Page 1 of 1

one china policy

Posted: Sat Feb 11, 2017 6:57 pm
by ஆதித்தன்
ட்ரம்ப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நிகழ்வுகளைக் காட்டி, தனது பெயரை மீடியா முழுவதும் பரவ விடுவதன் மூலம், அமெரிக்க அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரது மனதில் பதிந்துவிடும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ட்ராவல் தடைச் சட்டத்தினை கொண்டுவந்து உலகம் முழுக்க பேசப்பட்டார்... சில நாட்களில் நீதிமன்ற தடைக்கு அந்த புதிய சட்டம் சென்றுள்ளது..

அடுத்தக்கட்டமாக வரிச் சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக அமெரிக்க தொழில் அதிபர்களுக்கு மகிழ்வினைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், உலகளவிலான திறந்த வர்த்தகத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.

அடுத்து, ஒன் சைனா என்ற கோஷத்தினை ட்ரம்ப் எழுப்பியுள்ளது, உண்மையில் இவர் சைனாவுக்கு சப்போர்ட்டாகத்தான் பேசுறாரா? என்பது தெரியாமல் சந்தேகப் பார்வையை உயர்த்துகிறது சீனா.

ரிபப்ளிக் ஆப் சைனை என்றப் பெயரில் தைவானும், பிபில்ஸ் ரிபப்ளிக் ஆப் சைனா என்ற பெயரில் சீனாவும் இரண்டாக பிரிந்து இருப்பது தெரிந்தது.

கடந்த ஒபாமா காலத்திலேயே ஒன் சைனா என்ற கோசத்திற்கு ஆதரவினை சீனா கேட்டிருந்தது. இப்போ ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக வர்த்தக நிலைப்பாடுகள் எடுப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இவ்வாறான ஒன் சைனா கோசம் குழப்புகிறது.

இதனை ஒர் வெற்றியாக கருதும் சீனா, அடுத்து ட்ரம்ப் எடுக்க இருக்கும் வர்த்தக முடிவுகளும் தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.