வார்த்தை கொண்டு கட்டுரை எழுதும் பணி
ARTICLE WRITING JOB
இணைய தளங்களுக்கு மிக முக்கியமானது கட்டுரைகள்(Article). எந்தவொரு வெப்சைட்டை எடுத்துக் கொண்டாலும் சரி, அதனுடைய வாசகர்களின் எண்ணிக்கை, அத்தளத்திலுள்ள கருத்து மிகுந்த கட்டுரையைப் பொறுத்துத்தான் அமைகிறது. பலர் இணையப் பக்கங்கள் வைத்திருந்தாலும், தன் தளத்திற்கான கட்டுரைகளை அவர்களால் எழுத முடிவதில்லை. ஆகையால், பிறரிடம் இருந்து தனக்கான வார்த்தை அல்லது பொருள் பற்றிய கட்டுரையை எழுதி வாங்கித் தன் தளத்தில் வெளியிடுகின்றனர். கட்டுரையின் வார்த்தைகளின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து, கட்டுரை எழுதுபவர் பணம் பெற்றுக் கொள்கிறார். குறிப்பாகச் சொல்லப் போனால், ஒர் கட்டுரைக்கு ரூபாய் 20-லிருந்து 200 வரை பெறுகின்றனர். நாம், பள்ளியில் "காந்தி பற்றி கட்டுரை வரைக", "ஆறு தன் நிலை கூறுவது போல் கட்டுரை வரைக", வாழை தன் வரலாறு கூறுதல்- கட்டுரை வரைக... என வரும் கேள்விகளுக்கே.... கொஞ்சம் தட்டுத் தடுமாறித்தான் பதில் எழுதுவோம். அப்படியிருக்க, ஒர் பொருளை அல்லது வார்த்தையைக் கொண்டு கட்டுரை வரைவது என்பதும் கொஞ்சம் கடினமான பணிதான். அது பற்றிய விவரம் நமக்கு இருந்தால் மட்டுமே நம்மால் கட்டுரை எழுத முடியும் அல்லது அதனைப் பற்றித் தேடிப் படித்து விவரமாக எழுதணும், அவ்ளதான். சரி இருக்கட்டும். நானும் உங்களுக்கு ஒர் கட்டுரை எழுதும் பணியை கொடுக்கப் போகிறேன். அப்பணிக்கு ரூபாய் 150/= வெகுமானம் நிர்ணயம் செய்துள்ளேன். ஆகையால், கீழ் கொடுத்துள்ள வார்த்தை கொண்டு 400 வார்த்தை அல்லது 60 அடிகளுக்கு குறையாமல் கட்டுரைகளை எழுத வேண்டும். குறிப்பாக ரூ.25,000/= பரிசுத் தொகையின் மூலம் குறைந்தப்பட்சம் 60 நபர்கள் தமிழ் ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரையை எழுதித் தெளிவும் நேர்த்தியும் அடைவார்கள் என்பதே சிறப்பு. மேலும், போட்டியின் நடு நடுவே கட்டுரைகளை தணிக்கை செய்து ஏற்கப்பட்ட விவரம் அறிவிக்கப்படும். ஆகையால் முதன்மையாக வரும் நபர்களுக்கே இப்போட்டியில் பங்கேற்று பரிசு பெறும் வாய்ப்பு கிட்டும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.ARTICLE WRITING JOB
கட்டுரைகளுக்கு தலா ரூபாய்.150/-
கட்டுரை எழுத வேண்டிய வார்த்தை
தமிழ் ஆன்லைன் ஜாப் (Tamil Online Job)
"தமிழ் ஆன்லைஜ் ஜாப்" பற்றியும் அதில் படுகை.காம் (padugai.com)-ன் பங்களிப்பு பற்றி, படுகை வழங்கும் ஆன்லைன் ஜாப் பற்றிய விவரம், படுகை ஆன்லைன் ஜாப்பில் எவ்வாறு எல்லாம் சம்பாதிக்கலாம், தமிழ் ஆன்லைன் ஜாப்பின் வருங்காலம், படுகை ஆன்லைன் ஜாப்பில் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம், படுகை ஆன்லைன் ஜாப் சிறப்பு, இணைய உலகில் கிடைக்கும் ஆன்லைன் ஜாப்போடு படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பற்றிய ஒப்பீடு போன்றவற்றைக் கொண்டு நேர்மறையாக கட்டுரை எழுதப்பட வேண்டும். கட்டுரையில் எனது பெயரினை சேர்க்க வேண்டாம். எழுதும் கட்டுரைகளை இன்று முதலே நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
விதிமுறைகள்:
கட்டுரை கொடுக்கப்பட்ட வார்த்தையை மையமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும்
60 அடிகளுக்கு குறைவில்லாமல், சொந்த எழுத்து நடையில் இருத்தல் வேண்டும்.
கட்டுரையை இப்பதிவின் பின்னூட்டமாக பதிந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இங்கு பதியப்படும் கட்டுரை வேறு தளங்களில் வெளியிடப்பட்டிருத்தல் கூடாது மற்றும் வெளியிடக் கூடாது.
ஒருவர் எழுதிய கட்டுரையைப் போன்றே மற்றொருவர் மீள் படிவம் போன்று நகல் எடுத்து எழுதுதல் கூடாது.
கட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற சொற்றொடருடனும் பிழையின்றியும் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் இருந்து அதிகபட்சம் 3 கட்டுரைகள் ஏற்கப்படும். தங்களது 3 கட்டுரைகள் ஏற்கப்படும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.
கட்டுரைக்கான பரிசுத் தொகை, உங்களது படுகை கணக்கில் வரவு(Cash Balance) வைக்கப்படும். அதனை குறைந்தப் பற்றத் தகுதித் தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுரைகளை ஏற்றுக் கொள்வது என்பது படுகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
போட்டியின் நடு நடுவே கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டு ஏற்கப்பட்ட கட்டுரைகளின் விவரம் அறிவிக்கப்படும்.
இடையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிசுத் தொகையை மாற்றியமைக்கவும் படுகை நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதனை மறவாதீர்.
இவ்வாய்ப்பினை என்று வேண்டுமானாலும் அறிவிப்பின்றி நிறுத்தம் செய்யவும் படுகை உரிமம் கொண்டுள்ளது.
அன்புடன் ஆதித்தன்
நாள் : ஜீலை 16 - 2012
[/color][/b]
விரைவில்...