"பணமும் பாசமும்"
கட்டுரை போட்டி
இன்றைய சமூகத்தின் முக்கியத் தேவையாக அமைந்திருப்பது பணம். அதைப்போல் முக்கியத் தேவையானது பாசம். ஆனால் இன்றைய நடைமுறையில் பாசத்திற்கும் பணத்திற்கும் உண்டான வித்தியாசமும் உறவும், அவற்றிற்கான சரியான பயன்பாடும் முழுமையாக தெரியவில்லை என்பது திண்ணம். ஆகவே, பணம் என்பதனையும் பாசம் என்பதனையும் தெளிவாக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காக இக்கட்டுரைப் போட்டி. நீங்களும் இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, பணம் மற்றும் பாசம் ஆகியவற்றின் மீதுள்ள உங்கள் கருத்துக்களை தெளிவாகக் கூறி பரிசினை வென்று செல்ல அழைக்கிறோம். மேலும் இப்போட்டியில், நீண்ட கட்டுரையாக மட்டும் அல்லாமல், நல்ல கதையாகவும் பணம் மற்றும் பாசத்திற்கான கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகளுக்கு தலா ரூபாய்.100/-
கட்டுரை எழுத வேண்டிய தலைப்பு
பணமும் - பாசமும்!
எழுதும் கட்டுரை அல்லது கதைகளை இன்று முதலே நீங்கள் கீழ் உள்ள சப்மிட் என்ற பட்டனைச் சொடுக்கி சமர்ப்பிக்கலாம்.
மேல் உள்ள சப்மிட் என்ற பட்டனை சொடுக்கி, உங்களது கதை அல்லது கட்டுரையை எழுதி சமர்ப்பிக்கவும்.
போட்டியின் நோக்கம், பணம் மற்றும் பாசம் ஆகியவற்றின் சரியான பயன்பாட்டு முக்கியத்துவத்தினை இளைய சமுதாயத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அறிவிக்கப்பட்டது என்றாலும், கட்டுரையை வடிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொன்னான நேரத்தினைக் கணக்கில் கொண்டு இச்சிறு தொகையை பரிசாக அறிவித்துள்ளோம். அதே நேரத்தில் பரிசுத் தொகை பகிர்வு முதலில் வரும் சிறந்த 100 கட்டுரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதனை அறிந்து விவேகமாக செயல்படுங்கள்.விதிமுறைகள்:
கட்டுரை/கதை கொடுக்கப்பட்ட வார்த்தையை மையமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும்
60 அடிகளுக்கு குறைவில்லாமல், சொந்த எழுத்து நடையில் இருத்தல் வேண்டும்.
கட்டுரையை/கதையை இப்பதிவில் மேல் கொடுக்கப்பட்ட சப்மிட் பட்டன் வழியாக பதிந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னூட்டமாகக் கொடுத்தல் கூடாது.
இங்கு பதியப்படும் கட்டுரை/கதை வேறு தளங்களில் வெளியிடப்பட்டிருத்தல் கூடாது மற்றும் வெளியிடக் கூடாது.
ஒருவர் எழுதிய கட்டுரை/கதையைப் போன்றே மற்றொருவர் மீள் படிவம் போன்று நகல் எடுத்து எழுதுதல் கூடாது.
கட்டுரைகள் வாசிப்பதற்கு ஏற்ற சொற்றொடருடனும் பிழையின்றியும் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் இருந்து அதிகபட்சம் 1 கட்டுரை மட்டுமே ஏற்கப்படும். தங்களது ஓர் கட்டுரை ஏற்கப்படும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.
கட்டுரைக்கான பரிசுத் தொகை, உங்களது படுகை கணக்கில் வரவு(Cash Balance) வைக்கப்படும். அதனை குறைந்தப் பற்றத் தகுதித் தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுரை/கதைகளை ஏற்றுக் கொள்வது என்பது படுகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
போட்டியின் நடு நடுவே கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டு ஏற்கப்பட்ட கட்டுரை/கதைகள் இப்பதிவின் பின்னூட்டமாக வெளியிடப்படும்.
இடையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிசுத் தொகையை மாற்றியமைக்கவும் படுகை நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்பதனை மறவாதீர்.
இவ்வாய்ப்பினை என்று வேண்டுமானாலும் அறிவிப்பின்றி நிறுத்தம் செய்யவும் படுகை உரிமம் கொண்டுள்ளது.
அன்புடன் ஆதித்தன்
நாள் : செப்டம்பர் 8 - 2012
[/color][/b]
பரிசு பெற்றக் கட்டுரைகள் மற்றும் கதைகள் இப்பதிவின் பின்னூட்டமாக வெளியிடப்படும்.