முடிவுற்ற காதலர் தினம் - Feb 14 - பரிசுப் போட்டி - லவ்வர்ஸ் டே Lovers Day Greeting, Wishes Image

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற காதலர் தினம் - Feb 14 - பரிசுப் போட்டி - லவ்வர்ஸ் டே Lovers Day Greeting, Wishes Image

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:58 pm

காதலர் தினம் - 2012

காதலர் தினம் வாழ்த்து படங்கள், காதலர் தினம் வரவேற்பு கட்டுரைகள், காதலர் தினம் எதிர்ப்பு கருத்துக் கட்டுரைகள், காதல் கடிதங்கள், காதல் கவிதைகள், காதல் சோகக் கவிதைகள், காதல் கதைகள், காதல் மையப் படங்கள், காதலர் தின சிறப்பு போட்டோக்கள், காதலர் தின வாழ்த்து இமேஜ்.
நாளை வரயிருக்கும் "காதலர் தினம்" நாளை முன்னிட்டு உங்கள் பார்வையில் வரவேற்பு மற்றும் எதிர்ப்பு கட்டுரையாகவோ, சிறு கதையாகவோ, கவிதையாகவோ, நகைச்சுவை துணுக்குத் தொகுப்பாகவோ, அல்லது அதனை வெளிப்படுத்தும் படங்களாகவோ, விடீயோவாகவோ, மற்றும் ஃப்ளாஷ் ஆக்கம் என எப்படி வேண்டும் என்றாலும், உங்கள் சிறப்புத் திறமைகளைக் கொண்டு, படைப்பினை சிறப்பாக செய்து, இந்நூலின் பின்னூட்டப் பதிவாக பரிசுப் போட்டிக்கான ஆக்கங்களாக கொடுக்க வேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல.. எது செய்தாலும் முதல் கிரிடிட் படுகைக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. அதாவது, கவிதை ஆனாலும் சரி கட்டுரை ஆனாலும் சரி... அது உங்களுடைய சொந்த ஆக்கமாய் இருக்க வேண்டும். அதனை முதல் முதலில் படுகையில் தான் பதிய வேண்டும். படங்கள் மற்றும் வீடியோ எனில் சொந்தமாக செய்து, ப்ளாக்கர்/யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதில் படுகை.காம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
[td=200,#008000][b][center][color=#FFFF00][u]பரிசு விவரம்:[/u][/color] [color=#FFFFFF]முதல் பரிசு : ரூபாய்.1500/= 2 வது பரிசு : ரூபாய்.1000/=[/color][/center][/b][/td]
[td=200,#FF0000][b][color=#FFFFFF] [center][size=150]போட்டி படைப்புக்கான ஆரம்ப நாள் : 1.2.2012 போட்டி படைப்புக்கான கடைசி நாள்: 14.2.2012 ஓட்டெடுப்பு ஆரம்ப நாள்: 15.2.2012 ஓட்டெடுப்பின் கடைசி நாள்: 20.2.2012 வெற்றியாளர்கள் அறிவிப்பு: 21.2. 2012 [/size][/center] [/color][/b][/td]
போட்டிக்கான நிபந்தனைகள்:

1. போட்டியின் வெற்றியாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள். (படுகை பரிசுப்போட்டி விதிமுறைகள் அடங்கும்) மேலும், வாக்கு அளிப்பவர்கள், இங்கு ஒர் பின்னூட்டப் பதிவினையாவது கொடுத்துச் செல்ல வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

2. குறைந்தது 3 சிறந்த சொந்த ஆக்கங்களை போட்டிக்காக செய்து பின்னூட்டமாக கொடுத்தவர்கள் மட்டுமே வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படுவர். 15 க்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஆக்கங்களை செய்தால், அதில் சிறப்பாக செய்தவர்களில் 15 பேர் மட்டுமே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவர்.

3. இது மிக முக்கியமான நிபந்தனை. அனைவரும் தனது சொந்த ஆக்கத்தை மட்டுமே இங்கு பதிய வேண்டும். மற்றவர்களின் பதிப்பையோ, பிற தளங்களில் வெளியானவற்றையோ இங்கு பதியக்கூடாது. மீறி பதிந்தால் அவர் போட்டியின் வேட்பாளர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார். [-X
முக்கிய நிபந்தனைகள்:
* போட்டிக் களத்திற்குள் எந்தவொரு காரணம் கொண்டும், பிற தளத்தின் படங்களையோ, எழுத்தையோ, விடியோவையோ இங்கு காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம். பதிந்தால் உடனே அழிக்கப்படும்.
* பிற தளத்தின் பெயருடனோ, அல்லது படுகை.காம் பெயர் இல்லாமலோ பதியப்படும் படங்கள் உடனடியாக அழிக்கப்படும்.
* கவிதைகள் குறைந்தப்பற்றம் 10 வரிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
* நகைச்சுவைத் துணுக்குகள் குறைந்தது 5 வரிகள் கொண்டிருக்க வேண்டும்.
* கட்டுரை, விடியோ, படங்கள் மற்றும் கவிதை, என உங்களது படைப்புகளில் போட்டிக்கான குறைந்தப்பற்ற தகுதியாவது இருக்கும்படி தாங்களே பார்த்துக் கொள்வது நலம்.
4. போட்டியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் போட்டி அமைப்பாளருக்கும், படுகை நிர்வாகத்திற்கும் உண்டு.

