புதிய கல்வி கொள்கை - நிறைந்த வேலை வாய்ப்பு

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புதிய கல்வி கொள்கை - நிறைந்த வேலை வாய்ப்பு

Post by ஆதித்தன் » Thu Mar 02, 2017 9:08 am

ஊருக்குள் நடக்கும் வேடிக்கையை நினைக்கும் பொழுது செயலற்ற மவுனமே சிறந்தது என்று உணர்த்துகிறது மனம். ஆனாலும் அதே தவறினை நானும் செய்பவனாக இருந்தாலும், அதனை வெளிப்படுத்தி நாளை நடவாமல் இருக்கவே இப்பதிவு.

இந்த வருடம் தமிழகத்தில் +2 எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை தோராயமாக ஒன்பது இலட்சம்.

ஒர் வருடத்தில் 9 இலட்சம் புதிய மாணவர்கள் வரும் பொழுது, குறைந்தது 7 இலட்சம் வேலை வாய்ப்பினையாவது உருவாக்கினால் தான் இன்றைய சூழலில் வேலையில்லா பிரச்சனையை தீர்க்க முடியும்.

வேலையில்லா திண்டாட்டத்திற்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சரியான கோணத்தில் யோசிக்காமல், தனக்கு கையில் மைக் கொடுத்திருக்காங்க, நான் என்ன சொல்றேனோ அதைத்தான் நீங்க கேட்கணும் என்கிற மாதிரி, ஒருவர் சொல்றார்... அதுதான் சரி என்றாலும் சரி, தவறானாலும் சரி, அதனைக் கேட்க யாரும் இல்லா நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.

இன்றைய கல்வியகம் என்பது முற்றிலுமான ஒர் ஏமாற்று என்பது தெரியாமல், மீண்டும் மீண்டும் பாடத் திட்டத்தினை மாற்றுகிறேன், பெயரை மாற்றுகிறேன் என்று ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒர்முறை மாற்றி மாற்றி நம்மை முட்டாள் என்பதனை மேலும் மேலும் மகா முட்டாள் மக்கள் இவர்கள்.. எதையாவது சொல்லி செய்து ஏமாற்றலாம் என்று ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள், இந்த அதிகார வர்க்கங்கள்.

ஆங்கிலத்தினை படித்தாலும் சரி, சமஸ்கிருதம் படிச்சாலும் சரி, ஹிந்தி படிச்சாலும் சரி வேலை வாய்ப்பு என்பது இன்றைய கொள்கைப்படி பற்றாக்குறை பற்றாக்குறை தான்.

அதாவது, இட்லி அவிக்க ஒர் மாஸ்டர் வேண்டும் என்றாலும் கேட்டரிங்க் படிச்சா வேலை கிடைக்குது என்றுச் சொல்லி ஆயிரம் பேர்க்கு இட்லி அவிக்க சொல்லிக் கொடுக்க நவீன வேலைவாய்ப்பு பயிற்சி என்றுச் சொல்லி பணம் வாங்குகிற கல்வி கொள்கை தான் இன்றைய மேல்படிப்பு.

IIT படிப்பு, டாக்டர் படிப்பு , வங்கித் தேர்வு, மத்திய அரசு வேலைக்கான தேர்வுக்கான படிப்பு என்பது எல்லாம் மிகப் பெரிய ஏமாற்று படிப்பு. இதுல சீட் பிடிக்கணும் என்று கல்விக் கொள்கை மாற்றணும் என்பது அதைவிட பெரிய ஏமாற்று.

ஒர் பேங்க் இருக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 10 பேர் வேலை செய்கிறார்கள். அந்த பத்து பேர் 40 வருடம் வேலை செய்வார்கள். இதுல ஒர் நபர் விலகிறார் என்றாலோ, அல்லது கூடுதலாக ஒர் ஆள் வேலை என்றாலோ, இவங்களே ஒர் ஆளை எடுத்து பயிற்சிக் கொடுத்துக் கொள்வார்கள். இதற்கு எதற்கு 10000 நபர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று 3 மாதம் வர வைத்து, அவசியம் இல்லாமல் 9999 நபர்களின் மூன்று மாதத்தினை வீணடிக்கிறார்கள்?

