Page 1 of 1

ஆட்சியை கவிழ்க்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு

Posted: Mon Mar 06, 2017 6:33 am
by ஆதித்தன்
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் பதவியிலிருந்து விலக நிர்பந்திக்க வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நிதிபதி மார்க்கண்டேயே கட்ஜீ அழைப்பு விடுத்துள்ளது, அதிமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தியினை உருவாக்கியுள்ளது.

மார்க்கண்டேயே கட்ஜீ தனது அறிக்கையில், அதிமுக கட்சியின் ஏகோபித்தத் தேர்வான எடப்பாடி எஸ் பழனிச்சாமியை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியிருப்பதும், அதற்கு காரணமாக அதிமுக கட்சியினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவின் கைப்பாவை எஸ்.பழனிச்சாமி என்று குற்றம் சாட்டியிருப்பதும், அதிமுக தனது ஆட்சியை கழைக்க வேண்டும் என்பதனைப்போல் உள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்வாதரப்பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருப்பதனை சசிகலா பினாமி அரசுக்கு எதிரான போராட்டமாக சித்தரித்து, பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சசிகலா கட்சி மூலம் ஓட்டு கேட்கப்போனால், விரட்டி அடிக்கப்படுவீர்கள் என்றுக் கூறி பிரிப்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் போராட்டங்களையும் ஜெயலலிதா மர்மச்சாவை மையப்படுத்தி பேசி வருகிறார்.

ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ-க்களை அதிமுக கட்சி கொண்டிருந்தாலும், சசிகலா எதிர்ப்பு என்றப் போர்வையில் ஆட்சிக்கவிழ்ப்பினை ஏற்படுத்த அரசியல் சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இதில் எதிர்கட்சிகள் ஏதேனும் சூழ்ச்சி செய்கிறதா அல்லது எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பின்னர் ஜெயலலிதா அதிமுக கட்சியினை போராடி கைப்பற்றியதுபோல, இன்றும் கட்சியினைக் கைப்பற்ற இருதரப்பினர்க்குமான வஞ்சகப் போராட்டாமா? என எதுவும் புரியுமால் தவிப்பது பொதுமக்கள்தான்.

உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிப்பதற்கு முன்னரே சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிடும் என்று நாஸ்ராடமஸ் தீர்க்கதரசி அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பின்னர் மூன்றாம் உலகப்போர்க்கு காரணமாகவும் அவர் இருப்பார், அமெரிக்க பொருளாதாரத்தின் பெரிய வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பார் என குறிப்பு கொடுத்திருப்பது போல, நம்ம தமிழ்நாட்டுல இப்படித்தான் நடக்கணும் என்று யாரேனும் எழுதிட்டார்களோ என்னவோ, ஆகஸ்ட் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி பல அணியினர் ஆட்பிடிக்கும் வேளையில் இறங்கிவிட்டனர்.