விளக்கமாக:

போட்டி தொடங்கும் நாள் : 1.2.2012
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து ஆக்கங்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.

போட்டி நிறைவு நாள் : 14.2.2012
கவிதைகள், கட்டுரைகள், இமேஜ்கள் மற்றும் வீடியோ என செய்யும் ஆக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் 14 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்து முடித்திட வேண்டும்.

போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 15.2.2012

மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 14 ஆம் தேதிக்கு முன்னர் 3 சிறந்த சொந்த ஆக்கத்தையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மேலும், ஓட்டெடுப்பிற்கு சிறந்த ஆக்கங்களை கொடுக்கும் 15 நபர்களே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதற்கும் மேலானவர்கள் 3க்கும் மேற்ப்பட்ட சிறந்த சொந்த ஆக்கத்தினை செய்திருந்தால் 15 நபர்கள் என்பதில் விதிமுறை தளர்வு இருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற மொக்கை பதிவுகள் போட்டிப் பதிவாய் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், வாக்கு அளிக்கும் உரிமை 50 பதிவுகளைக் கடந்து வாக்குரிமைப் பெற்ற Voters, Gold Members, Private Friends, Contributors மற்றும் படுகை முக்கிய அங்கத்தினர்களுக்கு மட்டுமே உண்டு.

போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள் : 20.2.2012
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பு , இந்த தேதியின் 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம், அது நிர்வாகத்தின் உரிமை.


வெற்றியாளர் அறிவிப்பு : 21.2.2012

ஓட்டெடுப்பினை வெளிப்படையாக நடத்துவதன் மூலம், வெற்றியாளரை 23 ஆம் தேதியே அறிந்தாலும்.... கள்ள ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம் என்ற கருத்து ஏற்படின், வோட்டெடுப்பை மறுபரீசிலனைக்கு உட்படுத்தியப் பின்னர் சரியான வெற்றியாளரை அறிவிக்கவே ஒர் நாள் தாமத அறிவிப்பு.

போட்டியின் வெற்றியாளர்க்கு பரிசுப் பணம் மூன்று வங்கி வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்க்கு காசோலையாகவே அல்லது வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர் வாயிலாகவோ பரிசுப் பணம் வழங்கப்படும். (வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர்க்கான கூடுதல் கட்டணம், பரிசுத் தொகையில் இருந்தே கழிக்கப்படும்.)
=====================================================

:!! :!! :!! :!!
போட்டி களத்தின் விதிமுறைகளை ஒர் முறை படித்துவிட்டு,
உங்கள் போட்டிப் படைப்புகளைக் கொடுக்க ஆரம்பியுங்கள்.

:s_thumbsup :s_thumbsup


:ymhug: :ymhug: :ymhug: :ymhug: :ymhug: :ymhug:
போட்டிக்களத்தில் பங்கேற்ற சில பதிவுகள்:
கல்லூரி காதல் by RukmaniRK
“எவன் டி உன்ன பெத்தான்....கையில கிடைச்சா செத்தான்” என்ற STR’ன் குரல்கள் காதினை நிறைத்து கொண்டிருக்கும் வேலையிலியே பேருந்து கல்லூரிக்குள் நுழைந்தது. மனதில் நிறைய ஆசைகளுடனும், கனவுகளுடனும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தான் விஜயன். பொறுங்க!! பொறுங்க!! விஜயன் கல்லூரியில் புதுசா சேர்ந்திருக்குற ஸ்டூடண்ட் இல்லங்க!! புதுசா சேர்ந்திருக்கும் பேராசிரியர்.

விஜயன் நேராக பாலகிருஷ்ணனை பார்க்க செல்கிறான். மன்னிச்சுக்கங்க உயர்திரு. மாண்புமிகு. திரு. பாலகிருஷ்ணன் ஐயாங அவர்களை பார்க்க செல்கிறான் விஜயன். புரிஞ்சுருச்சா! ஆமாங்க பால்கி தான் கல்லூரியின் முதல்வர். பால்கியிடம் மிக பவ்யமாக நடந்து கொள்கிறான் விஜயன். விஜயனை அழைத்து கொண்டு சிவபிரகாசத்தை பார்க்க செல்கிறார் பால்கி. சிவபிரகாசம் கல்லூரியின் கட்டிடவியல் (Civil Engineering) துறைக்கான தலைவர். விஜயன் சிவபிரகாசத்திடமும் மிக பவ்யமாகவே நடந்து கொள்கிறான்.

சிவபிரகாசம் விஜயனிடம் ஆசிரியர் பணியின் பொறுப்பறிந்து நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். விஜயனின் காதுகள் மட்டுமே சிவபிரகாசத்தை கவனித்துக் கொண்டிருந்தது. மற்ற அனைத்து புலன்களும் ஆய்வகத்தில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவிகளையே நோட்டமிட்டு கொண்டிருந்தது. விஜயனிற்கு வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் உணர்வினை ஏற்படுத்தியது. தனது கல்லூரி காலத்தில் அழகான பெண்களை கண்டால் அடிக்கடி விஜயனிற்கு ஏற்படும் உணர்வு தான் இந்த பட்டாம்பூச்சி நோய். இன்று மீண்டும் அவனுக்கு அந்த நோய் வந்ததை அவன் உணர்ந்தான்.