உங்களால் பணிக்கு சரியாக பயிற்சி கொடுக்க முடியும் என்றால், ஒர் வேலைக்கு ஒரே ஒர் ஆளை எடுத்து சிறப்பாக பயிற்சி கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? இதைத்தானே அக்காலத்திலிருந்து செய்து கொண்டிருந்தார்கள். அவசியம் இல்லாமல், பணிக்கு அப்பாற்பட்ட தகவல்களை பெரிய புத்தகமாகக் கொடுத்து படிக்க வைப்பதற்கு பெயர் பணி பயிற்சியா?

புதிய பாடத்திட்டக் கொள்கை என்பது தமிழ் மொழியினை அடுத்தக்கட்டமாக சீரழிவுக்கு இடுபடுத்தும் ஒர் முயற்சி.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தரமான பாடத்திட்டம் உள்ளது என்பது மிகப் பெரிய ஏமாற்று. இது மிகப்பெரிய திட்டமிட்ட சதி.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் படிக்கிற மாணவர்கள் 5000 பேர் என்று வைத்துக் கொள்ளுங்கள், தமிழ் பாடத்திட்டம் படிக்கிற மாணவர்கள் 1 இலட்சம் பேர்.

இருக்கிற வேலை வாய்ப்பு 10000.

வேலை கொடுக்கிறவன், சி.பி.எஸ்.இ படித்தவர்களுக்கு வேலை என்றுச் சொன்னால், 5000 நபர்களுக்கும் வேலை கிடைக்கும்.

அடுத்த ஆண்டும், மீத காலியிடத்தினை 5000 மாணவர்களைக் கொண்டு நிரப்பி விடுவார்கள்.

அதற்கு அடுத்த ஆண்டு, வேலைக்கு சேர்த்த நபர்களில் 4000 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அந்த வேலை பிடித்திருக்காது, அல்லது செய்யும் தகுதியான மனம் இருக்காது.

ஆகையால் மூன்றாவது வருடமும் ஆள் எடுப்பார்கள். 5000 பேரில் 4000 பேரை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

ஒருவர் வேலைக்கு சேர்ந்தால் 40 வருடம் வேலை செய்வார். இங்கே தேவையான நபர்கள் எடுத்தாகிவிட்டது. ஆகையால் மூன்றாவது வருடமே படித்த ஆயிரம் நபர்க்கு வேலை கிடைக்கவில்லை. ஏற்கனவே வேலை கிடைத்தவர்களில் 4000 நபர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

அடுத்த வருடமும் கொஞ்ச பேரை தூக்கிட்டு, புதியவர்களில் சிறப்பான நபர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் புத்திசாலித்தனமான பணிக்கு உகந்த நபர்களை எடுத்துக் கொள்கிறார்களே தவிர படித்த எல்லா நபர்களையும் அல்ல.

சி பி எஸ் சி படித்த மாணவர்கள் குறைவு என்பதால் வேலை கிடைத்தது. எல்லோரும் அதனைப் படித்தால் வேலை எப்படி கொடுக்க முடியும்? அடுத்த 3 ஆண்டுக்குப் பின் எப்படி புதிய வேலைவாய்ப்பினை உருவாக்காமல் வேலை கொடுக்க முடியமா?

அதனைக் காட்டிலும் மிகப் பெரிய முட்டாள் தனமான நம்பிக்கை, பணிக்குத் தகுதியில்லா ஒருவனை சி.பி.எஸ்.சி படித்த மாணவன் என்பதற்காக தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா? அல்லது வேலை காலி இடமே இல்லாத பொழுது சிபிஎஸ்சி பாடத்திட்டம் படித்த மாணவன் என்பதற்காக எடுத்துக் கொள்வார்களா?

