Page 1 of 1

காமமும் வல்லமையும்

Posted: Fri Mar 15, 2019 9:37 pm
by ஆதித்தன்
இன்னும் கூடுதல் சிந்தனை தேவைப்படுகிறது.

கடவுள் இல்லை என்பது உண்மை. இல்லை, செயல்பட இருப்பு வேண்டும்... இருப்பாய் உயிரினம், இறைவனாய் உயிர், ஆனால் படைத்த வல்லானாகிய இறைவன், எப்போதும் வல்லமையாகவே இருக்கிறது இருக்கும். வல்லானையே குறளும் சொல்கிறது.... அந்த வல்லமை படைத்தமையாகவே விலங்குகளும் செயல்படுகின்றன. ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் ஒவ்வொரு தன்மை கொண்டவை... அவ்வாறு மனிதனுக்கு என்று இருந்த இயல்புத் தன்மை சட்டங்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு எப்பொழுது வந்தது ஏன் வந்தது? தனக்கான ஆணை பெண் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள்?

வல்லவனிடமிருந்தே நல்ல வித்து கிடைக்கும். வல்ல வித்தே சிறந்த விளைச்சலை கொடுக்கும்.

மிருகங்களை பார்க்கும் பொழுது, பரிணாம வளர்ச்சியின் உண்மை, ஒன்றிற்கு ஒன்று அன்னமாகிறது என்பது புரியவில்லையா.

புல் மிகை ஆனப்பின்னரே அதனை உண்டு அழிக்கும் அடுத்த பரிணாம உயிரினம் தோன்றியது.

இப்படி, ஆக்கமும் கட்டுப்பாடும் இணைந்தது தான் பிரபஞ்ச நீதி.

இப்பூமியில் வல்ல பெரிய மிருகங்கள் தோன்றிய பின்னரே மனிதன் தோன்றினான்..

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு"

அந்த வல்ல மிருகங்களுக்கு வல்லவனாய் அசுர சக்தி படைத்தவனாய் விசுவரூபம் கொண்டவன் தான் மனிதன்.

அந்த மிருகங்களை கட்டுக்குள் வைத்திருந்தால் மனிதன் இன்றும் அசுர விசுவரூபத்தினை தக்க வைத்திருப்பான்.

ஆனால், அழித்தேவிட்டான்.

சிங்கம் மானை வேட்டையாடி திண்று கட்டுக்குள் தான் வைக்க வேண்டும்.,.,.. திண்று அழித்துவிட்டால்??? அப்புறம் மான் திண்ணும் புல்லைத்தான் திண்ண வேண்டும்.

மனிதனும் தான் வந்த காரணம் தெரியாமல்... அழித்தான்... அழித்து... தன் ரூபத்தின் தேவையில்லாமல்.... பரிணாமத்தால் விசுபரூபம் சுருங்கியது. பயிரிட்டு வாழும் சூழல் வகுத்தான்...

அன்று முதல் இன்று வரை கடவுளாக வணங்கப்படுவர்கள் தன் இனத்தின் நலனைப் பார்த்தார்கள்... பிற சக இனத்தினை அழித்தார்கள். தன் இனத்தினை இயற்கை விதிக்கு உட்பட்டு மதியால் விதிகள் வகுத்து வளர்த்தனர்.

ஆனால் இடைப்பட்ட காலம் தான் சக மனித அழிப்பு என்பது இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டாலும் தடுக்கப்பட்டது. இயற்கை விதிகள் தகர்க்கப்பட்டது... அதன் விளைவுதான் இன்று மக்கள் மிகை மிஞ்சியது மட்டுமில்லாமல், கெட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இயற்கை சமநிலையும் சீர்கெட்டு கிடக்கிறது.

இந்த பூமி, மனிதனுக்கானது மட்டுமல்ல... மனிதன் பிற உயிரினங்கள்(மிருகம் மட்டுமல்ல, மரமும் உயிர்தான்) இல்லாமல் மகிழ்வாகவும் வாழ்ந்துவிடவும் முடியாது.

ஆனாலும் , அழித்துக் கொண்டுதானே இருக்கிறான்.

எத்தனை வளர்ச்சி அடைந்தாலும்..அவ்வளவுக்கு அவ்வளவு பிற உயிரினங்களுக்கு பாதகம்செய்து கொண்டுதானே இருக்கிறான்.