எதையோ நினைத்தவனாய் மீண்டும் சிவபிரகாசத்திடம் தன் கவனத்தை திருப்பினான். தனக்குள்ளேயே “ அடக்கு, அடக்கு” என்று கூறிக் கொண்டான். சிவபிரகாசம் விஜயனை இரண்டாம் ஆண்டு வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றார். முதல் முறையாய் வகுப்பறைக்குள் ஆசிரியராய் நுழையும் விஜயனிற்கு, முதல் நொடியிலேயே பட்டாம்பூச்சி உணர்வு ஏற்பட்டது. இம்முறை இந்த உணர்வு ஏற்பட்டதற்க்கு மாணவிகள் யாரும் பொறுப்பில்லை. வகுப்பில் படம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியை அமுதாவே அதன் காரணம்.

அமுதா அந்த கல்லூரியில் இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தவள். சேர்ந்த இரு மாதங்களிலேயே மாணவர்களிடமும், சக ஆசிரியர்களிடமும் நல்ல மதிப்பை பெற்றிருந்தாள். சிவபிரகாசம் விஜயனை, மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு விஜயனை பார்த்து கை நீட்டி ஏதாவது பேசுங்கள் என்று சைகையிலேயே உத்தரவிட்டு வெளியே சென்றார். இதற்காகவே கடந்த சில நாட்களாய் பயிற்சி செய்து வந்த விஜயன், தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை மாணவர்களிடம் ஒப்புவிக்க ஆரம்பித்தான். தான் ஒப்புவித்தலை முடித்து விட்டு விஜயன் அமுதாவிடம் சென்று, “மன்னிச்சுக்கோங்க. வகுப்பு நேரத்துல வந்து உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துவிட்டேன்” என்று அசட்டு புன்னகையுடன் வழிந்தான். பின் அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்தான்.

முதல் வேலையாக கணினியில் கல்லூரிக்கான வலைத்தளத்தினை திறந்து அதில் கட்டிடவியல் துறைக்கான பேராசிரியர்கள் பட்டியலை நோட்டமிட்டான். அதில் தனது புகைப்படத்தை பார்த்து மிக குஷியானான் விஜயன். பின் அமுதாவை அந்த பட்டியலில் தேடினான். அப்பட்டியலில் அவளின் பெயர் செல்வி. அமுதா என்று எழுதப் பட்டிருப்பதை பார்த்ததும் மிகவும் பூரிப்படைந்தான் விஜயன்.

இரண்டமாண்டு மாணவர்களுக்கு தினமும் முதல் வகுப்பு அமுதாவே எடுத்து வந்தாள். அடுத்த வகுப்பு விஜயனிற்கு என்று ஒதுக்கப்பட்டது. முதல் வகுப்பிற்கான நேரம் முடிவதற்க்கு 10 நிமிடம் முன்னதாகவே சென்று வகுப்பின் முன் நிற்க ஆரம்பித்தான் விஜயன். வகுப்பு எடுக்க அவனுக்கு இருந்த ஆர்வத்தினால் அல்ல. அமுதாவை நோட்டமிடவே. (தூய தமிழ்ல சொன்னா சைட் அடித்தான்).

அடிக்கடி நூலகத்திற்க்கு செல்ல ஆரம்பித்தான். புத்தகங்களில் இருந்து உரை எடுப்பதற்காக அல்ல. அமுதாவிடம் அரட்டை அடிக்கவே. அதுக்குள்ளே எப்படி அரட்டை அளவுக்கு போய்ட்டானு யோசிக்கிறீங்களா? முதலில் புத்தங்கள் சம்மந்தமாக தான் பேச ஆரம்பித்தான். பிறகு அதன் ஆசிரியர்கள் சம்மந்தமாக, அப்புறம் சக ஆசிரியர்கள், மாணவர்கள் இப்படியே போய் இப்போல்லாம் சகஜமா அரட்டை அடிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டான். இப்படியே போன இவர்களின் நட்பு, நாளடைவில் மிக நெருக்கமான உறவாய் மாறியது.

சிவபிரகாசம் இவர்களை இரண்டமாண்டு மாணவர்களுடன் பெங்களூர் சுற்றுலா செல்ல அனுப்பி வைத்தார்.
சுற்றுலாவின் இரண்டாம் நாள், ஒரு அழகிய மாலை பொழுதில் தன் காதலை அமுதாவிடம் வெளிப்படுத்தினான் விஜயன். முதலில் அதை மறுத்த அமுதா, சுற்றுலாவின் இறுதி நாள் விஜயனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.

இப்போதெல்லாம் விஜயன் வகுப்புக்கு 10 நிமிடங்கள் முன்னதாக வருவ்து இல்லை. ஏனெனில் அமுதாவே 10 நிமிடங்கள் தாமதமாக தான் வகுப்பினை முடித்துக் கொள்கிறாள். காரணம் உங்களுக்கே தெரியும். அவ்வளவு ஆழமான காதலாங்க. (தமிழ்ல சொன்னா டீப் லவ்).