இதுவரையிலும் படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பினை அரசு உருவாக்கிக் கொடுக்கவில்லை. இன்றைய வேலைக் கொள்கையில் அது முடியவும் முடியாது. எல்லாம் ரோபட், கணிணியமாக மாறிவிட்ட நிலையில், 1000 பேர் செய்யக்கூடிய வேலையை ஒர் கம்ப்யூட்டர் செய்துவிடுகிறது. ஆகையால், மீதமான நபர்கள் கொடுக்கிற இலவச அரிசியின் மூலம் சாப்பிட்டுட்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் முடியும்.

சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திற்கு மாறினால் உயர் படிப்பும், வேலை வாய்ப்பும் கிட்டும் என்றுச் சொல்பவர்கள், IIT போன்ற உயர்தர கல்வி நிலையங்களில் இதுவரை படித்த நபர்கள் எத்தனைபேர், அவர்களில் அரசு வேலை செய்வோர் எத்தனை பேர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்வோர் என்ற புள்ளி விவரத்தினை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அதைவிட மிக முக்கியமாக, நாளை அனைவருக்கும் IIT நிறுவனத்தின் படிப்பினை வழங்கினால் என்ன நடக்கும் என்று சிந்திக்கத் தெரியாதவர்களா அந்த அறிவாளிகள், கொஞ்சம் யோசியுங்கள்.

இதே வேலை கொடுக்கிறவன், சி.பி.எஸ்.இ படித்தவர்களுக்கு வேலை கிடையாது, தமிழ் வழியில் படித்தவர்களுக்குத்தான் வேலை என்றுச் சொன்னால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த 5000 மாணவர்களுக்கு வேலை கிடைக்காது. அப்போ என்ன சொல்வீங்க? ஆனால் அப்படி சொல்லமாட்டார்கள், இலட்சம் பேர் படிக்கிற தமிழ் வழிப்பாடத்திட்ட மாணவர்களுக்குத்தான் வேலை இல்லை என்றுச் சொல்வார்கள்.

காரணம், அவர்கள் அறிவாளி. சிபிஎஸ்சி படிச்சால்தான் வேலை என்று சொல்லிவிட்டால், எல்லோரும் சிபிஎஸ்சி படிப்புக்கு மாறி படிச்சி வெளிவர 12 ஆண்டுகள் ஆகும்... அதுவரை இப்படி சிஎபி எஸ்சி படிச்சாச்சால்தான் வேலை என்று எவருமே படிக்காத ஒர் படிப்புக்கு வேலை இருக்குன்னு இல்லாத வேலையை இருப்பதாகவும், ஆனால் யாரும் படிக்காத மாதிரியும் ஏமாற்றுவதும், இதனை நம்பி எல்லோரும் குழந்தைகளை புதிய பாடத்திட்டத்துக்கு அதிக செலவு செய்து படிக்க வைச்சி 12 வருடம் கழித்து வெளியில் வருவதற்குள் அடுத்த பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி, இதனை படித்தால்தான் வேலை என்று சொல்லிவிடுகிறார்கள்.

இந்த அறிவாளிகளின் எண்ணமே, தமிழ் மொழியினை மட்டம் தட்டி, ஆங்கிலத்தினையும் ஹிந்தியையும் முதன்மைப்படுத்த வேண்டும் என்பதுதான். அதனைக் காட்டிலும் மிக முக்கியம் சமஸ்கிருத மொழியாக தமிழ் மொழியினை மாற்றும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

சிவனை சிவா என்று அழைப்போம். ஆனால் அவர்கள் ஷிவா என்றுதான் எழுதுவார்கள். சக்தி என்பதனை - ஷக்தி/ஸக்தி என்றுதான் ஆன்மீக நாளிதழ்களில் எழுதும் கலாச்சாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சக்தி = ஸக்தி என்பது ஒர் சிறிய விடயமாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால், 100 வருடம் கழித்து, தமிழ் என்ற மொழி இல்லாத நிலையினை உருவாக்கும் நிலைக்கான ஒர் அடிப்படைதான் ஒவ்வொரு எழுத்தாக பிறமொழி எழுத்திலிருந்து எடுத்தெழுதி மாற்றுவது.

