட்டுவிட்டு ஒரே மாதத்தில் வேறு பணிக்குத் தயாராகிவிடுவார்கள். ஆகையால், ஊழியர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த மாற்றுத் திறனாளிகளே தங்களை மாற்றுப் பணிக்கு தயார் படித்துக் கொண்டு வாழும் பொழுது, இவர்கள் மதுக்கடையை மூடுவதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளமாட்டார்கள் என்பதுதான் உண்மையிலும் உண்மை.

அரசின் வருவாய் நிலை:

அரசு ஈட்டும் மொத்தம் வருவாயில் பாதிக்கும் சற்று குறைவான அளவு பங்களிப்பு டாஸ்மாக் வருவாய் என்பது ஊர் சொல்கிறது. அதன் வருவாயில் தான் இலவசத் திட்டங்கள் மக்களுக்கு குவிகிறது என்பார், நாங்க ஸ்டெடியா இருந்தா அரசு கவிழ்ந்துவிடும் என்று கையில் போதைப்பாட்டலுடன் கூவுவது ஆளும் அரசுக்கு கவலை அளிக்கவில்லையா? இதற்கும் ஈடான வருவாய் கொடுக்கும் திட்டத்தினை தீட்ட வேண்டியதில்லை. ஆங்காங்கே அரசின் வருவாய்களை ஏப்பம் விடுபவர்களை மட்டும் பிடித்தாலே போதும், ஈடாகிவிடும். ஆகையால் புதியதாய் என்ன தொழில் செய்யலாம்.. புதியதாய் எதில் வரி போடலாம் என்று கவலை கொள்ள வேண்டவே வேண்டாம். அதிகாரிகளை கண்டிப்புடனும் ... கப்பம் வாங்கிவிட்டு அரசு வருவாய் ஏய்ப்பிற்கு உதவி புரிதலை தடுத்தாலே போதும் போதும்.

குஜராத்தும் மதுவிலக்கும்:

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று சில பகுதிகளைத் தவிர்த்து. இதுவும் வரவேற்க வேண்டிய விடயம் தான். இதைப்போல், தமிழகத்தில் மதுவிலக்கு இருந்த பொழுதெல்லாம், ஆந்திராவிற்கு சென்று குடித்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதைப்போல் இன்றும் குறைந்த விலை என்பதற்காக பாண்டிச்சேரி சென்று மது அருந்துவோரைப் பார்த்திருக்கிறோம். ஆம், ஊர்க்கு ஊர்க்கு கிடைக்காமல் எங்கோ ஒர் இடத்தில் கிடைக்கும் பொழுது மது வெறியர்களைத் தவிர வேறு யாரும் அங்குப் போய் குடிக்கமாட்டார்கள். குறிப்பாக சிறார்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதே வரவேற்கத் தக்கதுதான். ஆனால், நம் நோக்கம் எல்லாம் மது ஒழிப்பு. ஆகையால் அதையும் தாண்டி ஓட்டு வங்கியின் பலத்தினைக் காட்டுவோம்!!! மது ஒழிப்பிற்காக!!! சட்டம் தன் இரும்பு கரத்தினால் அதனையும் ஒடுக்கும்.

தோல்வி வரலாறு படைக்குமா மதுவிலக்கு:

மது குடிக்காமல் மதுவினால் பாதிக்கப்படும் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்காதவரை தோல்விகள் கிடைப்பது சகஜம் தான். அதுவும், குடிப்பவர்கள் மட்டுமே நம்மை பலசாலி என்றும்... தானே பெரியவன் என்றும் பெரும் குரல் கொடுக்கும் பொழுது.. குடியர்களை ஓட்டு வங்கியின் தலைவன் என்று காணும் அரசியல் உலகம்... அவன் விரும்பும் மதுவினைக் கொடுத்து ஏமாற்றி வருகிறது. கட்சிக் கூட்டம் என்றுப் போய் பாருங்கள் பாட்டில்கள் தான் உலா வரும். ஆகையால், அவர்கள் ஒர் பொருட்டே அல்ல குடியர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை. என் கணவன் இருக்கும் கட்சியாக இருந்தாலும் அவன் குடித்தால் அவன் சொல்லும் கட்சிக்கு, இருக்கும் கட்சி இடமாட்டேன், மதுவிலக்கு கட்சிக்கே என் ஓட்டு என்று பெண்கள் மற்றும் குடியாதார் சொல்ல ஆரம்பித்துவிட்டால் மது ஒழிப்பு குரல் ஓங்கிவிட்டால் மதுவிலக்கு என்ற சொல் தோல்வியை மட்டும் அல்ல சமூகத்திலிருந்தே அகற்றப்பட்டுவிடும். ஆம், மது என்ற ஒன்றே இல்லாத பொழுது மதுவிலக்கு எதற்கு?

