Page 1 of 1

அரசின் அநாகரீகச் செயல் - தொடரும் போராட்டம்

Posted: Sun Jan 22, 2017 11:08 am
by ஆதித்தன்
அநாகரீக செயலுக்கு திட்டமிடும் அரசு... அலங்காநல்லூரில் நிரந்தர தீர்வுடன் ஜல்லிக்கட்டு நடக்க சட்டம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ஒர் நல்ல முன் உதாரணமாக செயல்படும், தமிழ் மாணவர்களை உதாசினப்படுத்திவிட்டு, அரசியல்வாதிகள் தங்களது கீழ்த்தரமான செயலை மீண்டும் அவசர சட்டம் என்றப் போர்வையில் நீதிமன்றம் தலையிட முடியாத விடுமுறை நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்தி, மக்களை ஏமாற்றம் செய்ய விரும்புகிறது.

ஜல்லிக்கட்டில் மாடுகளை துன்புறுத்துதல் கூடாது என்று விதிமுறை விதிப்பதும் தவறு, மாடுபிடி நபர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்று விதிமுறை விதிப்பதும் தவறு.

ஏனெனில் இது வீர விளையாட்டு, இராணுவ வீரர்களுக்கு இணையான விளையாட்டு.

இராணுவத்தில் இணைந்தால் உயிர் தியாகத்திற்கும், உடல் உறுப்பு இழப்பு தியாகத்திற்கும் எப்படி வீரன் தயாராக இருக்கிறானோ, அப்படியே இங்கும் மாடிபிடி வீரர்கள் தங்களை அர்ப்பணிக்கும் வீரத்துடனே களம் இறங்குகிறார்கள்.

மாடுகளை துன்புறுத்தக்கூடாது என்று கூறுபவர்கள், மருத்துவக்கூடத்தில் பரிசோதனையில் உயிர்களை வைதப்பது இல்லையா?.. இறைச்சி தோல் தேவை என்று மாடுகளை கொடூரமாக வெட்டிக் கொள்வது இல்லையா?.. இப்படி எல்லா காரியங்களையும் தினம் தினம் செய்துவிட்டு, ஆண்டுக்கு ஒர்முறை தமிழன் தன் வீரத்தினை தக்கவைத்துக் கொள்ள விளையாடும் ஜல்லிக்கட்டில் மட்டும் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்பது திட்டமிட்டச் சதி.

இவர்கள் கூறிக் கொண்டிருக்கும் காளை துன்புறுத்தல் ... வீரர் உயிர்க்கு ஆபத்து என்ற அர்த்தமற்ற கட்டுப்பாடு இல்லா சட்டம் ஜல்லிக்கட்டுக்கு வேண்டும்.

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு வேண்டும் என்றால், இராணுவ வீரர் உயிர்க்கான ஆபத்தினை கூறி கையெழுத்து வாங்குவது போல, இங்கும் மாடிபிடி வீரர்க்கான ஆபத்தினை கூறி கையெழுத்து வாங்கிவிட்டு களம் இறக்கிவிடலாம்.

மாடுகளுக்கு பாதுகாப்பு என்று கூறி ஏமாற்றுது மிகப்பெரிய சதி.

பீட்டா என்ற அமைப்பு விலங்குகளை காப்பாத்தி பாராமரிப்பது கிடையவே கிடையாது. மாறாக கொண்டு சென்று கொல்கிறது.

பீட்டாவை விட தமிழர்கள் தங்கள் காளைகளை நன்றாகவே பராமரித்து, இயல்பான அதன் வம்சத்தினை விரித்தி செய்கின்றனர்.

கண்டிப்பாக பீட்டாவுக்கு தடை அளித்து, அதுபோன்ற அர்த்தமற்ற கூட்டமைப்பினை அரசு கலைக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு விளாயாட்டு இயல்பாக கிராம கலாச்சாரப்படி தொடர்ந்து நடக்க நிரந்தர சட்டத்தினை இயற்ற வேண்டும்.

போராட்டத்திற்கு எப்பொழுதும் குதிக்க முடியாது.

போராட்டத்தில் இறங்கிவிட்டால், நிரந்தர தீர்வுடன் மட்டுமே முடித்தல் வேண்டும்.

எவரும் தமிழரை அவரது விருப்பு இல்லாது என்றும் ஆள முடியாது என்பதனை எ

Re: அரசின் அநாகரீகச் செயல் - தொடரும் போராட்டம்

Posted: Sun Jan 22, 2017 6:44 pm
by vk90923
ஆதி சார் வணக்கம், இங்கும் வணிகம் தான் நடக்கிறது

Re: அரசின் அநாகரீகச் செயல் - தொடரும் போராட்டம்

Posted: Mon Jan 23, 2017 5:41 am
by ஆதித்தன்
ஜல்லிக்கட்டை தடை செய்வதில் மிகப் பெரிய வணிக நோக்கம் உள்ளது உண்மை.

தற்பொழுது, போராட்டத்தினை கலைப்பதிலும் மிகப்பெரிய அரசியல் செய்கிறார்கள் மீடியாக்காரர்களும் அரசியல்வாதிகளும்.

தவறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, குழப்பம் ஏற்படுத்து நாளிதழ்களை தடை செய்துவிட்டாலே, மக்கள் சரியான செய்திகளை இணையத்தில் நாலு பக்கம் பார்த்து தெளிவு பெற்றுக் கொள்வார்கள்.

டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டிலும் எளிது, டிஜிட்டல் நியூஸ்.