அனுராதபுரம்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

அனுராதபுரம்

Post by cm nair » Tue Nov 12, 2013 10:57 am

அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலானமகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்குமாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. அனுராதபுர இராச்சியம் (Anuradhapura Kingdom) அல்லது அனுராதபுர இராசதானி (சிங்களம்: අනුරාධපුර රාජධානිය என்பதுஇலங்கையின் முதல் திட்டமிடப்பட்ட இராச்சியம் ஆகும். இது இலங்கையில் அதிக காலம் ஆட்சியில் இருந்த இராசதானி ஆகும். பண்டுவாசுதேவ மன்னனின் மகனான பண்டுகாபய மன்னனால் உருவாக்கப்பட்டது. அவனேஅனுராதபுரத்தைத் தலைநகரமாக மாற்றினான். அனுராதபுர இராச்சியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாட்டிற்கு புத்த மதம் அறிமுகமானதைக் குறிப்பிடலாம். இவ்விராச்சியம் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருந்தது.
பொருளடக்கம்
• 1 ஸ்ரீ மகா போதி
• 2 நீர்ப்பாசனம்
• 3 மீள் கண்டுபிடிப்பு
• 4 அனுராதபுரத்திலுள்ள அழிபாடுகள்

 ஸ்ரீ மகா போதி
முதன்மைக்கட்டுரை:ஸ்ரீ மகாபோதி
இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.


ஸ்ரீ மாகா போதி,அனுராதபுரம்
 நீர்ப்பாசனம்
இந்த நகரைச் சுற்றி, 5 பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப் பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன.
 மீள் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
 அனுராதபுரத்திலுள்ள அழிபாடுகள்
• ஸ்ரீ மகாபோதி
• ருவான்வெலிசாய
• தூபாராமய
• லோவமகாபாய
• அபயகிரி விகாரை
• ஜேதவனாராமய
• மிரிசவெட்டி தாதுகோபுரம்
• லங்காராமய
• இசுருமுனிய
• மகுல் உயன
• வெஸ்ஸகிரி
• ரத்ன பிரசாதய
• இராணி மாளிகை
• தக்கிண தாதுகோபுரம்
• செல சைத்திய
• நாக விகாரை
• கிரிபத் வெஹெர
• குட்டம் பொக்குண
• சமாதி சிலை
• தொலுவில சிலை
அனுராதபுரம்(குட்டம் பொகுண)




அனுராதபுரம்
Location in Sri Lanka
அமைவு: 8°21′″N 80°23′7″E

நாடு இலங்கை

இலங்கையின் மாகாணங்கள் வடமத்திய மாகாணம்

இலங்கையின் மாவட்டங்கள் அனுராதபுர மாவட்டம்

ஆரம்பிக்கப்பட்டது கி.மு. நான்காம் நூற்றாண்டு
அரசு
- வகை மாநகர சபை
- மேயர்
பரப்பளவு

- நகரம் 2,771.8 சதுர மைல் (7,179கிமீ²)

- நிலம் 2,573 ச. மைல் (6,664 கிமீ²)
- நீர் 198.8 ச. மைல் (515 கிமீ²)
- புறநகர் 13.9 ச. மைல் (36 கிமீ²)
மக்கள் தொகை (2004)
- நகரம் 782
- அடர்த்தி
5,993.2/ச. மைல் (2,314/கிமீ²)
நேர வலயம்
Sri Lanka Standard Time Zone (ஒ.ச.நே.+5:30)

Postal code 50000


• இலங்கையில் அமைவிடம்
Post Reply

Return to “படுகை ஓரம்”