அத்தனை பாதகங்களுக்கும் பலனாய், நவீன போரான கிருமிப்போர் எனும் நோய்க்கு அல்லல்பட்டு வருந்திக் கொண்டிருக்கிறான். மனித அழிவுகள் ஏதேனும் ஒர் வகையில் நடந்து கொண்டே இருக்கும் அதுவே பிரபஞ்ச உண்மை. அதில் நல்லவர்கள் தான் வாழ வேண்டும் என்றால் வல்லமை கொள்ள வேண்டும். இந்த உண்மை கெட்டவர் அறிந்து அவன் மனித அழிவுக்கு உதவினால்...பிரபஞ்சம் அவனுக்கும் உதவும்...அது உண்மை. அவன் நமக்கு கெட்டது செய்யலாம்... ஆனால் அவன் பிள்ளைக்கு கெட்டது செய்கிறானா? நம் மண்ணுக்கு கெட்டது செய்யலாம்.நம் அழிவுக்காக..ஆனால் அவனுக்கு என இயற்கை கொஞ்சும் தீவு வைத்திருக்கிறான்...

வல்லவனாக மாற வேண்டும்...ஓட்டப்போட்டி முதல் முதல்வர் பதவி வரை இடம் பெறுபவர் வல்லவர்...

சிந்தியுங்கள்.... புல்லுக்கும் வாழ உரிமையுண்டு, அதைக்கட்டுப்படுத்தும் வல்லமையும் பிற உயிர்க்கு உரிமையுண்டு.

கெட்டவர்களை தண்டிக்கும் வல்லமையை நல்லவர்கள் கையில் எடுக்க வேண்டும். நல்ல வல்லமையான சமூகத்தினை படைப்பது பெண்கள் கையில்தான் உள்ளது.

இறைவன் இல்லாதவன்... அவன் இருப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாது.

அவன் இயங்க இருப்பு வேண்டும்.

உயிரும் உடலும் கலந்திருக்கிறது. இதில் உயிரே அந்த வல்லவன்.

வல்லான் இல்லாமை ஆக்கப்படும் பொழுது, சுள்ளானும் ஆட்டிவிட்டுத்தான் போவான்.

காமமும் வல்லமையும் படைப்பின் இருகண்கள்.. காமம் இல்லாமல் சுழற்சி இல்லை,வல்லமை இல்லாமல் கட்டுப்பாடில்லை.

காமத்திற்கு கட்டுப்பாடு வைத்து வல்லமையை தளர்த்தினர்... வல்லமையில்லாமல் காமம் தலைவிரித்தாடுகிறது...

இதனை சூட்சமாக சிந்திதால் தான் புரியும்... ஒவ்வொரு உயிரின் காமத்தின் இயல்பினை பாருங்கள்... அவைகளுக்கான உணவு இயற்கையாய் கிடைப்பதனை பாருங்கள்...அவைகள் இயல்பாய் வல்லமையால் அழிக்கப்படுவதனைப் பாருங்கள்..

மனித இனத்திற்கு மட்டும் எப்படி இது பொருந்தாமல் போகும்? அதற்கு தனக்குத் தானே பிறப்பு கட்டுப்பாடு புரிந்து வாழ்தல்..மிகையை பலிகொடுத்தல்..

இம்மண்ணில் வல்லவர் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டது..... மிஞ்சியது வல்லவர்க்கு கீழ் வாழ்ந்தவர்களே...
வாழ்ந்தவர்களுக்கு, இராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன, எவன் எனக்கு அதிக ஒத்தாசை கொடுக்கிறான் என்பதுதான்?

இராவணனை விட, இராமன் நல்ல ஒத்தாசை கொடுத்துவிட்டான்..
..

இன்றும்... அவன் கோடி சாப்பிட்டான்...அவனுக்கு கீழ் இலட்சம் சாப்பிட்டான்...அவனுக்கு கீழ் ஆயிரம் சாப்பிட்டான் என்று எவரும் வல்லமை கொண்டவர் அல்ல... ஒவ்வொன்றும் சீர்கெட்டதே..
வல்லமை கொண்டவன் என்றால் கோடியையும் அவன் ஒருவனே அடித்துவிட்டு... மற்றவர்களை கட்டுக்குள் வைத்திருப்பான்... முடியவில்லை... அடுத்தும் வந்துவிட்டது, வல்லமையற்ற சீர்கெட்ட கூட்டத்தினர் பங்கு திருவிழா.. --தல்

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.

உலகம் கெட்டவர்களின் கையில் சிக்கி அழுது கொண்டிருக்கிறது.