Page 1 of 1

2017-ல் பெட்ரோல் விலை ரூ.142 ஆகும்

Posted: Wed Jan 18, 2017 8:04 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=whHXKAamoYM[/youtube]

2017-இல் பெட்ரோல் விலை ரூ.142-ஐ எட்டும் என்பதனை உறுதிப்படுத்திய உலக அரசியல்.

உலக அரசியல் ஆதிக்கச் சக்திகள் தங்கள் ஆடம்பர உயர் வாழ்வுக்கு மக்கள் உழைப்பையே பணம் என்றப் போர்வையில் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.

வளர்ந்த நாடுகள் என்றுச் சொல்லப்படுகின்ற ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே வங்கிகளால் மக்கள் பணம் சுரண்டப்பட்டு, தற்பொழுது அனைவரும் பெரும் கடனாளிகள் ஆகியுள்ளனர். மக்களை கடனாளி ஆக்கிவிட்ட கேவலத்தினைக்கூட ரொம்ப டீசண்டாக பாக்கெட்டில் கிரிடிட் கார்டு வைத்திருக்கிறார்கள் என்று கூறும் நவ நாகரீகம், மக்கள் மனதை மாற்றி தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

ஐரோப்பிய நாட்டு வங்கிகள் பல ஐரோப்பிய யூனியனிடம் கடன் வாங்கியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாட்டு மக்களும் வங்கிக்கடனாளிகளாக இருக்கிறார்கள் என்று நாம் அறியாமல், அவர்கள் உயர்ந்துவிட்டார்கள் என்று கற்பனை பூட்டப்பட்டுள்ளது.

வளமான ஐரோப்பாவுடன் சேர்ந்திருந்த இங்கிலாந்து மிக விவரமாகவே, இனியும் இவர்களோடு இருந்தால் தனது வளர்ச்சி பாதிக்கப்படும் என அறிந்தே ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறிவிட்டது.

ஐரோப்பிய நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி முடித்த பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் தற்பொழுது குறிவைத்திருப்பது இந்தியா.

ஏற்கனவே இந்தியாவுக்குள் கார்ப்ரேட் நிறுவனங்கள் உள்புகுந்து நாட்டின் வளத்தினை சுரண்டி கொண்டிருப்பதால், தற்பொழுது டாலர், பவுண்ட் மற்றும் இரோவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பெரிய அளவில் சரித்துவிட்டார்கள் என்றாலும் குறையாத நம் நாட்டின் வளத்தினை முழுமையாக சுரண்ட போடப்பட்ட வலையின் வழியாக வாரிவிட முடிவெடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக வங்கிப் பரிவர்த்தனையை அதிகப்படுத்த பணத்தடை நிர்பந்தித்து செய்ய வைத்திருக்கலாம். அடுத்தக்கட்டமாக ஆயில் விலை ஏற்றத்தின் மூலமாக பெரிய அளவில் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். இவை இரண்டுமே முன்னரே திட்டமிடப்பட்ட செயல் என்பதனை கடந்தகால செயல்பாட்டின் மூலம் அறிய, எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, எல்லோருக்கும் டெபிட்கார்டு என்று வழங்கியது பணத்தடைக்கு என்றால், மக்களிடமிருந்து நேரடியாக பணத்தினை வசூல் செய்ய பெட்ரோல் விலை ஏற்றத்தினை உறுதிப்படுத்தவும், இதற்கு தடையாக இருந்த பெட்ரோல் விலை நிர்ணயக்கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருந்தமையால் நாடாளுமன்றத்தில் அவ்வப்பொழுது விலை ஏற்றுவது சிரமமாக இருந்ததால், ஆயில் நிறுவனங்களே பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என 4 ஆண்டுகளுக்கு முன்னரே அனுமதி கொடுத்துவிட்டார்கள். பின், டிசல் விலை நிர்ணயமும் ஆயில் நிறுவனத்தின் வசமே கொடுக்கப்பட்டுவிட்டது.

பங்குச் சந்தை பற்றி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், இல்லாவிட்டாலும் தெரிந்து கொள்ளுங்கள் அதுமூலமாகவே கார்ப்ரேட் கம்பெனிகள் பெரிய அளவில் வருவாய் பார்க்கின்றன.

சர்வதேச சந்தையில் க்ரூடு ஆயில் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சராசரியாக ஒர் பேரல் 100 டாலர் என்ற ரீதியில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது. அதனை, கார்ப்ரேட் நிறுவனங்கள் இணைந்து, 25 டாலராக கடந்த ஆண்டில் சரித்து பெரிய அளவில் விற்று இலாபம் பார்த்தார்கள்.

தற்பொழுது விலையை ஏற்றி சம்பாதிக்க இருக்கிறார்கள். அதற்குத் தோதுவாகவே இந்திய ஆயில் சந்தையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் திட்டமிட்டு கொண்டுவந்ததோடு, பெட்ரோல் விலையை ரூ.142-க்கு உயர்த்தப் போகிறார்கள்.

