புதிர் கேள்வி -மூளைக்கு கொஞ்சும் வேலை கொடுங்க...

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

புதிர் கேள்வி -மூளைக்கு கொஞ்சும் வேலை கொடுங்க...

Post by cm nair » Thu Sep 19, 2013 10:30 pm

ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க 'அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா' அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்... நான் எங்கே விட்டேன், ஆஆ... அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், 'அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே' அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, "இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா" அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.


சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.
jothimuthu
Posts: 1
Joined: Sun Oct 04, 2015 9:50 am
Cash on hand: Locked

Re: புதிர் கேள்வி -மூளைக்கு கொஞ்சும் வேலை கொடுங்க...

Post by jothimuthu » Sun Oct 04, 2015 10:01 am

Sollunka bass
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: புதிர் கேள்வி -மூளைக்கு கொஞ்சும் வேலை கொடுங்க...

Post by தயாளன் » Sun Oct 04, 2015 11:03 am

இருவரும் ஆட்டுக்குட்டி வாங்க செலவழித்தது = 50 ரூபாய்
-------------------------------------------------------------
அவர்களுக்கு முதலாளி 5 ரூபாய் திரும்ப
கொடுக்க சொன்னதால் உண்மையில்
ஆட்டுக்குட்டிகளின் விலை--ரூபாய் 50-5 = 45 ரூபாய்
கந்தன் கொடுத்த தொகை ---ரூபாய் 5-2 = 3 ரூபாய்
கந்தன் எடுத்து கொண்ட தொகை--ரூபாய் 5-3 = 2 ரூபாய்
------------------
45+3+2=50 ரூபாய்
கணக்கு சரியாபோச்சு..............

Image
Post Reply

Return to “படுகை ஓரம்”