விஜயன் அமுதாவின் காதல் படலம் வகுப்பறை, நூலகம், கல்லூரி உணவகம், துறை ஆய்வகங்கள் என்று பல இடங்களிலும் பரவியது. போட்டு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் சில சக ஆசிரியர்கள், இவர்களை பற்றி துறை தலைவரிடம் பற்ற வைத்தனர். இதனை துறை தலைவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு நாள் அவரின் முன்னரே இவர்களின் காதல் படலம் அரங்கேறியது. இதை கண்ட சிவபிரகாசம் மிகவும் கோபமடைந்தார். (ஏன்னா அவரால பேராசிரியரா இருந்து பண்ண முடியாத ஒரு விஷயத்தை விஜயன் செய்து விட்டானே என்று). இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார் சிவபிரகாசம்.

இந்த எச்சரிக்கைகளுக்கு பயந்தவர்களாய் தெரியவில்லை விஜயனும், அமுதாவும். இரண்டு நாள் அடக்கி வாசித்தார்கள். பிறகு வழக்கம் போல இவர்களின் காதல் படலம் தொடர்ந்தது. இந்த மாதிரி போய்கிட்டு இருந்த கதைல ஒரு பெரிய திருப்பங்க( அதான் ட்விஸ்ட்).

ஒரு நாள் இவர்களின் காதல் படலம் கல்லூரி உணவகத்தில் அரங்கேறி கொண்டிருக்க அதை பால்கி பார்த்துட்டார். அவர் தாங்க உயர்திரு. மாண்புமிகு. திரு. பாலகிருஷ்ணன் ஐயா, கல்லூரி முதல்வர். மறந்துட்டீங்களா!! விஜயன், அமுதா மேல் நடவடிக்கை எடுக்கும்படி பால்கியிடம் இருந்து சிவபிரகாசதிற்கு உத்தரவு வந்தது.

அவர்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்து சிவபிரகாசம், பால்கியின் உத்தரவை விஜயனிடமும், அமுதாவிடமும் கூறினார். பின் விஜயனிடமும், அமுதாவிடமும் நீங்களாகவே இன்னும் 10 நாட்களில் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு கல்லூரியை விட்டு செல்லும்படி கூறினார். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மூன்று நாட்கள் யோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.

பத்தாவது நாள் காலை சிவபிரகாசதின் அறைக்கு கையில் ஒரு கவருடன் விஜயனும், அமுதாவும் நுழைந்தனர். அந்த கவரினை சிவபிரகாசதிடம் கொடுத்தனர். அதை பார்த்து விட்டு பின் இருவரிடம் கைகளை சந்தோசத்துடன் குலுக்கினார் சிவபிரகாசம். என்னங்க யோசிக்கிறீங்க!! விஜயனும், அமுதாவும்’ கொடுத்த கவர் அவர்களின் கல்யாண பத்திரிக்கை. அதை பார்த்த சிவபிரகாசம் இருவரையும் வாழ்த்தி அனுப்பினார். அடுத்த நாள் பால்கி கூட வந்து வாழ்த்தினர்.

இப்போல்லாம் விஜயனுக்கு அந்த ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிச்சு பறக்குற உணர்வு வர்றதே இல்லங்க. ஒரே ஒரு பட்டாம்பூச்சி தாங்க!!!
by - RukmaniRK
================================
எப்படி வரும்....?
By MohammedNaseer

என் வரிகளும்
என் விழிகளும் சந்திக்க
முதல் புள்ளியிலேயே
ஊற்றெடுத்தது நம் காதல்.
நான் கற்பனைகளை
விற்பனை செய்யும்
கவிஞன்,
என் கற்பனைகளுள்
கரைந்து
சொப்பணம் காணும்
ரசிகை நீ.
வர்ணம் தீட்டப்பட்ட
என் வரிகளை
மானசீகமாய் ரசித்தவள்
இன்று
தீட்டிய விரல்களை
நீ
நேசிக்க நினைப்பதேன் ?
மாலைக் கருக்கலுக்கும்
மல்லிகைப் பூவுக்கும்
காதல் வரலாம்
நான் பாறாங்கல்
நீ பச்சைப் புல்
எப்படி வரும்....?
By MohammedNaseer
==============================

Image
காதல் என்பது??? By rajathiraja
காதலிக்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனி போடவும் விதவிதமாய் பெண்களை அனுபவிக்கவும் பயன்படுத்தும் ஒரு காரணியே காதல். இந்த காதலை இளம்பெண்களிடம் கூறி தனது இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.
சர்வ சாதாரணமாக உரையாடலில் துவங்கி தொடுதலை பகிர்ந்ததும் படுக்கைக்கு அழைக்கும் போது தான் பெண் சற்றே தயங்குகிறாள். 'என்னை நீ நம்பவில்லையா?' என ஆண்மகன் கேட்கும் பொழுது, உடன்படவில்லையென்றால் அவனை நம்பவில்லை என நினைத்துக் கொள்வானோ எனக கருதி அதற்கு உடன்படுகிறாள். அவனுடைய ஆசை வார்த்தைகளில் மயங்கி கற்பை தொலைத்து கர்ப்பவதியாகின்றாள். அவனோ கிடைத்தவரை லாபம் என்று எஸ்கேப் ஆகின்றான்.

