Page 1 of 1

பணம் - பாசம் - கட்டுரைகளுக்கான பரிசுத் தொகை ரூ.10,000/-

Posted: Sat Sep 08, 2012 11:52 pm
by ஆதித்தன்
"பணமும் பாசமும்"
கட்டுரை போட்டி
இன்றைய சமூகத்தின் முக்கியத் தேவையாக அமைந்திருப்பது பணம். அதைப்போல் முக்கியத் தேவையானது பாசம். ஆனால் இன்றைய நடைமுறையில் பாசத்திற்கும் பணத்திற்கும் உண்டான வித்தியாசமும் உறவும், அவற்றிற்கான சரியான பயன்பாடும் முழுமையாக தெரியவில்லை என்பது திண்ணம். ஆகவே, பணம் என்பதனையும் பாசம் என்பதனையும் தெளிவாக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காக இக்கட்டுரைப் போட்டி.

நீங்களும் இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, பணம் மற்றும் பாசம் ஆகியவற்றின் மீதுள்ள உங்கள் கருத்துக்களை தெளிவாகக் கூறி பரிசினை வென்று செல்ல அழைக்கிறோம். மேலும் இப்போட்டியில், நீண்ட கட்டுரையாக மட்டும் அல்லாமல், நல்ல கதையாகவும் பணம் மற்றும் பாசத்திற்கான கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகளுக்கு தலா ரூபாய்.100/-

கட்டுரை எழுத வேண்டிய தலைப்பு
பணமும் - பாசமும்!

எழுதும் கட்டுரை அல்லது கதைகளை இன்று முதலே நீங்கள் கீழ் உள்ள சப்மிட் என்ற பட்டனைச் சொடுக்கி சமர்ப்பிக்கலாம்.

Image
மேல் உள்ள சப்மிட் என்ற பட்டனை சொடுக்கி, உங்களது கதை அல்லது கட்டுரையை எழுதி சமர்ப்பிக்கவும்.
போட்டியின் நோக்கம், பணம் மற்றும் பாசம் ஆகியவற்றின் சரியான பயன்பாட்டு முக்கியத்துவத்தினை இளைய சமுதாயத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அறிவிக்கப்பட்டது என்றாலும், கட்டுரையை வடிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொன்னான நேரத்தினைக் கணக்கில் கொண்டு இச்சிறு தொகையை பரிசாக அறிவித்துள்ளோம். அதே நேரத்தில் பரிசுத் தொகை பகிர்வு முதலில் வரும் சிறந்த 100 கட்டுரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதனை அறிந்து விவேகமாக செயல்படுங்கள்.

விதிமுறைகள்:
[*] கட்டுரை/கதை கொடுக்கப்பட்ட வார்த்தையை மையமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும்
[*] 60 அடிகளுக்கு குறைவில்லாமல், சொந்த எழுத்து நடையில் இருத்தல் வேண்டும்.

[*] கட்டுரையை/கதையை இப்பதிவில் மேல் கொடுக்கப்பட்ட சப்மிட் பட்டன் வழியாக பதிந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னூட்டமாகக் கொடுத்தல் கூடாது.
[*] இங்கு பதியப்படும் கட்டுரை/கதை வேறு தளங்களில் வெளியிடப்பட்டிருத்தல் கூடாது மற்றும் வெளியிடக் கூடாது.
[*] ஒருவர் எழுதிய கட்டுரை/கதையைப் போன்றே மற்றொருவர் மீள் படிவம் போன்று நகல் எடுத்து எழுதுதல் கூடாது.
[*] கட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற சொற்றொடருடனும் பிழையின்றியும் இருக்க வேண்டும்.
[*] ஒருவரிடம் இருந்து அதிகபட்சம் 1 கட்டுரை மட்டுமே ஏற்கப்படும். தங்களது ஓர் கட்டுரை ஏற்கப்படும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.
[*] கட்டுரைக்கான பரிசுத் தொகை, உங்களது படுகை கணக்கில் வரவு(Cash Balance) வைக்கப்படும். அதனை குறைந்தப் பற்றத் தகுதித் தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.
[*] கட்டுரை/கதைகளை ஏற்றுக் கொள்வது என்பது படுகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
[*] போட்டியின் நடு நடுவே கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டு ஏற்கப்பட்ட கட்டுரை/கதைகள் இப்பதிவின் பின்னூட்டமாக வெளியிடப்படும்.
[*] இடையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிசுத் தொகையை மாற்றியமைக்கவும் படுகை நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதனை மறவாதீர்.
[*] இவ்வாய்ப்பினை என்று வேண்டுமானாலும் அறிவிப்பின்றி நிறுத்தம் செய்யவும் படுகை உரிமம் கொண்டுள்ளது.

