Page 1 of 1

தமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை

Posted: Thu Jan 12, 2017 11:42 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=QHDYFkXG5C0[/youtube]

#இந்தியா மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்த #சீனா தயாராகி வருவதாகவும், அதற்கு உறுதுணையாக இலங்கையும் தமிழகத்தின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உலக அரசியல் வட்டாரத்தில் சூழ்ச்சி வளையம் பின்னப்பட்டுள்ளது.

இந்தியா - தமிழ் நாடு உறவில் எப்பொழுதுமே ஒர் இடைவெளியை மக்கள் மாநில கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் காட்டிவருகின்றனர். தமிழகம் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், இதைப்போல் மற்ற சில மாநில அரசுகளும் மத்திய அரசு திட்டங்களுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை.

உலக நாடுகளை நிர்வகிக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கு, மத்திய அரசின் நிர்வாகத்திலிருந்து இவ்வாறு பிளவுபட்டு நிற்கும் மாநில அரசுகளை தன்வழிப்படி நடத்த முடியவில்லை.

ஆகையால் இந்தியாவினை துண்டித்து நிர்வாக அமைப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் - சீனா - இலங்கை ஆகிய நான்கு நாடுகளுக்குள் சண்டையை உருவாக்கி, இந்தியாவினை துண்டாடடிக்கூடிய அபாயம் தற்பொழுது உள்ளது.

தமிழகத்தினை இலங்கை இராணுவத்தின் கைக்குள் வசப்படுத்தவே, எல்லைதாண்டிய தாக்குதல்களை நடத்தி அவ்வப்பொழுது தமிழக கடல் எல்லையை இலங்கை சீண்டி வருவதாகவும், இதற்கு உலக வல்லரசு நாடு ஆதரவளித்து வருவதால்தான் இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும் நினைக்கத் தோன்றுகிறது.

மக்கள் வலுவாக இருந்தால் எந்தவொரு இராணுவமும் நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது ஏனெனில் கையில் இருக்கும் ஆயுதம் காலி ஆகும் பொழுது, மக்கள் கிளர்ச்சி உதயமாகிவிடும்.

ஆனால் திட்டமிடப்பட்ட சதியால் மக்கள் வீர விளையாட்டுகள் தடை செய்யப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வருவதால் நாளை கிளர்ச்சி செய்யக்கூட மக்கள் உருவாகமாட்டார்கள் என்பதே வல்லரசின் திட்டமாக இருக்கலாம்.

சல்லிக்கட்டு நடக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் சிலம்பம் விளையாட்டுகள் மருவி வருவதனையும் கவனத்தில் கொண்டு ஊக்குவித்தல், நாளைய தமிழகத்தினை வலுவாக காக்க உதவும்.