அவனுக்கு எந்த இழப்பும் இல்லை. இழப்பு முழுவதும் அவளுக்குத் தான். சமுதாயத்தில் மானம் இழந்து மரியாதை இழந்து பின்னர் தற்கொலையும் செய்து கொள்கிறாள். அல்லது விபச்சாரியாகின்றாள். கண்ணியமாக வாழ்ந்த பெற்றோர் அவமானத்தால் தற்கொலைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது எங்கோ ஒரு இடத்தில் நடப்பதல்ல. காதலிக்கும் பெண்களில் எண்பது சதவிகிதம் இப்படித்தான் முடிகின்றது.

காதல், காதல் என்று அனைத்து தவறுகளையும் பெண்களுடன் சேர்ந்து செய்யும் ஆண்மகனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகிறது. பெண்களின் நிலைமை அப்படியா? திருமணம் எவ்வளவு கடினமாக போகின்றது?

யோசியுங்கள் சகோதரிகளே!
காதல் என்பது ஆணாதிக்கத்தின் அடித்தளம்!
அந்த காதலால் பெண்ணினத்திற்கு இழப்பை தவிர எதுவுமில்லை!

By rajathiraja

==========================
By Aruntha
==================
By Muthulakshmi123
==================================


உன்னையே நினைக்கிறன் ,
உன்னையே பார்கிறேன் ,
உன்னையே படிக்கிறேன் ,
உன்னையே எழுதுகிறேன் ,
உன்னையே பேசுகிறேன் ,
உன்னையே வாசிக்கிறேன் ,
உன்னையே நேசிக்கிறேன் ,
உன்னையே யாசிக்கிறேன் ,
உன்னை மட்டுமே சுவாசிக்கிறேன் !
இதன் பெயர்தான் காதல் என்றால் என் காதல் யாரிடத்தில் ?
என் பெயரும்தமிழ்,
என் அழகும் தமிழ்,
என் அறிவும் தமிழ்,
என் பரிவும் தமிழ் ,
என் நடையும் தமிழ்,
என் உடையும் தமிழ்,
என் விழியும் தமிழ்,
என் மொழியும் தமிழ்,
தமிழ் எனும் திருமகன் நான்
By palani123
==================

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
எனப் பாடும் நான்
அன்னையர் தினத்தில்
என் அன்னைக்கு எதுவும் தந்ததில்லை.

மாதா, பிதாவுக்கு பின் குரு எனச் சொல்லும் நான்
ஆசிரியர் தினத்தில் அவருக்கு எதுவும் தந்ததில்லை.

காதலர் தினத்தில் மட்டும் என் காதலிக்காக
கடைகடையாக ஏறி இறங்கி வாழ்த்து அட்டை வாங்குகிறேனே!
ஏன்?
காதலா? காமமா?
By rajathiraja

=========================
மனைவி

மேகத்திடமிருந்து
சற்றுமுன் விடை பெற்ற
மழைத்துளி போல்
சுத்தமானவள் - அவள்
தன்னுயிர் வருத்தி
என்னுயிர் காக்க
என்றென்றும் சித்தமானவள்.
செம்பருத்தி புன்னகையால்
விசிறி செய்து - வியர்வை துரத்தி
எனை துயிலுற வைப்பாள்
விடியலில்
தன் பருத்தி இதழால்
ஒத்தடம் தந்து
துயில் கலைப்பாள்.
விரல்பட விழித்தெழும்
வீணை போல்
இதமாய் சிரிப்பாள்
பிற விரல்பட முனைகையில்
தீயாய் எரிப்பாள்.
நான் சினந்தால்
பனி பொழிவாள்
குளிர்ந்தால் கனி தருவாள்
துண்பால் எனை
அன்பால் அடக்கி ஆள்வாள்
அவள் - குணத்தால்
வெண்பால் போலாள்.
By MohammedNaseer
=========================

கற்பனைகளை சேர்த்து
கனவுகளில் வாழ்ந்து
காதல் செய்கின்ற
காதல் நெஞ்சங்கள்

காதலியை பார்த்து
காதலை சொல்லிட
காதல் ரோஜாவுடன்
காத்திருக்கும் காதலன்

கன்னியின் கண்ணிற்குள்
காதலனாய் வீழ்ந்து
கல்யாண விழாவிற்கு
காத்திருக்கும் காதலி

காதல் வானிலே
கைகோர்த்து பறந்து
கைசேர்க்க முடியாது
கலங்கிடும் உள்ளங்கள்

மனங்களை சேர்த்து வைக்க
மகிழ்வோடு வந்திடாது
மதங்களை பார்த்து நிற்கும்
மானிட நெஞ்சங்கள்

ஜாதி என்ற போர்வையிலே
ஜோடியான காதலரை
ஜடமாக்கி பார்க்கின்ற
ஜீவனற்ற உள்ளங்கள்

இத்தனை உள்ளங்களும்
இனிதாக சேர்ந்திங்கு
இனிப்பாக கூறிடுவோம்
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!
By Aruntha

================
ByMuthulakshmi123
===================
விடியல்
-சிறுகதை

காலக்கட்டிலில், பகற்பொழுது படுத்து உறங்கத்தொடங்கியதும், இரவு மெல்ல கண்விழிக்கத்தொடங்கியது. மேக வாகனங்கள் விண்மீன் விளக்கெரித்துக்கொண்டு நகர்ந்துக்கொண்டிருந்தன. மெல்லிய தென்றல் பசுமைகளை தாலாட்டிக்கொண்டிருந்தது.