என் கொள்கை மது ஒழிப்பு:
ஒவ்வொருவரும் மனதில் தன் கொள்கையாக மது ஒழிப்பினை எடுத்துக் கொள்வதுடன், மது ஒழிப்பு கருத்துள்ளவன் என்று சமூகத்திற்கும், அரசியல் உலகத்திற்கும் உரக்க எடுத்துரைத்தால், ஓட்டு வங்கியால் நிலை நிற்கும் அரசு நம் விருப்பத்தை ஏற்கும். ஆகையால், மதுவிலக்கு வேண்டும் என்போர் தயவு செய்து மது ஒழிப்பிற்கு ஆதரவாக இங்கு பின்னூட்டம் கொடுங்கள்.

நன்றி. :ros:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்டுரைப் போட்டி

Posted: Wed Aug 29, 2012 1:09 am
by ஆதித்தன்
Tamil Nadu - My Vote for prohibition.png
மதுவிலக்குக்கு ஆதரவு ஓட்டு வங்கியை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரப்பலாம். அதற்கு உங்களது பேஸ்புக், டூவிட்டர், ஆர்குட், ப்ளாக்கர் வலைப்பூ ஆகியவற்றில் தங்களது கருத்துகளான மதுவினைப் பற்றித் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி, மதுவிலக்கை ஆதரிக்க கூறுங்கள். :ros:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்

Posted: Wed Aug 29, 2012 8:06 pm
by ஆதித்தன்
Image
வணக்கம்!

மது என்ற தலைப்பில் கட்டுரைகள் வடிப்பது என்பதும் மதுவினால் உருவான உண்மை கதைகள் சொல்வதும் தானாகவே நம் மனதில் இருக்கும் கருத்துக்களை அவ்வாறே எழுதுவதுதான் தானே தவிர, இதற்காக ஒர்முறை Ph.D பட்டம் வாங்கி வரவேண்டிய அவசியம் இல்லை. மது என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற ஒற்றைச் சொல்லே அதில் உள்ளத் தீங்கை வெளிப்படையாக சொல்லும் பொழுது மதுவிலக்கு என்ற ஒன்று கட்டாயம் அவசியம் ஆகிறது நம் தமிழ்நாட்டிற்கு. ஆகையால், அதனை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்று பார்த்தோம் ஆனால் அதில் முதன்மையாக இருப்பது அரசுக்குத் தேவையான ஓட்டு வங்கி. ஆம், இன்று இலவசம் அள்ளிக் குவியக் காரணம் ஓட்டுக்காகத்தான். அதைப்போல், மதுவிலக்கு என்ற ஒன்றைக் கொடுத்தாலும் ஓட்டுகள் குவியும் என்றால் அதனை அரசு செயல்படுத்தத் தயங்காது என்பது நிதர்சன உண்மை.

அதுவும் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் அள்ள வேண்டும் என்ற துடிப்போடு செயலாற்ற இருக்கும் நம் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக, முக்கிய ஓட்டு வங்கியாக மதுவிலக்கு இருக்கிறது என்றால் விரைவில் மதுவிலக்கு தமிழகத்தில் அமுல்படுத்தப்படுவது உறுதி.

வீட்டில் குடிப்பவர் ஒருவர் என்றாலும் அதனால் பாதிக்கப்படுவது மீதம் இருக்கிற 3 அல்லது 5க்கும் மேற்ப்பட்ட நபர்கள். அதாவது குடிப்பவர்களால் குடிக்காமல் பாதிக்கப்படுவது 74 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள். அப்படியிருந்தாலும் வீட்டின் தலைவனாக குடிப்பவன் இருப்பவனால் அவன் சொல்படியே வாக்குகள் விழும் என்று கட்சிகள் கணக்கீடு செய்கிறது அல்லது அவ்வாறுதான் ஓட்டுகளும் வீடுகளில் போடுகிறார்கள். ஆனால், அவ்வாறு இல்லாமல் நம் ஓட்டினை சுயமாகச் சிந்தித்து... நம் நாட்டிற்கு வீட்டிற்கும் நன்மையான மதுவிலக்கு அமுல்படுத்திச் சிறப்பாகச் செயல்படுத்துவோர்க்கே என் ஓட்டு என நம்மை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக ... அதனை ஆதரிக்கும் கட்சி வெற்றி பெறுவதோடு... நமக்கும் நம் சமுதாயத்திற்கும் மிக்க பலனாக அமையும்.

ஆகையால், கண்டிப்பாக மதுவிலக்கு சட்டத்திற்கு உங்களது ஆதரவைக் கொடுப்பதுடன். தங்களுக்குத் தெரிந்தவரையும் ஆதரவாக் குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

மது ஒழிப்பு நிறைவேறும்!!!

:thanks:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்

Posted: Mon Oct 01, 2012 8:30 pm
by ஆதித்தன்
ஆவலுடன் எதிர்பார்த்த, அக்டோபர் 2 பொய்த்துப் போனது.