:thanks:
அன்புடன் ஆதித்தன்
நாள் : செப்டம்பர் 8 - 2012
[/color][/b]
Image
பரிசு பெற்றக் கட்டுரைகள் மற்றும் கதைகள் இப்பதிவின் பின்னூட்டமாக வெளியிடப்படும்.

பணமும் பாசமும்

Posted: Mon Sep 17, 2012 10:13 am
by சாந்தி
Image
பணமும் பாசமும் என்று கொடுக்கப்பட்ட தலைப்பில்.... பணத்தின் தேவைகளையும்... அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றியும்.... பாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எனக்குத் தெரிந்த சில
கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

முதலில் பணத்தைப் பற்றி பார்ப்போமா.....
https://encrypted-tbn1.gstatic.com/imag ... DtOdheLkLA[/fi]பணம்:-

வாழ்க்கையின் மிக முக்கிய தேவைகளில் பணம் முதலிடத்தை வகிக்கிறது....

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி... பிணமே வாயைத் திறக்கும் போது
உயிரோடு இருக்கும் நாம் மட்டும் சும்மாவா இருக்கப் போகிறோம்! எல்லோருமே பணத்தைத் தேடி அலைகிறோம்.... எந்த வகையிலாவது பணக்காரனாக மாட்டோமா என்ற நப்பாசை எல்லோருக்கும் கண்டிப்பாக இருக்கிறது...

பணம் இருந்தால்தான் நமக்கு மிக முக்கியத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் முதலியவற்றைப் பெற முடியும். அதன் பிறகு நமக்குத் தேவையான பிற பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, கணிணி போன்ற இன்னும் பல வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும்... வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் அவசியம்தான்....ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது....

"பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது"என்பது பழமொழி.

பணம் அதிகமாக இருப்பவனுக்கு தலை கால் புரியாது...தலைக்கனம் பிடித்து ஆடுவான்... யாரையும் மதிக்க மாட்டான்....பணம் இல்லாதவர்களை தனக்கு அடிமையாக நினைப்பான்....பணம்தான் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது....பணம்தான் நல்ல புத்தியுடையவனை முட்டாளாக்குகிறது...
முட்டாளை புத்தியுடையவனாக்குகிறது....உண்மையை பொய்யாக்கவும்....பொய்யை உண்மையாக்கவும் செய்கிறது....ஆகவே பணம் நல்ல செயல்களுக்கும் பயன்படுகிறது...தீய செயல்களுக்கும் பயன்படுகிறது.
அது யாரிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்தது. பணக்காரன் ஏதாவது பெரிய தவறு செய்தால் பணத்தைக் கொடுத்து சரி செய்துவிடுகிறான்... ஆனால் ஏழை தவறு செய்தால்....அவ்வளவுதான்...அவன் செய்யாத தவறுகளுக்கெல்லாம் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பான்....அவனுடைய வாழ்க்கையே அழிந்து போகும்...

நல்ல குணம் உள்ளவன் இறந்து போனால் எல்லோரும் அவனைப் பார்த்து உண்மையிலேயே இரக்கப்படுவர்....ஆனால் பணத்திமிர் பிடித்தவன் இறந்து போனால்....அவனுடைய பணத்துக்காக பொய்யாக அழுவர்....