இரண்டொரு நாளில் அறுவடையாகவிருந்ததால், வயக்காட்டிலேயே காவலுக்காய் படுத்துக்கொண்டான் இளங்கோ. கயிற்றுக்கட்டிலில் கால்நீட்டிப் படுத்துக்கொண்டு. பழைய பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருக்கும்போதே கொட்டாவி வந்ததால், பாதியிலேயே அதை நிறுத்திவிட்டு தூங்கினான்.

திடீரென்று தூக்கம் கலைந்தபோது, தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. காரணம் ஒரு உருவம் கிணற்றுக்கு அருகாமையில் நின்றுகொண்டிருந்ததுதான்.

"யாரது? யாரது அங்கே?"இளங்கோ குரல் கொடுத்ததும், அவ்வுருவம், மோட்டர் கொட்டகையின் பின்புறம் ஒடி மறைந்தது. விருட்டென்று எழுந்த இளங்கோ, கையில் டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு துணிச்சலாக, அவ்வுருவம் மறைந்த இடம் நோக்கி நகர்ந்தான். அதற்குள்-

"இளங்கோ……. நான் தான்……. முத்து"குரல் கொடுத்தபடியே அந்த உருவம் மோட்டர் கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கின் வெளிச்சத்திற்கு வந்தது.

"என்னடா முத்து இது? இந்த நட்டநடு ராத்திரியில……. திருடன் போல?" இளங்கோ கேட்டதும்,

"டேய் இளங்கோ……. நான் சாகணும்டா……… செத்துத் தொலையறதுக்காகத்தான் இங்க வந்தேன். உங்க கிணத்துல விழுந்து உயிர விடப்போறேன்……. என்ன தடுக்காதடா" என்று கதறி அழுதான் முத்து.

முத்துவும் இளங்கோவும், பனிரெண்டாம் வகுப்புவரை ஒன்றாக படித்தவர்கள். குடும்ப சூழல் காரணமாக, இளங்கோ, படிப்பை நிறுத்திவிட, முத்துமட்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தான். தற்போது, இளங்கலை பட்டத்திற்க்கான இரண்டாமாண்டில் இருந்தான் அவன்.

"முத்து …… என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சி? உனக்கு என்னடா? ஆச்சி" ஆவேசத்தோடு கேட்டான் இளங்கோ.

" இளங்கோ……. நான் ஒரு பொண்ண காதலிச்சேன்டா. உயிருக்குயிரா காதலிச்சேன்டா. அவளும் என்னை காதலிச்சா. ரெண்டு வருடமாக நல்லா சிரிச்சுபேசி பழகிட்ட இருந்தவ . இன்னிக்கு திடீர்ன்னு வந்து, என்ன மறந்துடு. இனிமே என்னை பார்காத, எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு போயிட்டாடா. என்னால தாங்க முடியலடா. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் என்னால அவள மறக்கமுடியாதுடா. அதான் நான் சாகப்போறேன"

"செத்து. . "

". . . . . . " முத்து அமைதியாக நின்றான்.

"அடச்சி... அற்ப விசயத்துக்கு உயிரவிட எப்படிடா துணிச்சல் வந்தது உனக்கு? உன்ன நான் புத்திசாலின்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, நீ படு முட்டாளா இருக்கிறியே! தோ…. பாரு…… வாழ்க்கையில வாலிபம் ஒரு பருவம். அந்த பருவத்துல காதல் ஒரு சம்பவம். அந்த ஒரு சின்ன சம்பவத்துல ஏற்பட்ட தோல்வியால, வாழ்க்கையையே முடிச்சிக்கிறது முட்டாள் தனமானது."


" இல்ல இளங்கோ. உனக்கு என் நெலம புரியாது"

"என்னடா பொல்லாத நெலம? நான் கேட்கறேன். . ஒரு பெரிய போர்வையில சின்னதா ஒரு கிழிச்சல் ஏற்பட்டுட்டா, உடனே அந்த போர்வையையே வேணாம்னு தூக்கியா போட்டுடறோம்? அந்த கிழிசல தச்சு பயன்படுத்தறதில்ல? அதுப்போலத்தான் வாழ்க்கைப் போர்வையில காதல் தோல்வி ஏற்படுத்துறது சின்னச்சின்ன ஓட்டைகள்தான். சின்னச்சின்ன தோல்விக்காகலாம் சாகணும்ன்னா, இந்த உலகத்துல ஒருத்தவன் கூட உயிரோட இருக்க முடியாது."