அரசின் மதுவிலக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாந்தனர்.

மது - மதுவும் தமிழகமும்

Posted: Sat Dec 22, 2012 2:06 pm
by மன்சூர்அலி

முன்னுரை:- :news:
இன்றைய சூழ்நிலையில் தமிழகமே மதுவுக்கு தள்ளாடி கொண்டு தான் இருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணம் தமிழக அரசு என்றே அறுதி இட்டு உறுதியாக சொல்லாம். இதற்கு காரணம் அரசுக்கு சரியான லாபம் ஈட்டி கொடுப்பது மது துறையில் தான் என்பதில் ஐயம் இல்லை....இதனால் எத்தனை பேர் உயிர் இழக்கிறார்கள்.....இதனால் எத்தனை இளம் வயது விதவைகள் தமிழகத்தில் இருக்கிறார்கள்....யாரு செத்தால் என்ன அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்று தான் அரசும் செயல்படுகிறது.
பொருளுரை:- :news: மது அருந்துபவர்களுக்கு வயது வரம்பு கிடையாது...அரும்பு மீசை கூட இறங்கி இருக்காது பள்ளி கல்வியை கூட முடித்திருக்க மாட்டான்....ஆனால் மது அருந்தி விட்டு ஊரில் ஒரு தாதாவாக வளம் வருவான்...அதில் அவனுக்கு ஒரு தற்பெருமை .இதனால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி புரிந்து கொள்ள மாட்டான்....அந்த சிறு வயதில் சுரக்கும் ஹார்மோன்ஸ் சுரக்க வலில்லாமால் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரியாக செயல்படுகிறது.இந்த மது (போதை)சிலருக்கு ஆண்மை சக்தி கூட பாதிப்பு வருகிறது.இதற்க்கு காரணம் சிலர் பெருசுகள் நம்மூரில் இருக்காதான் செய்கிறார்கள். தெருவில் விளையாடி கொண்டுருக்கும்.சிறு பிள்ளைகளை குப்பிட்டு மது கடைக்கு அனுப்பி வைத்து மது வாங்கி கொண்டு வரும் படி வற்புற்த்துகின்றனர்...இது நாளடைவில் பழக்கம் ஆகி...ஒரு நாள் இவர்கள் ருசிக்க ஆசைபடுகிறார்கள்....இது பழக்கம் ஆகி அடிமைக்கு ஆளாகின்றனர்...அந்த இளசுகளை வழி தவற செய்வது இந்த பெருசுகளுக்கும் ஒரு பங்கு உண்டு....நாம் முன்னோர்கள் நமக்கு வழி காட்டியாக தான் இருக்க வேண்டுமே தவிர ஆள் காட்டியாக இருக்க கூடாது எனபதே என் வேண்டுகோள்...
நடந்த உண்மையை உங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு தெரிந்த ஒரு நபர் அவர் 13 வயதில் மதுவுக்கு அடிமையானவர் இப்போது 40 வயது....இன்னும் மதுவுக்கு அடிமை திடிரென்று ஒரு நாள் வலிப்பு வந்து விட்டது உடனே ஆஸ்பத்திக்கு அழைத்து கொண்டு போனார்கள்..அங்குள்ள டாக்டர் கூறியது அவரின் ஈரல் (Dry) காய்ந்து போய் விட்டது.இதற்க்கு சிகிச்சை அளிக்க முடியாது...ஆப்பரேசன் செய்ய வேண்டும்.ஆப்பரேசன் செலவு 50 லட்சம் என்று... இல்லாவிட்டால்....அவரின் மரண தேதியை குறித்து சொல்லிவிட்டார்..இப்போது அவர் திருந்தி விட்டார்...இப்போது திருந்தி என்ன பயன். வரும் முன் காத்திருக்கலமே. தினமும் அவர் மரண போராட்டத்தில் இருந்து கொண்டு வருகிறார்..
முடிவுரை:- :news: இன்று வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்க்குக்கூட சுலபமாக மது விருந்து...இதை தவிர்த்தால்..போதும்..மதுவின் தீமைகளை பற்றி பள்ளி கூடங்களில் கல்வி ஒரு பாடமாக நடத்தினால் நாம் இளசுகளை இந்த மரண மது விபத்தில் இருந்து கொஞ்சம் காப்பாற்றி விடலாம். என்பதே என் குறிக்கோள்...... :thanks:



No BRANDY

A.Mansoor Ali
Saudia Arabia
Phone:-00966-509150390
:wav:

Re: பரிசுத் தொகை ரூ.10,000/- "மது - தமிழகமும் மதுவும்" - கட்

Posted: Sat Dec 22, 2012 2:13 pm
by மன்சூர்அலி

:great: இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த தலைப்பு...சூப்பர்
நன்றி
எ.மன்சூர் அலி
சவுதி அரேபியா
போன் 00966-0509150390. :great: :ro: