Page 1 of 1

அரசே, ஆயில் இல்லை - அப்புறம் ஏன் ஆயில் வாகனம்?

Posted: Fri Jan 20, 2017 9:26 pm
by ஆதித்தன்
ஆயில் விலை உயர்வுக்கு தோதுவாக உற்பத்திக் குறைப்பை அரபு நாடுகள் எடுக்க ஆரம்பித்துவிட்டது என்பதோடு, வெளிநாட்டினரை வேலையிலிருந்து நீக்கி வெளியேற்றும் செயல்பாட்டினையும் அமுக்கமாகச் செய்து கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, 100 பேரல் உற்பத்தி செய்து 1000 என்று விற்பதற்குப் பதில், 50 பேரல் உற்பத்தி செய்தும் அதே 1000 என்ற விலையில் விற்று கூடுதல் இலாபத்தினை இரண்டு வருடத்திற்கு சம்பாதிக்கலாம் என்று ஆயில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் முடிவெடுத்துவிட்டன.


சப்ளே அண்ட் டிமாண்ட் என்ற விதி தங்கள் கைக்குள் இருப்பதாக முழுமையாக முடிவெடுத்தே இந்த காரியத்தினை செய்ய முன் வந்திருக்கிறார்கள்.


சப்ளே குறையும் பொழுது டிமாண்ட் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் வாகனங்களை கடந்த இரண்டு ஆண்டில் பெரிய அளவில் கடன் உதவி செய்து மக்கள் கையில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆயில் விலை ஏற்றம் என்பது மக்கள் உழைப்பினைச் சுரண்டும் மிகப் பெரிய ஏமாற்று வேலை என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.


போதிய அளவில் ஆயில் இல்லை என்றால், ஆயிலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும், ஆனால் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை. ஏதோ உற்பத்தி பண்றான் விற்கிறான்.. மக்கள் வாங்குகிறார்கள்.. என்று பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து ஆயில் தேவைப்பாடு அதிகரிப்பதனை கண்டு கொள்ளாமல் விட்டது நாட்டின் வளர்ச்சியினை மறைமுகமாக பாதிக்கிறது என்பது தெரியாமல், அன்றைய நேரத்தில் இருக்கும் சூப்பர் வேகத்தினைப் பார்த்து ஏமாறும் இந்த அரசியல் ஏமாளிகளை என்னவென்று சொல்வது? அதிலும் குறிப்பாக, வங்கிகளே பெருமளவில் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு காரணமாக அமைந்து கொண்டிருக்கும் வேலையில், ஏமாந்த வங்கிக் கணக்காளர்களைப் பெருமைப்படுத்தி பேசி, வங்கிக் கணக்கு இல்லா புத்திசாலிகளையும் ஏமாற்றி, நீங்களும் வங்கிக் கணக்கு ஒபன் செய்து பையில் ஒர் கார்டு வைச்சிக்கோங்க... நீங்களும் உங்கள் உழைப்பை சம்பந்தமே இல்லாதவன் சுரண்டவிடும் எங்களைப்போன்ற படிச்ச முட்டாள் மத்தியில் சேர்ந்துக்கோங்க என்று சொல்லாமல் சொல்லி அரசியல் நடக்கும் இந்த நாட்டில், இயற்கையான மகிழ்ச்சி வாழ்வு என்பது பனிப்போர் மூலமே கிடைக்கும்.


நேற்று பெட்ரோல் வாகனங்களின் உதவியால் வேகமாக உழைத்து நிறைய சம்பாதிக்க கொடுத்தார்கள், இன்று பெட்ரோல் விலையினை ஏற்றி, கொடுத்த பணத்தினை எல்லாம் திரும்ப வாங்கிக்க போறாங்க!!! அதுவும் திட்டமிட்டு ஆயில் உற்பத்தியினை வேண்டுமென்றே குறைத்து, பயன்பாட்டு தட்டுப்பாட்டினை உருவாக்குவதன் மூலம், போட்டிப்போட்டு அதிக விலை கொடுத்தாவது இருப்பதனை அடுத்தவர்க்கு முன் வாங்கிவிடுவோம் என்று வாங்கும் சூழலுக்கு கொண்டுவர இருக்கிறார்கள்.


ஜல்லிக்கட்டு எதிராக சிறந்த ஒர் போராட்டத்தினை உருவாக்கிய இளைய சமுதாயம், இழந்த இயற்கை வாழ்வினை மீட்டெடுக்கவும், ஏமாற்றிக் கொழுத்து நிற்கும் ஆதிக்க சக்திகளை கீழே தள்ளவும் அமைதியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மிகப் பெரிய பனிப்போர்க்கு தயாராகுவார்கள் என்பதனை உறுதியாக நம்புகிறேன்.


பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏற ஆரம்பிக்கும் பொழுதே, உலக அரசியல் எல்லோர்க்கும் புரிய ஆரம்பிப்பதுடன், பணம் என்று ஏமாற்றப்பட்டதனை உணர்ந்து உலக மக்களின் 99% நபர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்து கிடக்கும் 1% நபர்க்கு எதிரான பனிப்போர் தாக்குதலுக்கு மக்கள் பெரிதும் உதவுவார்கள் என நம்பலாம்.


ஜல்லிக்கட்டுக்காக 4 நாட்கள் போராட்டத்தினை முன்னெடுத்து நடத்திய இளைஞர்கள், அடுத்தக்கட்டமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்படப்போகும் மக்கள் துன்பத்தினைப் போக்க, பெட்ரோல் பயன்பாட்டினைக் குறைத்து, குறைவான சப்ளையையும் நிறைவாக ஏற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்க இப்பொழுதே, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


வாழ்த்துகள்..