முத்து மௌனம் காத்தான். இளங்கோ தொடர்ந்தான்.

"சரி சாகப்போறங்கறியே, நீ படிச்சு முடிச்சு, ஏதாவது சாதிப்பே, சம்பாதிப்பேன்னு கனவு கண்டுகிட்டு கெடக்கிற உங்கப்பா அம்மாவ ஒரு நொடி நெனச்சு பாத்தியா? விடியறதுக்கு வெகு முன்னாடியே கண்முழிச்சு, வயக்காட்டுல வந்துவிழுந்து, வெய்யில்ல காஞ்சி, மழையில நனைஞ்சி, பொழுது சாய்ஞ்சதுக்கப்புறம் வீடுபோய் சேரும்; உங்க அப்பா அம்மாக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை,நீ படிச்சு முடிச்சு, நல்ல வேலைக்குப்போய் அவுங்கள உட்கார்த்தி வச்சி சாப்பாடு போடுவேங்கறதுதான். அற்ப விசயத்துக்காக நீ அறிவுகெட்டுபோய் உயிர மாச்சிகிட்டா…… அவங்க கதீ? அவங்க கனவு? உன்ன சிரமப்பட்டு, பெத்து வளர்த்து ஆளாக்கி, கடன ஒடன வாங்கி படிக்க வச்சதுக்காக அவங்களுக்கு நீ கொடுக்கும் தண்டனையா இது"

"ஐயோ! ஏன்ன புரிஞ்சுக்கோ இளங்கோ, நீ சொல்றதெல்லாம் தெரியுது. ஆனா…. என்னால அவள மறக்கமுடியாதே!" தன் பின்னந்தலையின் மயிற்கற்றை பிடித்து இழுத்து விட்டபடி அழுத்தமாய் சொன்னான், முத்து.

"மறக்காதே! நான் உன்ன மறக்கச் சொன்னேனா? அவள நல்லா ஞாபகம் வச்சுக்கோ. உன்ன நிராகரிச்சுட்டு போனவள நெனச்சு, வாழ்க்கையில போராடு, வாழ்க்கையின் உச்ச நிலைக்குப் போக முயற்சி செய். ஏதாவது சாதிச்சு காட்டு. அதாவது, எதிர்காலத்துல, அவ ஒன்னப்பத்தி கேள்விபடற ஒவ்வொரு நொடியிலேயும், ஐயையோ! தப்பு பண்ணிட்டேனே! இப்படிப்பட்ட புத்திசாலிய, திறமசாலிய நான் தவற விட்டுட்டேனேன்னு அவ வருத்தப்படற அளவுக்கு நீ செயல்படணும்.அவ கண்ணு முன்னாடியே நீ பெரிய ஆளா வளர்ந்து காட்டணும். ஊரே உன்ன பார்த்து பெரும படற மாதிரி வாழ்ந்துக்காட்டணும். அதவிட்டுட்டு, நீ தற்கொல பண்ணிக்கிட்டினா, இப்படி ஒரு அற்பமான கோழயவா ரெண்டு வருசமா காதலிச்சோம். நல்ல வேள….. தப்பிச்சோம்ன்னு அவ சந்தோசப்படமாட்டா?"

முத்துவின் முகம் மாறியது. அவனுக்கு நிகழ்ந்த எண்ண மாற்றமே அந்த காரணம். இளங்கோ தொடர்ந்தான்

"முத்து….நான் பாரு, படிப்பு பாதியிலேயே விட்டுடேன். என் வாழ்க்கை இருட்டாத்தான் போப்போவுதுன்னு எனக்கு தெரியும். ஆனா நீ…. படிப்பு மிகப்பெரிய செல்வம். அதவச்சு , உலகத்தையே வாங்கலாம்:ஆளலாம். இது படிக்கிற வயசு. இதுல காதல் கத்திரிக்கான்னு ஒன்ன நீயே திசை திருப்பிக்காம ஒழுங்கா படிச்சிருந்தா, உனக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது. சரி விடு ! இனியாவது கவனத்தோடு படி. எல்லா விசயத்திலேயும் தன்னம்பிக்கையோடு செயல்படு. தோல்விகள கண்டு பயப்படாதே. தோல்விகள் காய்ச்சல் மாதிரி – வரும்: போகும். வெற்றி வேணுமுன்னு மனதளவிலே உறுதியோடு போராடு. நிச்சயம் நீ ஜெயிப்ப. பிரச்சனைகள கண்டு, பயந்து ஓடாத! அதிலிருந்து தப்பிக்கிறதுக்காக, தற்கொலதான் முடிவுன்னு, நீயே மரணத்தை தேடாத! போராட்டம்தான் வாழ்க்கை. போராடு! ஏதோ உன் அளவுக்கு படிக்கலைனாக்கூட, எம் மனசுக்கு பட்டத சொன்னேன் அவ்வளவுதான்."

இளங்கோ பேசி முடித்ததும் முடிவை மாற்றிக்கொண்டு முத்து நகர்ந்தான். பட்சிகளின் குரலெழத்தொடங்கியது. தூரத்தில் சேவல் சோம்பல் முறித்து கூவியது. இத்தருணத்தில் விடியல்; - பூ மிக்கு மட்டுமல்ல, முத்துவின் வாழ்க்கைக்கும்தான்.

