Page 1 of 1

இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Thu Aug 09, 2012 1:41 pm
by vkavi
ஆத்திகரும், நாத்திகரும்

ஒரு ஊருல கடும் வறட்சி வந்தது. ஏரி, கிணறு, குளம், குட்டைகள், அணைகள், ஆறுகள் வறண்டன.
மக்கள் தண்ணீர் இன்றி தவிதனர்.

குடங்களுடன் மைல் கனக்கில் சென்று தண்ணீர் கொண்டு வந்தனர்.

ஒரு நாள் அந்த ஊரில் உள்ள ஆத்திகர்கள் கோவிலில் கூடி மழை வேண்டி பூஜைகள் நடத்தினர்.
மழை கொட்டோ கொட்டென்று கொட்டி ஊரெங்கும் வெள்ளம்.

வெள்ளத்தில் வீடுகள், உடமைகள், கால்நடைகள் என்று எல்லாம் அடித்து செல்லப் பட்டன.

அப்புறம் நாத்திகர்கள் எல்லாம் ஒன்று கூடி, ஆத்திகர்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தனர். அவர்கள் செய்த
பூஜையால் தான் பெரும் வெள்ளமும், அதனால் பெருத்த சேதமும் தங்களுக்கு ஏற்பட்டது என்று.

ஆத்திகர்களின் பிரதி வாதமோ பேய் மழைக்கும், தாங்கள் நடத்திய பூஜைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று.

இது ஒரு வேடிக்கையான வழக்கு.

பூஜையின் சக்தியில் நம்பிக்கை உள்ள ஆத்திகர்கள் ஒரு புறம்,
பூஜையின் சக்தியில் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் ஒரு புறம்.

யாராவது இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

இப்படிக்கு உங்கள்
வேதாளம்

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Thu Aug 09, 2012 7:40 pm
by ஆதித்தன்
பூஜை நடத்தினால் நம் குறைகள் தீர மழை பெய்யும் என்ற நம்பிக்கையோடு, பூஜை செய்தனர் ஆத்திகவாதிகள்.

அவர்கள் நம்பிக்கை மீது எந்த குறையும் சொல்லாத நாத்திகவாதிகள், உங்களது நம்பிக்கையான பூஜையினால் தான் இத்தனை பெரிய பேய் மழை பெய்தது. அது உங்களுக்கு மட்டும் இருந்தால் சரி... ஆனால் எங்களையும் சேர்த்து அல்லவா பேய் மழைக்கு சீரழிய வைத்துவிட்டீர்கள், ஆகையால் தாங்கள் செய்த தவறுக்கு பிராயர்த்தனமாக நஷ்டஈடு கொடுங்கள் எனக் கேட்பது தவறில்லை.

ஆனால் நாங்கள் செய்த பூஜைக்கும் பேய் மழைக்கும் சம்பந்தமே இல்லை என அந்தர் பல்டி அடித்து தப்பிக்க நினைக்கும் ஆத்திகவாதிகள் கொண்டுள்ள இறை நம்பிக்கை என்பதும் வேஷம் தான்,.

ஆகையால் ஆத்திகவாதிகளே குற்றத்தை ஓப்புக் கொள்ள வேண்டும்.

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Sat Nov 03, 2012 7:24 pm
by பழனிச்சாமி
அய்யோ பேய்யா ...!!

நான் இல்ல.......நான் இல்ல.......நான் இல்ல.......நான் இல்ல.......

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Sun Nov 04, 2012 7:10 pm
by சுதா
இது ஒரு வழக்கே இல்லை.

கடவுள் இருக்கு என்று நம்புகிறவன் ஆத்திகன். கடவுள் இல்லை என்பவன் நாத்திகன். அப்படி இருக்க நாத்திகன் எப்படி ஆத்திகன் பூஜை செய்ததால் தான் மழை வந்தது என்று நம்புவான் அவன்தான் நாத்திகனாயிற்றே கடவுள் இல்லை எப்பவனாயிற்றே. அப்படி அவன் நம்புகிறவனாக இருந்தால் அவனும் ஆத்திகனே. என் தீா்ப்பு சரியா?

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Tue Sep 23, 2014 11:54 am
by abul hutha
NAATHIHANUKKU ULLA IRAI NAMPIKKAI AATHIHARHALIKKU ILLAI ENPATHU THAAN ITHAN THELIVU

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Tue Sep 23, 2014 12:33 pm
by மன்சூர்அலி
ஆத்திகரும், நாத்திகரும்..உண்மைக்கு புரமான்வர்கள்..இயற்கை தாய் கொஞ்சம் விளையாடி இருக்கிறாள்...காலத்தின் மீது பழி போட்டு விட்டு அமைதி பெறுவதுதான் நல்லது...இதற்காக மனிதர்களாகிய நாம் ஏன் அடித்து கொள்ள வேண்டும்...அமைதி பெறுவோம்..நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ..

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Tue Sep 23, 2014 3:13 pm
by kselva
அந்தர் பல்டி அடிப்பவர்கள் ஆத்திகரும்,நாத்திகருமாக இருக்க வாய்ப்பே இல்லை. கற்பனை புனைவுக்கு ஓர் தீர்ப்பா . நீரின்றி அமையாது உலகு. தமிழ்ச்சான்றோர் கூற்று. இங்கே வென்றது இயற்க்கை தான்.

Re: இந்த வழக்குக்கு ஒரு நல்ல தீர்ப்பு கூறுங்கள்!

Posted: Mon Mar 28, 2016 12:33 pm
by வெங்கட்
ஒன்று செய்யலாம்.

இவ்வளவுநாள் மழை பெய்யாமல் இருந்ததற்கு நாத்திகா்களே காரணம் என்று எதிா்வாதம் செய்து, "முதலில் வறட்சியால் ஏற்பட்ட நஷ்டத்தை நீங்கள் ஈடு செய்யுங்கள்; பிறகு வெள்ளத்திற்கு நாங்கள் நஷ்டஈடு செய்கிறோம்"என்று ஆத்திகா்கள் கேட்கலாம்.

நாத்திகம் பேசுவோரே கடைசியில் பூஜாபலன்களை நம்புவது கதையில் ஒரு நல்ல ட்விஸ்ட். எனவே அவா்களும் ஆத்திகா்களே . அவா்களும் சோ்ந்துதான் நஷ்டஈட்டில் பங்குபெற வேண்டும்.