எளிய யோகா

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

எளிய யோகா

Post by muthulakshmi123 » Sat Apr 07, 2012 10:44 pm

எளிய யோகாக்கள்:

முதலில் வலது காலை நீட்டி இடது காலை அதன் மீது வைத்து மடக்கி உட்காரவும்.

பின், இரு கைகளையும் மடக்கிய இட்து கால் முட்டியின் மீது வைத்து மேலும்,கீழும்(தரையைத் தொட்டு

திரும்பும் படி) அசைக்கவும்.

வலது கால் நீட்டி இடது கால் வலது காலின் மீது முட்டி மடக்கி அமர்ந்த நிலையில் ,இட்து கையால் வலது

கால் பாத்த்தை பற்றவும். வலது கையால் இட்து கால் முட்டியை வட்டமாக சுற்றவும். மூன்று முறை

சுற்றியபின் எதிர்பக்கமாக சுற்றவும்.

பின் இட்து காலை நீட்டி வலது காலை அதன் மீது வைத்து மடக்கி உட்காரவும். இரு கைகளையும் வலது

கால் முட்டியின் மீது வைத்து மேலும் கீழும் அசைக்கவும்.

இட்து கால் நீட்டி வலது கால் இடது காலின் மீது முட்டி மடக்கி அமர்ந்த நிலையில் ,வலது கையால்

இடது கால் பாத்த்தை பற்றவும். இடது கையால் வலது கால் முட்டியை வட்டமாக சுற்றவும். மூன்று

முறை சுற்றியபின் எதிர்பக்கமாக சுற்றவும்.

அமர்ந்த நிலையில் இரு கால்களையும் ஆங்கில வி வடிவில் வைக்கவும்.அதாவது பாதங்கள் இரண்டும்

சேர்ந்து வைக்கவும்..இருகைகளையும் பாத விரல்களை பற்றி பிடித்த நிலையில் மூச்சை இழுத்து

தலையை பூமியை நோக்கி பாதங்களின் மீது கவிழ்த்து மூச்சை விடவும்.


வலது கையால் இடது கால் பெருவிரலை பற்றவும். இட்து கையை பின்னால் மடித்து வைக்கவும் மூச்சை

இழுக்கவும் ,மூச்சை விட்டபடி தலையை இடது கால் முட்டியை நோக்கி கவிக்கவும்.

பின் இடது கையால் வலது கால் பெருவிரலை பற்றவும். வலது கையை முதுகின் பின் வைத்து மூச்சை

இழுக்கவும். பின் மூச்சை விட்டபடி தலையை வலது கால் முட்டியை நோக்கி கவிக்கவும்.

கைபயிற்சி : நிற்று கொண்டும் செய்யலாம். சம்மணம் போட்டு அமர்ந்த நிலையிலும் செய்யலாம்..

1)இரு கைகளையும் முன்னால் நீட்டி விரல்களை நீட்டி மடக்கி விடவும்.

இதுபோல் மேல் புறம்,பக்கவாட்டில் ,மற்றும் கீழே தொங்க விட்டு உடம்போடு ஒட்டி வைத்து , என இரு

கைகளையும் வைத்து விரல்களை நீட்டி விரிக்கவும்...

2)இரு கைகளையும் முன்னால் நீட்டவும்.பெரு விரலை உட் பக்கமாக வைத்து குத்துவது போல்

விரல்களை மடக்கவும்.பின் மணிக்கட்டை உட்புறமிருந்து வெளிபுறமாக வட்டமாக சுற்றவும்.பின்

வெளிபுறமிருந்து உட்புறமாகச் சுற்றவும் .

இது போல் மேலே சொன்ன மாதிரி கைகளை மேலே தூக்கி,பக்க வாட்டில் விரித்து ,உடம்போடு சேர்த்து

தொங்கவிட்ட நிலையில் என கைகளை வைத்து ,விரல்களை மடக்கி செய்யவும்.


3)கைகளை மேல் நோக்கி தூக்கி வட்டமாக சுற்றவும்.அதாவது கைகளை முன் பக்கம்,மேலே, பின்னால்

என சுற்றவும்.

பின் எதிர் பக்கமாக அதாவது பின்னால், மேலே, முன்னால் என வட்டமாக சுற்றவும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: எளிய யோகா

Post by muthulakshmi123 » Mon Apr 09, 2012 4:07 pm

தோள் பயிற்சி:

1)வலது தோள் பட்டையை மேல்புறம் கீழ்புறம் என லேசாக அசைக்கவும்.

