Page 1 of 1

பெங்களூர் நகர்க்கு ஆபத்து

Posted: Wed Mar 08, 2017 2:09 pm
by ஆதித்தன்
இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை இந்தியா அரசுக்கு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது என்பதனை இன்றைய நாளிதழ் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் எந்த நகரத்தின் மீது தாக்குதல் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றத் தகவல் எதுவும் செய்தியில் வெளியிடப்படவில்லை. ஆனால், அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பினை வலுப்படுத்த உள்துறைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இலக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமும், ஹை டெக் சிட்டி என்றும் வர்ணிக்கப்படும் தென் இந்தியாவின் நகரமான பெங்களூர் மீது இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

நெருக்கடி நகரமாக சுட்டப்படும், பெங்களூர் நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை 8.4 மில்லியன்.

கர்நாடக அரசு, பெங்களூர் நகர் நெருக்கடியினை சமாளிக்க புதிய நகரம் வடிவமைக்கும் திட்டத்தினை வகுத்துள்ளது. பெங்களூர் நகர்க்கு இணையாக உருவாக இருக்கும், இந்த புதிய நகர்க்கு கோலார் கோல்டு என்று பெயரிட்டிருப்பதோடு, பெங்களூர் மக்களில் 20 இலட்சம் பேரை இடம் மாற்றவும் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதே என்பதே அச்சம், மேலும் சமீபத்தில் நடு இரவில் தனிமையாக சென்ற பெண்களை தாக்கிய சம்பவங்களின் மூலம் பாதுகாப்பு குறை உள்ளது என்பதும் ஒர் காரணமாக இருக்கலாம்.