வேலைக்கான பயிற்சி என்பது எம்மொழியில் இருக்கிறது என்பது ஒர் பிரச்சனையே இல்லை. ஏனெனில் எம்மொழியில் சொன்னாலும் செயல் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் தாய் மொழியில் பயிற்றுவித்தால் மட்டுமே பயிற்சியின் பலனாக செயல் என்ன என்பதனை மாணவர்கள் புரிந்து, செயலை செம்மையாகச் செய்தல் முடியும்.

அதனைக்காட்டிலும் மிக முக்கியம், பணிக்கு படிப்பு தேவையில்லை. பணியில் உட்கார வைத்து பயிற்சி கொடுத்தாலே போதும். அவர் அந்த பணியினை செய்ய ஆரம்பித்துவிடுவார்.

எல்லோருக்கும் வேலை கொடுக்கும் வகையில், பணி இடத்தினை உருவாக்கி, பணியில் உட்கார வைத்து பயிற்சி கொடுங்கள். இராணுவத்திற்கு எல்லாம் பயிற்சி கொடுக்கிறீர்கள். வங்கிப் பணிக்கும் வேலைக்கு சேர்த்துக் கொண்டு சிறப்பாக பயிற்சி கொடுத்து செய்ய வையுங்கள்.

போட்டித் தேர்வுகள் என்றுச் சொல்லி அனைவரையும் அழைத்து, காலத்தினை வீணடித்துவிட்டு விரட்டியடிக்கும் கலாச்சாரத்தினை விட்டொழியுங்கள்.

இதைப்போல் அனைத்து நிறுவனங்களும் அலுவலகங்களும் தங்களுக்குத் தேவையான நபர்களுக்கு தானே படிப்பும் பயிற்சியும் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றுக் கூறிவிட்டாலே அவசியமற்ற கல்லூரி படிப்பு செலவு மக்களுக்கு மிச்சமாகும்.

கம்பெனிகளே தங்களது ஊழியர்களுக்கு இலவச மேற்படிப்பு உதவிகளைச் செய்து வேலைக்கு வைத்துக் கொள்ளும் கலாச்சாரம் இப்பொழுதும் இருக்கிறது.

ஆகையால், பட்டப்படிப்பு தேவையா என்று யோசனை செய்து படியுங்கள்... பெயருக்கு பின்னால் எழுதுவதற்காக பணத்தினையும் காலத்தினையும் வீணடிக்காதீர்கள்.

நேரடியாக வேலைப் பயிற்சியில் காலத்தினை செலவிட்டு மகிழ்ச்சியான வாழ்விற்கு வித்திடுங்கள்.

அனைவருக்கும் வேலை என்பது, அவரவர் பணியினை அவரவர் செய்து கொள்ளுதல் என்பதில் மட்டுமே சாத்தியம். அதில் விவசாயமும் அடங்கும்.

ஆகையால் அரசானது, நீர் ஆதாரத்தினை வலுப்படுத்த வேண்டும்... ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான நிலம் சாத்தியப்பட எல்லையை விரித்து பாதுகாக்க வேண்டும்.

ஓர் மனிதனுக்கு தேவையான நீரும் இல்லை, நிலப்பரப்பும் இல்லை.. இவங்க படிப்ப சீர்படுத்தப்போறாங்களாம், வேலை கொடுக்கப்போறாங்களாம்??? போங்கடா போக்கத்தப் பயங்கலா!!!
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: புதிய கல்வி கொள்கை - நிறைந்த வேலை வாய்ப்பு

Post by vk90923 » Thu Mar 02, 2017 12:13 pm

ஆதி சார் வணக்கம் உங்கள் பதிவு மிக சரியானது ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியமில்லையே இது இளைஞர்கள்,படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் மாற்றம் கொண்டு வரலாம் அன்னிய கலாச்சாரத்தினால்
வந்தது மாற்றம் ஒன்று இருக்கும் என்றால் அது என்றும் மாறி கொண்டே தான் இருக்கும்
Post Reply

Return to “படுகை ஓரம்”