சர்வதேச சந்தையில் க்ரூடு ஆயில் விலை தற்பொழுது 52 டாலராக வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனை 100 டாலராக உயர்த்துவதற்காக தினசரி உற்பத்தியில் 1.8 மில்லியன் பேரல் குறைக்க ஆயில் ஏற்றுமதி கூட்டமைப்பு முடிவெடித்துள்ளது. அரபு நாடுகளும் தங்களது ஆயில் உற்பத்தியினை குறைக்க நிர்பந்திக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்காக பல்வேறு வழிகளை உலக அரசியல் ஆதிக்கச் சக்திகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் இந்திய மக்கள் மீது சுமையை ஏற்றி, பணத்தினை சம்பாதிக்க திட்டுமிட்டுள்ளனர் என்பதே தற்போதைய திட்டம்.

நேற்றுகூட மத்திய அரசு ஒர் செய்தியினை வெளியிட்டது, அதாவது இனி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அரசு மானியம் வழங்காது என திட்டவட்டமாக கூறியது. இதன் மூலம் அரசுக்கு வரிகட்ட கூட வருவாய் இல்லா பொதுமக்களும் விலை ஏற்றத்தால் மேலும் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
2015 -இல் சர்வதேச சந்தையில் ஆயில் விலை ஒர் பேரல் 100 டாலராக இருந்த பொழுது பெட்ரோல் விலை 65 ரூபாயாக இருந்தது.. 2016-இல் 35 டாலாரக இருக்கும் பொழுதும் 65 தான் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், அரசு ஆயில் விலை நிர்ணயித்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துவிட்டதோடு, மானியத்தினையும் விலக்கிவிட்டது. அதே நேரத்தில் வரியினை கூட்டியிருக்கிறது.

2017 ஆம் ஆண்டான தற்பொழுது க்ரூடு ஆயில் சந்தை விலை 53 டாலர். ஊர்ல பெட்ரோல் விலை 70 ரூபாய் ஒர் லிட்டர்.

ஒர் சில மாதங்களில் ஆயில் விலையினை 100 டாலராக மாற்ற சர்வேதச எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்து, அதற்காக உற்பத்தியினை குறைக்க ஆரம்பித்துவிட்டதனால், இந்த ஆண்டு பெட்ரோல் விலை ரூ.142 ஆகும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

பெட்ரோல் விலை உயர்வு, டிசல் விலை உயர்வு என ஆயில் விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விர்னு ஏறும்.

நவீன வளர்ச்சி என்று கூறி பணம் பணம் என்று ஓடியதனால், உலக ஆதிக்கச் சக்திகள் நம்மை முழுமையான அடிமையாக்கிவிட்டார்கள். இதன் விளைவே நாம் பெட்ரோலுக்கு அடிமைப்பட்டு சொல்லும் விலைக்கு வாங்கும் அளவில் அரசினையும் கைப்பாவை ஆக்கிவிட்டார்கள்.

அன்றும் அரசு கொடுத்த மானியம் என்பது நம் இந்திய மக்கள் பணம் தான், இலாவகமாக அரசு மானியம் என்று குறைந்த விலையில் ஏழை மக்களிடமும் கொடுத்து, இன்று நம்மை அதற்கு அடிமைப்படுத்துவிட்டார்கள்.

வீட்டு உபயோக கேஸ் பயன்பாட்டினையும் அரசு மானியம் என்றுக் கூறி, நம் பணத்தினையே அரசிடமிருந்து வாங்கிவிட்டுத்தான் கார்ப்ரேட் நிறுவனங்கள் நமக்கு இலவசமாக கொடுத்து அறிமுகம் செய்தன... நாளை இதற்கும் மானியம் கொடுக்க அரசிடம் பணமில்லை நீங்களே நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று சிலிண்டர் விலை 1500-க்கு செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.

2017 ஆம் ஆண்டு என்பது மிகப் பெரிய விழிப்புணர்வை பணம என்பதனைப் பற்றி மக்களிடம் உருவாகும் என நம்புகிறேன்.

மக்கள் பணப்பேயை புரிந்து கொண்டால், தேவை வேலை இல்லை... பணம் இல்லை. வயிற்றுக்கு உணவு. உணவுக்கு உழைப்பினை மண்ணில் கொடுக்க வேண்டுமே தவிர, கார்ப்ரேட் முதலாளிகளுக்கு அல்ல.

விழித்தெழுங்கள்.. பணப்பேயை விரட்டியடியுங்கள்

இயற்கையை நம்புங்கள், பூதங்களை மரியாதை செய்யுங்கள், மகிழ்வான ஆனந்த வாழ்விற்கு விவசாயத்தினை நம்பி அடித்தளம் அமையுங்கள்.