-புதுவைப் பிரபா-

==========================================
Image

==============================
Image
By RJanaki

======================
காதலர் தின கவிதைப்போட்டிக்கான கவிதை

ஒவ்வொருநாளும்….



மாந்த இனம் உயிர்த்தலுக்கு
ஆக்ஸிஜன்கூட
அடுத்தபட்ச தேவைதான்
முதல் தேவை
காதல்.

மரம் செடி கொடிகள்கூட
அதிகம் சுவாசிப்பது
கார்பனையல்ல
காதலைதான்.

உலகம்
முக்கால்பாகம்
நீரால்ஆனது-
கால் பாகம்
நிலத்தால் ஆனது-
என்பெதெல்லாம் சுத்தப்பொய்.
அது-
முழுக்க முழுக்க
காதலால் ஆனது

ஆனால்-
நவீன யுகத்தில்
காதலின் தன்மை
கவலைக்குரியது.

இன்று-
பெரும்பாலான காதல்
பொய்பூசிக்கொண்டு
திரிகிறது.

இப்போதுதெல்லாம்-
இனம் - மதம்
மொழி - பணம் பார்த்து
வருகிறது காதல்.

காலையில் பிள்ளையார் சுழி
மாலையில் முற்றுப்புள்ளி
என பொழுதுபோக்காகிவிட்டது காதல்!

சரி!
உண்மைக்காதல்
உலகில்
இல்லவே இல்லையா?

இருக்கிறது.

கலப்படம் இல்லா
உண்மைக்காதலை
உணர ஒரு வழி
சொல்லட்டுமா?

உண்மை காதலர்களுக்கு
ஆண்டில் ஒரு நாள் மட்டுமல்ல-
அத்தனை நாட்களும்
காதலர் தினமே!

புதுவைப்பிரபா

==========================

காதலர் தின போட்டிக்காக
ஒரு புதிய முயற்சி


காதல் ஆத்திச்சூடி

ன்பு செய விரும்பு
சையை பெருக்கு
ன்சொல்லே பேசு
ர்ப்பு விசையுணர்
ண்மையாய் இருந்திடு
டல் கொள்ள மற
ள்ளுதல் தவிர்த்திடு
ற்றபடி மாற்றிகொள்
யம் அகற்றிடு
ழுக்கம் காத்திடு
ங்கு நிலை வாழ்க்கை கொள்
ஓளவியம் படுபடி வாழ்
றிணைகாதல் அறவே மற.

புதுவைப்பிரபா

================
காதலர்தின போட்டிக்காக ஒரு பாடல்
(முடிந்தவர்கள் மெட்டமைத்து பாட முயற்சிசெய்யுங்கள்)
பாடலின் சூழல்: நன்றாக பழகி வந்த காதலி தீடீரென மாறிவிடுகிறாள்.காதலனை பார்க்க தவிர்க்கிறாள். அவன் தவிதவித்து பாடுகிறான். பாடலின் கடைசி வரிகளில் அவளின் மனநிலையை பிரதிபலிக்கிறாள்.

பல்லவி:

என் ஆயுள் ரேகையே நீ எங்கே இருக்கிறாய்
என் விழிகளில் விழாமல் ஏன் நிழலையும் மறைக்கிறாய்
ஏ. .பெண்ணே வா முன்னே நான் தவியாய் தவிக்கிறேன்
நீ வரா காரணம் புரியாமல் துடிக்கிறேன்

சரணம் 1:


உந்தன் உருவம் காட்டாமல் ஜன்னல்
சுவராய் தெரிகின்றதே என் கண்ணில்
எங்கே போனாளோ எந்தன் மின்னல்
பாதி உயிரில்லை தற்போது என்னில்

உன்னை பிரிந்தென்னால் வாழ முடியாது
நீதான் என் ஜீவன் ஜீவன் என்றாயே
உறவுகள்வந்து வதைத்தபோதும்நீ
ஒற்றைக் காலில்தான் எனக்காய் நின்றாயே
இப்போதெங்கு சென்றாய் பெண்ணே!


சரணம் 2:


ஓளியை இழந்து போகின்றபோது
நிலவு என்கின்ற பெயர் அதற்கேது
என்னை பிரிந்து நீ போகின்றபோது
மூச்சு என்கின்ற பேச்செனக்கேது

உன்னைக்காணாமல் எந்தன் நுரையீரல்
சுவாசம் கொள்ளாதே உனக்குத் தெரியாதா?
கண்ணே என் முன்னால் வந்து நீ நின்றால்
பிழைத்துக்கொள்வேன் நான் உண்மை புரியாதா?
பிணமாய் ஆகும்முன் வா வா பெண்ணே!


பெண் குரலில்:

மாமன்மகன் எனக்கிருக்கிறான்
அவனை நான் கைப்பிடிக்கிறேன்
பழையவற்றை மறந்துவிடு நீ என் தோழா. . .

பெற்றோர் சொல் கேட்டடங்கினேன்
புதுவாழ்கை நான் தொடங்கினேன்
முடிந்தால் நீ என் திருமணம் காண வா வா!

புதுவைப்பிரபா

==============================
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”