Page 1 of 1

அதிர்ச்சி - குழந்தைகள் கர்ப்பிணிகள் பாதிப்பு

Posted: Mon Mar 06, 2017 2:04 pm
by ஆதித்தன்
2015 - 16 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆறு இலட்சம் வீடுகளில் தேசிய குடும்ப நலன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், நோய் தொற்றுக்கு காரணமான இரத்தச்சோகை 58 சதவீத ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழைந்தைகளிடம் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை தகவலை மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மக்கள் தொகை கணக்குப்படி, இந்தியாவில் 2015-இல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 12 கோடியே 40 இலட்சம். இதில்,

7 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 கோடி குழந்தைகள் வளர்ச்சி குன்றி காணப்படுகின்றனர்.

4 கோடியே 40 இலட்சம் குழந்தைகள் எடை குறைவாக உள்ளனர்.

2 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் மந்தத்தன்மையுடன் உள்ளனர்.


கர்ப்பிணி பெண்களில் பாதி நபர்க்கும் மேல் இரத்தசோகை உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரத்தசோகை நோய் இரும்புச்சத்து குறைபாட்டால்தான் வரக்கூடியது.


போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மிக முக்கிய வேலையாக குழந்தை இறப்பை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடும்பக்கட்டுப்பாட்டு முறையையும் கொடுத்துள்ளனர். அதற்காக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளையும், பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு முறையினையும் செயல்படுத்தி வருகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கான & குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுமுறை திட்டங்களும் நிகழ்வில் உள்ளன.

ஆனாலும் நோய் தொடர்கிறது என்றால்???

அடுத்தக்கட்ட அதிர்ச்சியாக மொபைல் போனில் நூற்றுக்கும் மேற்பட்ட நுண்கிருமிகள் உருவாகுவதாக ஆய்வுத் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் மூன்று நுண்கிருமிகள் புதிய வகையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நுண்கிரிமியால், மொபைல் பயன்படுத்துவோர்க்கு அடுத்து என்ன நோய் வரப்போகிறதோ?