இளவயது முதல் முதியவர்கள் வரை எல்லோருமே பணத்தின் மேல் குறியாக இருக்கின்றனர்....அதுவும்
இன்றைய காலகட்டத்தில் படிக்கின்ற காலகட்டத்திலேயே சம்பாரிக்கவும் ஆரம்பித்துவிடுகின்றனர்...அந்தப் பணத்தைக் கொண்டு புகைப்பிடித்தல்,கஞ்சா அருந்துவது,மது அருந்துவது போன்ற தீய செயல்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஒரு சில இளைங்கர்கள்தான் பணத்தை வீணடிக்காமல் தங்களுடைய படிப்புக்காகவும் பெற்றோர்களின் செலவுக்காகவும் பயன்படுத்துகின்றனர்...

பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவனுக்கு நிம்மதியாக தூங்க முடியாது...திருடன் வந்து திருடிக் கொண்டு போய்விடுவானோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஏழைக்கு அந்த பயம் கிடையாது.... ஆகவே பணம் அளவோடு இருந்தால் கவலையே இல்லை.....

இப்பொழுது பாசம் பற்றி பார்ப்போமா....
https://encrypted-tbn2.gstatic.com/imag ... hWHrHo4HaQ[/fi]
பாசம்:-

பாசம் என்ற சொல்லுக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. பாசத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது...ஒருவரை அடித்து திருத்துவதைவிட பாசமாக பேசினாலே போதும்...திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது...ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள்...
சிலர் பாசமாக பேசுவார்கள்... சிலர் தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்த அன்பளிப்பாக ஏதாவது கொடுப்பார்கள்...

முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் கட்டாயமாக பாசத்துடன் இருக்க வேண்டும்... நம் முன்னோர்கள்காலத்தில் எல்லாம் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பாசத்தைக் காட்டி வாழ்க்கையை சந்தோஷமாக கழித்தார்கள்... அதனால் குழந்தைகளுக்கும் அனைவரின் பாசமும் கிடைத்தது...

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் தனிக்குடித்தனம் செய்கிறார்கள்.....பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தையை வேலைக்காரியிடமோ அல்லது குழந்தைள் காப்பகத்திலோ விட்டுச் செல்கின்றனர். குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைப்பதில்லை. காலையில் வேலைகுச் செல்லும் போது குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது...வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுவதால் அப்பொழுதும் தூங்கிவிடும்... பெற்றோர்களுக்கு குழந்தையுடன் பாசமாக பேசுவதற்கோ, விளையாடுவதற்கோ நேரம் இருப்பதில்லை. பாசத்திற்காக ஏங்க ஆரம்பித்துவிடுகிறது. பெற்றோரை வெறுக்க ஆரம்பித்துவிடுகிறது. சில குழந்தைகள் பெற்றோரை மதிப்பதுமில்லை...வளர்ந்து பெரியவனாகின்ற போது கெட்டவர்கள் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது...

அனாதைக் குழந்தைகளைப் பாருங்கள்.... அவர்களுக்கெல்லாம் யார் இருக்கிறார்கள்... நாம்தான் அவர்களிடமும் பாசமாக நடந்து கொள்ள வேண்டும்.....

எல்லோருக்கும் பணம் சம்பாரிப்பது....ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது என்ற
குறிக்கோளுடனே இருப்பதால் பாசத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது. நாம் எல்லோருடனும் பாசமாக இருந்தால் நமக்கு எப்பொழுது உதவி தேவை என்றாலும் நமக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.

ஆகவே எல்லோருடனும் பாசமாக இருங்கள்... பணம்....பணம் என்று அலைவதை விட்டுவிடுங்கள்..
அளவான பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

வாழ்க்கைக்கு பணமும் முக்கியம்தான்.. அதைவிட பாசம்தான் முக்கியம்....பாசத்தைக் கொண்டு பணத்தை சம்பாதித்துவிடலாம்.... ஆனால் பணத்தைக் கொண்டு பாசத்தை சம்பாதிக்க முடியுமா....

யோசித்து செயல்படுங்கள்.....
Image

:thanks: :thanks: :thanks:

பணமும்,பாசமும்

Posted: Fri Sep 28, 2012 12:06 am
by muthulakshmi123
முதலில் ஒரு நல்ல தலைப்பில் கட்டுரை எழுத வாய்ப்பளித்த படுகைக்கு நன்றி…மிகவும் நல்ல ஒரு தலைப்பு..அனைவரும் இக்கால கட்டத்தில் யோசித்து செயல்பட தக்க ஒரு தலைப்பு….

இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாக காட்சி தரும் காலகட்டம் இந்த காலம்…பணமும் அதி முக்கிய தேவையாக இருக்கு பாசமும்(அன்பு என்றும் சொல்லலாம்) அதை விட முக்கிய தேவையாக இருக்கு.. முதலில் பணத்தைப் பற்றி சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

பணம்:

முன்பு பாசமாக இருந்தால் பாதுகாப்பு தானாக கிடைத்தது..ஆனால் இப்போதோ!!!!!!!!!!!!!!!! பாதுகாப்பாக(பணத்துடன்)வீடு,வாசல் சொத்து,என இருந்தால் தான் பாசமே வருகிறது…

இக்காலத்தில் பணத்தின் நிலையை கவிஞர் வைரமுத்து அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்….
பணம் ஒரு விசித்திர மாயமான். அது துரத்துபவனுக்கு குட்டி போட்டு விட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.
குட்டிகளில் திருப்தி அடையாத மனிதன் தாய் மானைப் பிடிக்கும் வேட்டையில் தவிக்க தவிக்க ஓடிச் செத்துப் போகிறான்..
எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்…

பணம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் என நினைத்து அதன் பின் ஓட முயற்சிக்கிறோம்..மாறாக பணம் நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக தேவைகளை பெருக்கவே செய்கிறது,என்பதில் சந்தேகமே இல்லை…

மேலும் சாதனைகளின் மடத்தனமான அளவுகோலாக நாம் பணத்தையே பயன்படுத்துகிறோம் ,ஏனெனில், பணத்தை தான் நாம் பொதுவான அளவுகோலாக உயர்வான இடத்தில் வைத்து இருக்கிறோம்…என்ன செய்வது???

கடைசியாக ஒன்று

பணம் பிரித்து பார்க்கும்,பாசம் சேர்த்து பார்க்கும் என்பதை
மறந்து விடக்கூடாது….மேலும்,
பணம் பாசத்தை அறிவிக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர அளக்கும் கருவியாக இருக்ககூடாது…

பாசம்:

பாசத்தை என்னவென்று சொல்வது அன்பென்பதா?மனிதநேயமென்பதா? அன்பின் வலியது உயிர் நிலை என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்…
உயிர் நிற்கின்ற உடம்பு அன்பு நெறியில் இயங்குகிறது என்றும், அன்பு செய்வதே உடம்பு எடுத்ததன் பயனாகும் என்று குறள் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்.

அன்பு குடும்பத்தில் அரும்பி, சமுதாயத்தில் மலர்ந்து, உலகளவில் கனிய வேண்டிய ஒன்று…என்பதை நாம் மறக்க கூடாது.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ண வேண்டும் என மானிட சமுதாயத்திற்கு அறிவுறுத்தினார் அருட் பிரகாச ராமலிங்க வள்ளலார்..

அவர் இறைவனை பிரார்த்திக்கும் போது கூட “அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்,ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் என்றார்.

மனிதர்களிடம் நாம் எவ்வாறு அன்பு செலுத்துகிறோமோ அவ்வாறே பிராணிகளிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்பதை குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் படி பாடினார் நம் பாரதி..
“வண்டி இழுக்கும் நல்ல குதிரை
நெல்லு வயலை உழுது வரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா”

இயந்திர கதியில் பணத்தின் பின் போய் கொண்டிருக்கும் இன்றைய உலகில் மனிதர்கள் அன்பு என்ற அருந்தவச் சொல்லையே மறந்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது..
கடைசியாக ஒன்று பணத்தை வாங்கவும் முடியும், கொடுக்கவும் முடியும்..

ஆனால்,,, அன்பு தன்னையே கொடுக்கிறது..அது வாங்கப் படுவதில்லை…
ஆயிரம் பணம் கொடுத்து நாயை வாங்கினாலும் அதன் வாலை ஆட்ட செய்ய அன்புசெலுத்த வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை…

எனவே


பணம், பாசம் இன்னும் இரு கண்களையும் சரியான படி பயன் படுத்தி வாழ்க்கையில் பயன் அடைவோம்....