அது போல இட்து தோள் பட்டையையும் மேல்புறம், கீழ்புறம் என அசைக்கவும்.

2)வலது தோள் பட்டையை வட்டமாக அசைக்கவும்.அதாவது முன்புறம்.மேலே, பின் புறம் என வட்டமாக

அசைக்கவும்.

இது போல் இட்து தோள் பட்டையையும் வ்ட்டமாக அசைக்கவும்.

கழுத்துப் பயிற்சி:

1)கழுத்தை வலது புறமாக பக்கவாட்டில் திருப்பவும்,பின் இட்து புறமாக பக்கவாட்டில் திருப்பவும்.

2)பின் கழுத்தை மேலும் கீழும் அசைக்கவும்

3)கழுத்தை லேசாக வலது புறமாக வலது தோள் பட்டையில் சாய்க்கவும்.பின் இட்து புறமாக இட்து தோள்

பட்டையில் சாய்க்கவும்.

4)கழுத்தை முன்புறம்,வலது புறம்,பின் புறம்,இடது புறம் என வட்டமாக சுற்றவும்.

பின் கழுத்தை முன்புறம்,இட்து புறம், பின்னால் ,வலது புறம் என வட்டமாக சுற்றவும்.

கண்பயிற்சி:

1)மேலும் கீழும் பார்க்கவும்

2) வலது புறம் ஒரமாக பார்க்கவும்.பின் இட்து புறம் ஒரமாக பார்க்கவும்

3)கீழே, இட்து புறம் மேலே, வலது புறம் என வட்டமாக பார்க்கவும்.

இது போல் கீழே வலது புறம் மேலே, இட்து புறம் என வட்டமாக பார்க்கவும்.

கை விரல்களை சேர்த்து மேல்புறமாக கைகளை தூக்கவும்.தூக்கியநிலையில் வலது புறமாக சாயவும். பின்

இடது புறமாக சாயவும்

கைகளை முன்புறம் நீட்டவும் பின் வலது புறமாக உடம்பை திருப்பி இட்து கையை மார்பின் பக்கத்திலும்

வலது கையை நேராகவும் நீட்டவும்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: எளிய யோகா

Post by muthulakshmi123 » Wed Apr 11, 2012 3:33 pm

குத்த வைத்து உட்காரவும்.இட்து கால் முட்டியை தரையில் போட்டு வலது புறமாக உடம்பை திருப்பவும்.

பின் வலது கால் முட்டியை தரையில் போட்டு உடம்பை இட்து புறமாக திருப்பவும்.

சூரிய நமஸ்காரம்....

நின்றவாறு, கைகளை பின்புறம் குவித்து கும்பிடவும்.

2.கைகளை கால்களின் அருகில் குனிந்தவாறு வைக்கவும்.

3.வலது காலை முன்புறம் மடித்து வைத்து இட்து காலை நீட்டி கைகளால் கும்பிட்டவாறு பின்புறமாக

நிமிரவும்.

4.கைகளை முன்புறம் கால்களிலிருந்து சற்று தள்ளி குனிந்தவாறு தரையில் வைக்கவும்

5.முட்டியை தரையில் வைத்து கைகளை நீட்டி நன்றாக குனிந்து தலையை தரையில் வைத்து

கும்பிடவும்.

6.நன்றாக உடம்பு அத்தனையும் தரையில் படுமாறு(சாஷ்டாங்கமாக) நமஸ்காரம் பண்ணவும்.

7.கைகளை மட்டும் ஊன்றி உடம்பை நிமிர்த்தவும்

8. கைகளை தரையில் பதிய வைத்து ஊன்றி உடம்பை தூக்கவும்

9.இட்து காலை மடித்து வலது காலை கைகளை கும்பிட்டவாறு உயர்த்தி பின்புறமாக வளையவும்

10.கைகளை முன்புறமாக வளைத்து தரையி ஊன்றவும்.

11.கைகளை கும்பிட்ட வாறு நிமிர்ந்து பின்புறமாக வளையவும்.

12. கைகள மார்பருகில் வைத்தவாறு கும்பிடவும்.


Post Reply

Return to “படுகை ஓரம்”